காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் இடையே திருமணமான சிறிது நாட்களிலேயே அடிக்கடி தகராறு நடந்தது.
காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், விகாரா பாத், அல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் கவுட் (வயது 27). தாம் துளின் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (26). இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒன்றாக படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். நரேந்தர் கவுட் எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே திருமணமான சிறிது நாட்களிலேயே அடிக்கடி தகராறு நடந்தது.

இதனால் கணவனை பிரிந்த அம்பிகா லிங்கம் பள்ளியில் தனியாக தனது மகளுடன் வசித்து வந்தார். அங்குள்ள பல் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். நரேந்திர கவுட் மியாபுரில் உள்ள மதுக்கடையில் வேலை செய்தார். அம்பிகா வேலை பார்க்கும் பல் மருத்துவமனைக்கு வந்து நரேந்திர கவுட் தன்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அம்பிகா விகாராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அம்பிகா வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். 11 மணி அளவில் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த நரேந்திர் கவுட் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வரவேண்டும் என மனைவியை வற்புறுத்தினார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நரேந்தர் கவுட் அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்பிகாவின் கழுத்தில் குத்தினார்.

அம்பிகாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனைக் கண்ட அவர்களது 5 வயது மகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அம்பிகா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நரேந்திர கவுட் அங்கிருந்து தப்பி ஓடினார் பொதுமக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்பிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திர கவுட்டை கைது செய்தனர்.

5 வயது மகளின் கண்ணெதிரிலேயே மனைவியை கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு கணவரும் சிறைக்குச் சென்றதால் அவர்களது மகள் ஆதரவு இன்றி அனாதையாக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com