என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering student dead"

    • நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரது நண்பர்கள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர்.
    • வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. நண்பர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை.

    திருப்பதி:

    நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தார். இது யாருக்கும் தெரியாது. அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார்.

    வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர்.

    அந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது கதவை மூடி உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

    நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரது நண்பர்கள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர். வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. அவர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிக் கிடந்தார். மாணவியின் பக்கத்தில் 6 மாத சிசு ஒன்று கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவரும், சிசுவும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விவரங்களை சேகரித்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    அப்போது ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினார்.

    அந்த இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது அவர் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் மூலம் மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி யூடியூப் பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரிக்குச் சென்ற மாணவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார்.
    • அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.

    திருவான்மியூர்:

    ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் தீராஜ் ரெட்டி(வயது20). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.சி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் சோழிங்கநல்லூர், எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரிக்குச் சென்ற அவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை நண்பர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாந்தியும், உடல் நிலையில் சோர்வும் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீராஜ் ரெட்டியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் தீராஜ் ரெட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் தீராஜ் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கல்லூரி உணவகத்தில் வழங்கப்பட்ட கோழிக்கறி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×