என் மலர்
நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவர் மரணம்"
- திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர் சத்யசாய் இறந்தது தொடர்பாக ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போரூர்:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (வயது21). பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இவரது பெண் தோழி ஒருவரின் சகோதரிக்கு கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இதில் சத்யசாய் ரெட்டி தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். அப்போது சத்யசாய் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு நடந்த இசை கச்சேரியின் பாடலுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினர். சத்ய சாய் நடனமாடிக்கொண்டு இருந்த போது திடீரென அவர் சுருண்டு தரையில் விழுந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு காதில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதனை கண்டு திருமண மண்டபத்தில் இருந்த அவரது நண்பர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சத்யசாயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யசாய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அவரது நண்பர்கள் கதறி துடித்தனர். சத்யசாய் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடியபோது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்யசாய் உடல் பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மாணவர் சத்யசாய் இறந்தது தொடர்பாக ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கல்லூரிக்குச் சென்ற மாணவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார்.
- அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.
திருவான்மியூர்:
ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் தீராஜ் ரெட்டி(வயது20). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.சி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் சோழிங்கநல்லூர், எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்குச் சென்ற அவர் வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். அப்போது அவர் கோழிக்கறி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் தீராஜ் ரெட்டிக்கு வாந்தி ஏற்பட்டது.
உடனடியாக அவரை நண்பர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாந்தியும், உடல் நிலையில் சோர்வும் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீராஜ் ரெட்டியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் தீராஜ் ரெட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் தீராஜ் ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கல்லூரி உணவகத்தில் வழங்கப்பட்ட கோழிக்கறி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






