search icon
என் மலர்tooltip icon

  ஐஸ்லாந்து

  • ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன.
  • அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

  ரெய்காவிக்:

  ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

  இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். இதன் சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு என ஐஸ்லாந்து அழைக்கப்படுகிறது
  • தொலைக்காட்சியில், 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை கண்டு மக்கள் அதிர்ந்தனர்

  வட ஐரோப்பாவில் உள்ள தீவு நாடு, ஐஸ்லாந்து. இதன் தலைநகரம் ரெக்ஜெவிக் (Reykjavik).

  பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு (Land of fire and ice) எனவும் ஐஸ்லாந்து அழைக்கப்படுவதுண்டு.

  ஐஸ்லாந்து நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையில், எரிமலைகளிலிருந்து "லாவா" (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு ஊரை சுத்தப்படுத்தி மீண்டும் குடியேறுவதும் வழக்கமான ஒன்று.

  சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் (Grindavik) பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.


  இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

  இம்முறை க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  நகரின் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்தும் லாவா வெளியேறியது.

  க்ரிண்டாவிக் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வார்ட்ஸெங்கி புவிவெப்ப மின் நிலையத்திற்கு (geothermal power plant) உள்ளே லாவா செல்வதை தடுக்கும் வகையில், அதற்கு வெளியே அரசு, தடுப்புகள் அமைத்துள்ளது.

  இந்நகரின் 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  இயற்கையின் சீற்றத்தால் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் குடிபுக முடியாத நிலையில் உள்ள மக்களில் பலருக்கு வீடுகளின் பேரில் வங்கி கடன் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ எனும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

  • சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியது.
  • இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்தின் உயரிய விருதான லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டது.

  ஹுசாவிக்:

  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

  இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி இந்திய மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தது. இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

  இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கவுரவித்துள்ளது.

  இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது. இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்தார்.

  • கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்தது.
  • தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது

  ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.

  தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

  சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது.

  ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவானது.

  இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது.

  நிலநடுக்கம் எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மக்கள் தொகையில் 4 லட்சம் பேர் மட்டுமே கொண்டது ஐஸ்லேண்டு
  • அனைத்து பணிகளும் வேலைநிறுத்தத்தால் முடங்கி போனது

  வட அட்லான்டிக் பகுதியில் உள்ள வட ஐரோப்பிய நாடு, ஐஸ்லேண்டு (Iceland). இதன் தலைநகர் ரெக்ஜேவிக் (Reykjavik). "லேண்ட் ஆஃப் ஃபையர் அண்ட் ஐஸ்" (land of fire and ice) என அழைக்கப்படும் இந்நாடு, சுமார் 4 லட்சம் பேரை கொண்ட தனித்தீவு நாடாகும்.

  எரிமலை, பனிப்பாறைகள் என இயற்கை அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஐஸ்லேண்டில் ஆண்கள் பெறும் ஊதியத்தை விட 21 சதவீதம் குறைவாகவே பெண்கள் ஊதியம் பெறுகின்றனர். சுகாதார பணிகள், தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் பெண்களுக்கு ஊதியம் இன்னும் குறைவாக உள்ளது. 1975லிருந்து இது குறித்து 7 முறை போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

  இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் பெண்கள் அமைப்பினர் மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று, இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார்ஹால் (Arnarholl) மலை மற்றும் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இப்போராட்டத்தின் விளைவாக பெண்கள் ஈடுபட்டு வந்த பள்ளிக்கூடங்கள், கடைகள், வங்கிகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் அந்நாட்டில் ஸ்தம்பித்து விட்டன.

  இப்போராட்டத்திற்கு அந்நாட்டின் பெண் பிரதமர் கேத்ரின் ஜேகப்ஸ்டாட்டிர் (Katrin Jakobsdottir) ஆதரவு தெரிவித்து, பணிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • எரிமலை வெடிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
  • கடந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை எரிமலை வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது

  ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.

  1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

  இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் கருதப்படுகிறது. இருந்தாலும் விமானம் பறப்பதற்கு ஆரஞ்சு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

  இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

  வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருநது 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டானது.

  இந்த நில அதிர்வுகள் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

  ×