என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
    இன்று ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மருத்துவச் சிகிச்சைகளும், பிரசவ முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த உடல் நிலையில் இருக்கின்றாள் மற்றும் அவள் குழந்தை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப் படுகின்றது.

    ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரசவ முறையிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் இருக்கின்றன. அதனால், முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    வீட்டில் நடக்கும் இயற்கை பிரசவம் (Natural Birth)

    இந்த முறை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்த முறை நிதானமாக, ஒரு சிலரின் உதவியோடு, எந்த குறுக்கீடுகள் மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் நடக்கும்.  இந்த முறையைத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிப் பெண், மூத்தவர்களிடம் அல்லது மருத்துவரிடம் இதைப் பற்றிப் பல விசயங்களைத் தெரிந்து கொண்டு, எப்படி பிரசவ நேரத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று தயாராக இருப்பாள். இந்த முறையில், கர்ப்பிணிப் பெண் எப்படி மூச்சுப் பயிற்சி செய்வது,எப்படி தன் மனம் மற்றும் உடலை அமைதியாக வைத்துக் கொள்வது, பல வகை பிரசவ நிலைகளைத் தானாகவே எப்படி சமாளிப்பது, எப்படி தன்னம்பிக்கையோடு இருப்பது என்று  பல விசயங்களை அறிந்து வைத்திருப்பாள். இன்றும் இந்த பிரசவ முறை பல வளர்ந்த நாடுகளில் அதிகம் வழக்கத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 2%க்கு மேல் மக்கள் இந்த வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரசவத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இது ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான பிரசவம் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

    இதனால் சுகப் பிரசவம் ஏற்படுவதோடு, தாய் சேய், ஆகிய இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். மேலும் இந்த முறையில் எந்த மருந்துகளும் தேவை இல்லை. இருப்பினும் இந்த முறை பிரசவம் சிறிது பாதுகாப்பு அற்றதுதான்.காரணம் எதாவது எதிர்பாராத சிக்கல் ஏற்படும் போது மருத்துவர் அருகில் இருக்க மாட்டார். ஆக மருத்துவர்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதே சிறந்தது என்று எச்சரிக்கின்றனர்.

    சுகப் பிரசவம் (Vaginal Delivery)


    சுகப்பிரசவ முறைத் தாய் சேய் இருவரும் எந்த மருந்துகளின் உதவி இன்றி நலமுடன் இருக்க உதவும். இந்த பிரசவத்தால் குழந்தை விரைவாக இயல்பான நிலைக்குப் பிரசவத்திற்குப் பின் வந்து விடுகின்றது. சில நிமிடங்கள் என்றும் கூறலாம். இந்த முறை பிரசவத்தால் தாயும் விரைவாகக் குணமடைந்து இயல்பான நிலைக்கு ஒரு சில நாட்களிலேயே வந்து விடுகின்றாள். இதனால் தேவை இல்லாமல் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழல் தவிர்க்கப் படுகின்றது. இந்த சுகப் பிரசவத்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் பெரிய அளவு குறைக்கப்படுகின்றது.



    லமேஸ் முறை (Lamaze Method)

    இந்த முறையின் பெரிய குறிக்கோளே கர்ப்பிணிப் பெண்களுக்கு போதிய தன்னம்பிக்கையை வழங்குதல் மற்றும் வலி தாங்கும் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பதே.இந்த முறை பிரசவ நேரத்தில் கர்ப்பிணிப் பெண் அதிக சௌகரியத்தோடு இருக்க உதவுகின்றது.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வதால் அதிகம் அமைதியான மன நிலைக்கு வருகின்றனர். இதனால் பிரசவ வலி பெரிதும் குறைகின்றது. மேலும் இந்த முறையில் மருந்துகள் ஊக்கவிக்கப் படுவதில்லை. எனினும் பெண்களுக்கு இதனைப் பற்றின தகவல்கள் மற்றும் பிரசவ நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி முறைகளும், மருத்துவரால் முன்பே கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலமாகப் பிரசவ சூழலுக்கு ஏற்றவாறு ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு தயார்ப் படுத்தப்படுகின்றாள்.

    பிராட்லி முறை (Bradley Method)

    இந்த முறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எப்படி பிரசவத்திற்குத் தயார்ப்படுத்துவது என்பதைப் பற்றிக் கூறும். எந்த மருந்தும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் அந்த பெண் தனக்குத் தானே பிரசவம் செய்து கொள்ள சுமார் 12 வாரங்களுக்கு முன்பே கற்பிக்கப் படுகின்றாள். மேலும் இந்த முறையில் அவள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் பாேதிய அறிவைப் பெறுகின்றாள்.

    தண்ணீர் பிரசவம் (Water Birth)

    இந்த முறையில் சில அல்லது அனைத்து பிரசவ நிலைகளையும், பிரசவ நேரத்தின் போது கர்ப்பிணிப் பெண் ஒரு அகலமான சுடு தண்ணீர் இருக்கும் டப்பில் அமர வைக்கப் பட்டு எதிர்கொள்ள உட்படுத்தப்படுகிறாள். குழந்தை தண்ணீரில் பிறக்கும்.  பல பெண்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய இது அதிக அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதாலும், மிகக் குறைவான வலியை தருவதாலும் தான். இந்த முறையை வீட்டிலிருந்தும் பலர் செய்கின்றனர். மேலும் பல மருத்துவமனைகளும் இந்த பிரசவ முறையை பரிந்துரைக்கின்றன.

    அறுவைசிகிச்சை பிரசவம் (C-section Delivery)

    பல வளர்ந்த நாடுகளில் இதனைப் பெரிதும் பரிந்துரைப்பதில்லை என்றாலும், தாய் மற்றும் சேய்க்கு ஏதாவது ஆபத்தான சூழல் இருக்கும் தருணத்தில் மட்டும் இதனைச் செய்கின்றனர். எனினும், இந்தியாவில் இன்று பெரும்பாலான பெண்கள், தங்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை அறிந்தாலும், இந்த முறையை தேர்ந்தெடுக்கின்றனர்.

    இதற்கு ஒரு முக்கிய காரணம் இதில் அவர்களுக்குப் பிரசவ நேரத்தில் வலி தெரிவதில்லை என்பது தான். எனினும், தாய் சேய், இதில் யாராவது ஒருவர் ஆபத்தான சூழலில்  இருக்கும் போது, இந்த முறையே சிறந்ததாக இருக்கின்றது. இல்லை என்றால், சுகப் பிரசவம் அல்லது பிற பிரசவ முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. ஏனென்றால் இந்த பிரசவத்திற்குப் பின் தாய் இயல்பான நிலைக்கு வர பல மாதங்கள் ஆகலாம். மேலும் அதிக ஓய்வும் தேவைப் படும். இதனால் குழந்தையோடு அதிகம் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம். மேலும் குழந்தைக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.
    ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்... ‘Alcohol may increase your desire, but it takes away the performance'. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

    மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.

    தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ்   ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு   சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.



    இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது... பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.  

    அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்... பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.

    மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும்
    தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது.
    பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு பால் ஈர்ப்புக்கு ஹார்மோன்கள் தான் காரணம். லெஸ்பியன் ஈர்ப்பு எல்லாக் காலத்திலும் இருந்து வருகிறது. லெஸ்பியன் உறவில் பெண்கள் 10 முதல் 15 சதவீதம் வரை உணர்ச்சி பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனக்கு மிகப் பிடித்த பெண்ணைக் கட்டிக் கொள்வதும், முத்தமிடுவதும் இன்று அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களிடம் ஈடுபாடு கொண்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் 45 சதவீதம் பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர். 50 சதவீதம் பேர் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் Boise university உளவியல்துறை பேராசிரியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் கூறியுள்ளார்.ஆண்-பெண் உடலுறவில்தானே அதிகபட்ச இன்பம் பெற முடியும். பெண்ணும் பெண்ணும் எப்படி முழுமையான இன்பம் பெற முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பெண்ணும் பெண்ணும் காமுறும்போது அவள் கூடுதல் இன்பத்தை அடைகிறாள். மேலும் தனக்குத் தேவையானவற்றைத் தயக்கம் இன்றிக் கேட்டுப் பெறுகிறாள். ஒருவரைப் பேரின்பம் கொள்ளச் செய்வதில் மற்றவர் ஈடுபாடு காட்டுவதும் லெஸ்பியன் உறவின் பாசிட்டிவ் விஷயங்கள்.

    ஆணும் பெண்ணும் உறவு கொள்வதில் ஆண் தனது ஆதிக்க மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறான். பெண்ணை தனது மகிழ்வுக்காகத் தயார்படுத்தி, அதன்பிறகு தான் மட்டுமே பேரின்பம் அடைவதில் ஆண் கவனம் செலுத்துகிறான். தன்னோடு கூடும் பெண் எங்கே இன்பம் அடைகிறாள், எவையெல்லாம் அவளுக்குப் பிடிக்கும் என ஆண் கேட்பதுமில்லை; அவள் சொல்வதுமில்லை.

    ஒரு பெண்ணை ஆண்  கையாளும்போது முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். லெஸ்பியன் உறவில் இரு பெண்களும் மென்மையாக நடந்துகொள்கின்றனர். மேலும் இதில் குழந்தைப் பேறு ஏற்படுவதில்லை. இது போன்ற பாசிட்டிவ் காரணங்கள் பெண்கள் லெஸ்பியன் உறவை விரும்பக் காரணம் ஆகிறது. லெஸ்பியன் உறவை சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் பெண்கள் மத்தியில் இது பெரும்பாலும் ரகசியமாக உள்ளது.



    திருமணத்துக்குப் பின்னர் ஆண்-பெண் உறவில் முழுமை அடையாதபோது லெஸ்பியன் உறவில் பெண்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புண்டு. லெஸ்பியன் உறவில் பெண்கள் சுதந்திரமாகவும் கூடுதல் இன்பத்தையும் உணர்கின்றனர். தனக்கு பிடித்ததை எல்லாம் லெஸ்பியன் தோழியிடம் கேட்டுப் பெறுகின்றனர். மேலும் வைபரேட்டர் போன்ற செக்ஸ் உபகரணங்களைப் பயன்படுத்தியும் ஒருவரை ஒருவர் இன்பத்தில் திளைக்கச் செய்கின்றனர்.

    ஆண் - பெண் உறவில் ஆண் ஆதிக்கம் செலுத்துகிறான். லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையே ஆனாலும் ஆணிடம் இந்த ஆதிக்க மனோநிலை தவறுவதில்லை. மேலும் ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பம் தரித்து விடுவோமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது. இவற்றை விரும்பாத பெண்களுக்கு லெஸ்பியன் உறவு சாதகமானதாகி விடுகிறது. சிறு வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தாலே வெறுப்பு வரவும் வாய்ப்புண்டு. அந்த வயதில் ஏற்பட்ட மோசமான நிகழ்வால் ஆணுடனான செக்ஸ் உறவே வெறுத்துப் போகலாம்.

    சிறு வயதிலேயே பெண்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பெண் குழந்தைகள் லெஸ்பியன் உறவில் சிக்குகின்றனர். பருவ வயதில் செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், பெண்கள் மட்டுமே இருக்கும் சூழலும் இவர்களிடையே லெஸ்பியன் உறவுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. பெண்ணுக்கு பெண் மீதே ஈர்ப்பு ஏற்படுவதற்கு ஹார்மோன்கள்தான் காரணம். ஏதோ ஒரு சூழலில் பெண்கள் இதுபோன்ற உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம்.

    இதனால் ஒரு புறம் பெண்களுக்கு செக்ஸ் இன்பம் கிடைத்தாலும், இது வெளியில் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் மனதில் இருக்கும். லெஸ்பியன் உறவால் குடும்பத்தில் கணவன் மனைவி உறவில் விரிசல் உண்டாகும். இதனால் இவர்களை நம்பி இருக்கும் குழந்தைகளின் வாழ்வும் பாதிக்கப்படும். லெஸ்பியன் உறவுக்கு ஆளான சில பெண்கள் அதிலிருந்து வெளியில் வர விரும்புவார்கள். ஆனால், அவர்களின் பார்ட்னர் விடாமல் தொந்தரவு செய்யவும் வாய்ப்புள்ளது.



    லெஸ்பியன் உறவில் இருந்து வெளியில் வர விரும்பும் பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சையால் தீர்வு காணலாம். பதின் பருவத்தில், படிக்கும் காலத்தில் லெஸ்பியன் உறவில் ஈடுபாடு காட்டும் பெண்களின் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. லெஸ்பியன் உறவில் உள்ளவர்களில் யாருக்காவது பால்வினை நோய்த்தொற்று அல்லது எய்ட்ஸ் இருக்கும் பட்சத்தில் இவை பரவவும் வாய்ப்புள்ளது.

    பெண்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். திருமண பந்தத்துக்குள் போகாத லெஸ்பியன் பெண்களாக இருந்தாலும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’. ஆண்-பெண் இணைந்து உருவாக்கும் குடும்ப அமைப்பில் உடமை, அதிகாரம் என சட்டதிட்டங்கள் இறுக்கமான நிலை காணப்படுகிறது.

    பாலியல் இன்பத்துக்காக ஓர் ஆணை நம்பும் பெண் முழுமையாக தன்னை ஒப்படைப்பதுடன் அவளது திறமை வளர்ச்சி ஆகியவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்ப அமைப்பில் பெண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றைய குடும்ப அமைப்புகள் விரைவில் உடைவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

    பெண்கள் மனமும் சுதந்திரத்துக்காக பல ஆண்டுகாலமாக ஏங்குகிறது. தலைமுறைப் பெண்களின் ஏக்கம், விடுதலை வேட்கை, ஒரு பால் ஈர்ப்பு என பல விஷயங்கள் லெஸ்பியன் உறவைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் ஆகிறது. இதுவும் பாலுறவில் ஒரு வகைதான். இவர்களை வெறுப்பதும், இவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்வதும் மனிதப்பண்புக்கு எதிரானது. இன்னும் சில ஆண்டுகளில் லெஸ்பியன் இணைகளும் அங்கீகாரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
    பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

    பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள்:

    பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.

    மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

    நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.



    பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

    மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

    அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.

    1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு - கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் - நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

    2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

    3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தல் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.

    4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

    5. நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
    பிரா எப்போது இருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போது இருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும்.
    அந்த கால கட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமி தான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்பட வேண்டும். சிறுமிகளுக்கு எட்டு வயதிற்கு பிறகு மார்பு வளர்ச்சி மேம்படத் தொடங்கும். அந்த வயதில் தான் அவளுக்கு ‘பிரா’வை பற்றிய சிந்தனை உருவாகும். அப்போதே ‘பிரா’ அணிவது பற்றி மகளிடம், தாய் பேச ஆரம்பித்து விட வேண்டும். பிரா எப்போதிருந்து அணிய வேண்டும்? என்ற கேள்விக்கு, வயது மட்டுமே பதில் அல்ல! சிறுமியின் உடல் வளர்ச்சிக்கு எப்போது பிரா அவசியமோ அப்போதிருந்து அணிய ஊக்குவிக்க வேண்டும். 8 முதல் 12 வயதுக்குள் மார்பு வளர்ச்சி தொடங்கும்.

    12-13 வயதில் பிரா அணியும் வளர்ச்சியை சிறுமிகள் எட்டி விடுவார்கள். எல்லா சிறுமிகளுமே பிரா அணிய வேண்டிய தொடக்க பருவத்தில் சிறிது குழப்ப மனநிலையை அடையத் தான் செய்கிறார்கள். வயதை மீறிய உடல் வளர்ச்சி சில சிறுமிகளிடம் இருக்கும். அவர்களிடம் தாய்மார்கள் பிரா அணிய வேண்டிய அவசியத்தை உடற்கூறு ரீதியாக எடுத்துரைக்க வேண்டும்.

    அதோடு மொத்தமாகவே உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நேர்த்தியாக்க வேண்டும். பிரா அணிய மகள் தயங்கினால், அவள் பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாத அளவுக்கு உடைகளை அணியச்செய்யவேண்டும். அவ்வாறு உடை அணியச் செய்து கண்ணாடி முன்னால் அவளை நிற்க வைத்து, ‘பிரா அணிந்திருப்பது தெரியவில்லை.

    அதே நேரத்தில் உன் உடல் சவுகரியத்திற்கு அது அவசியம் என்பதை ஆதாரபூர்வமாக உணர்த்த வேண்டும். சிறுமிகளில் சிலர் 13, 14 வயதை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரா அணிய வேண்டிய அளவுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்களோ தானும் பிரா அணிய வேண்டும் என்று அடம்பிடிக்கலாம். அவர்களுக்குரிய பிராக்களும் இருக்கின்றன. அதை வாங்கிக் கொடுத்து அணியச் செய்ய வேண்டும்.

    மாறாக, ‘உனக்கு மார்பக வளர்ச்சியில்லை. அதனால் நீ பிரா அணியத் தேவையில்லை’ என்று கூறினால், அவர்களது தன்னம்பிக்கை குறைந்து போகும். இதை எல்லாம் தாய், மகளுக்கு எடுத்துச் சொல்லி மனப் பூர்வமாக, மகிழ்ச்சியோடு உடலுக்கு பொருத்தமான பிராவை அணிய ஊக்குவிக்க வேண்டும்.



    ‘மார்பக வளர்ச்சி ஒவ்வொருவரது உடல் வாகுக்கு ஏற்ற படியும், பாரம்பரியத்திற்கு ஏற்ற படியும் இருக்கும். நாளடைவில் வளர்ச்சி சரியாகி விடும்’ என்று கூறுவதோடு, ‘பேடு’வைத்த பிராவை வாங்கிக் கொடுத்து அணிய செய்ய வேண்டும். அதன் மூலம் மனக்குறையை போக்கி விடலாம். இரண்டு மார்புகளின் அளவிலும், தோற்றத்திலும் வித்தியாசம் இருப்பதை சில சிறுமிகள் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்வார்கள்.

    மார்பகங்கள் இரண்டும் ஒன்று போல் இருப்பதில்லை. லேசான மாற்றங்கள் இயற்கையானது என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உங்கள் மகளை அழைத்துச் சென்று அவளுக்கு பொருத்தமான பிராவை வாங்கிக் கொடுங்கள். வாங்கிய பின்பு அது சரியாக அமையாவிட்டால், தயங்காமல் அதை தூக்கி வீசி விட்டு, பொருத்தமானதை வாங்கி அணியச் செய்யுங்கள்.

    வளரும் பெண் தானே பெரிதாக வாங்கிக் கொடுப்போம் என்று அளவில் பெரிதாக இருப்பதை வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். பெரும்பாலான சிறுமிகள் விளையாட்டு, நடனம் போன்றவைகளிலும் பயிற்சி பெறுகிறார்கள். சாதாரணமாக அணிவதற்கும், பயிற்சிக்கு தக்கபடி அணிவதற்கும் வெவ்வேறு பிராக்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    விளையாட்டிற்கு தகுந்த படியும், நடனத்திற்கு தகுந்த படியும் பிரா வாங்கிக் கொடுங்கள். வாங்கிக் கொடுக்கும் போதே கடைகளில் உள்ளவர்களிடம், ‘பிராக்களை எப்படி பராமரிக்க வேண்டும்?’ என்பதையும், மகளிடம் கூறச் செய்யுங்கள். அவரவர் உள்ளாடைகளை அவரவரே துவைத்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
    அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி யில்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது.

    கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கர்ப்பக் காலத்தின் போதே ஆரோக்கிய மான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர். முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின் போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பது தான்.

    அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர். எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும் போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்று தான் கூறுவார்கள் .

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.
    பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.
    பெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் எவ்வாறெல்லாம் மாதவிடாய் காலத்தில் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.

    * சிலர் ஒரு பேடையே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றுவது அவசியம். குறைவான இரத்தப்போக்கு நாட்களிலும் அவ்வாறு மாற்றுவது அவசியம். பயன்படுத்தப்பட்ட பேடை பாலிதீன் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் போடுவதும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

    * இரத்தப்போக்கு வரும் பகுதியை சுத்தமாகக் கழுவுவது அவசியம். அங்கு வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்துக் கழுவினால் வலி சற்று குறையும். இரத்தப் போக்கும் சீராக வரும்.

    * இரத்தப் போக்கு வரும் இடத்தை சுத்தமாகக் கழுவுகிறேன் என்ற பெயரில் சோப்பு, வாசனைக் கலந்த கெமிக்கல் திரவியங்களைப் பயன்படுத்தாதீர்கள். அது வெஜினாவின் வழியாக உள்ளே சென்று பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். உடலே அதன் அசுத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ள இயற்கை முறையைக் கையாளும். நீங்கள் வெறும் வெதுவெதுப்பான நீரால் கழுவுவதே போதுமானது.



    * பேட் மாற்றுவது போல் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் டவலைக் கூட சுத்தமாகப் பயன்படுத்துவது அவசியம். வெஜினா போன்ற இடங்களைத் துடைக்கும்போது டவல் மூலமாக கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் துடைப்பதற்கு துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்துங்கள்.

    * அந்த மூன்று நாட்கள் பயன்படுத்திய ஆடைகளை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வாஷ் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். நன்கு வெயில் படும்படி காய வையுங்கள். முடிந்தால் டெட்டால் பயன்படுத்தி அலசலாம்.

    * கைகளை பேட் மாற்றுவதற்கு முன்னும், பின்னும் சுத்தமாகக் கழுவுவது அவசியம். உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாவால் தொற்றுகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.
    சானிட்டரி நாப்கின்களின் நாள்பட்ட பயன்பாடும், டையாக்சினும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கூட உண்டாக்கலாம். பொதுவாக பிளாஸ்டிக்கை அடிப்படையாக கொண்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தற்கால சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு நல்லதைவிட அதிகளவில் தீங்கையே விளைவிக்கிறது. பல வருடங்களாக சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்துபவர்களுக்கே அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது.

    சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெண்களுக்கு அரிப்பு, தோல் கருப்படைதல், பல்வேறு விதமான அலர்ஜிகள் மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வெள்ளைப்படுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் நான்கு மணிநேரங்களுக்கு ஒரு சானிட்டரி நேப்கின் வீதம் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு சானிட்டரி நேப்கின்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காலை முதல் இரவுவரை ஒரே நாப்கின்னை பயன்படுத்துவது மிக அதிகபட்சமாக புற்றுநோயை கூட உண்டாக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும், நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களால் ஒரு நாளைக்கு இத்தனை நாப்கின்களை பயன்படுத்துவெதெல்லாம் பொருளாதாரரீதியாக சாத்தியமே இல்லை.

    மாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இதனால் பெண்களால் எப்போதும் போல இயல்பாக செயல்பட முடிவது இதன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், தகவலுக்காக இதனை பதிவு செய்கிறோம்.



    செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டோ அல்லது இரண்டையுமே சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து பல வகைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் பார்க்கலாம். பெண்களுக்கு சுமார் 12 வயது முதல் 50 வயது வரை ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், பொதுவாக பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாகதான் உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி எளியமுறையில் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.



    முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் உறிபஞ்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின்னர் டாய்லெட்டுக்கு சென்று ஒரு காலை மடக்கி மற்றொரு கால்ளை விரித்து Tampon உறிபஞ்சை உங்களது வெர்ஜின் பகுதியில் உள்ளேசெலுத்த வேண்டும். இந்த உறிபஞ்சுகளை உபயோக படுத்திய பின்பு பாதுகாப்பாக அதனை அப்புறப்படுத்த வேண்டும். டாய்லெட்டில் ஃப்ளஷ் பண்ணக்கூடாது.

    Tampon உறிபஞ்சை உட்செலுத்திய பின்னர் நீங்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அது சரியாக உட்செலுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் அதை உடனே அகற்றிவிட்டு புதிய உறிபஞ்சை எடுத்து சரியாக உள்ளே செலுத்த வேண்டும். இதை சரியாக செலுத்திய பின்னர் எந்தவித உறுத்தலும் அசௌகரியமும ஏற்படாது.

    ஆனாலும் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாதவிடாய் உறிபஞ்சுகளுக்கு மாறுவதற்கு பெண்களிடையே இருக்கும் தயக்கத்து அவை குறித்த பிரபலமின்மையும், விழிப்புணர்வின்மையுமே காரணம்.

    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. அதற்கான தீர்வை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது வழி வழியாக இருந்து வரும் நம்பிக்கை. கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, பனிக்குடலில் நீர் கசிவு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தகுதியற்ற கர்ப்பவாய் இருந்தாலோ, உங்கள் மருத்துவர் உடலுறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவார். மேலும் கர்ப்பம் தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு, மரபுத்திரி அசாதாரண அமைப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் ஏற்படும்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு ஏற்படும். இந்த பாலுணர்ச்சி உந்துதலுக்கு ஹார்மோன்கள் தான் காரணம். கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். அதுவே பாலுணர்ச்சியை தூண்ட காரணமாக அமையும்.

    விலங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பாலுறவு கொள்ளக் கூடியவை. ஆனால் மனிதர்கள் எல்லா நாள்களிலும் பாலுறவு கொள்ளும் திறன் பெற்று இருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு கூடலாம் அல்லது குறையலாம். அதேபோல் கணவன் தனது மனைவியின் மேல் இருந்து பாலுறவு கொள்ள சிரமமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் கிருமிகள் அதிகம் இருக்கலாம். அதனால் பாலுறவின் போது கிருமிகள் உள்ளே நுழைய வாய்ப்புகள் அதிகம்.



    உடலுறவு மூலமாக பரவும் நோய்களில் இருந்து கர்ப்பம் உங்களை பாதுகாக்காது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. கர்ப்ப காலத்தில் இவ்வகை நோய் உங்களை தாக்கினால், அது உங்கள் குழந்தையையும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் இவ்வகை வியாதியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, இந்த வியாதி இல்லாத ஒருவருடனே உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுறவின் போது ஆணுறை பயன்படுத்துவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.

    இதன் காரணமாக கருப்பை நோய் தொற்று ஏற்படலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாலுறவு கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பல நேரங்களில் பாதுகாப்பானதே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவு மற்றும் பாலுணர்வு கண்டிப்பாக கருச்சிதைவை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், பாலுணர்ச்சியால் ஏற்படும் சுருங்குதலுக்கும், பிரசவத்தால் ஏற்படும் சுருங்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் மறுபடியும் மருத்துவரை அணுகி, உடலுறவு கொள்வது ஆபத்தை விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம். பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன. 41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

    இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.

    பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.

    * வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

    * உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.



    * ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

    * உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

    * கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்' (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.

    * உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்" என்கிறார் காவியா கிருஷ்ணன்.
    இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி.
    இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது. மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைதல், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம் தான். முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது.

    பெண்களின் அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட் ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைபடுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகிறது.



    மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது. இந்த வகையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும். உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைபயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

    மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்ட மூட்டு தேய்மானத்தை மட்டும் உணவு பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்.
    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.
    கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்டுகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம்.

    ‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.
    ×