என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.
    • இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

    கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும் போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

    பெரும்பாலும் மெனோபாஸ் வயதில் தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும் அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன.

    முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3-வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. இந்தநிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும்.

    சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப்போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.

    முதல் நிலை பாதிப்பாக இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது, இவையெல்லாம் பிரச்சினை தீவிரமாகாமல் தடுப்பதற்கான வழிகள்.

    • அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு.
    • உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது.

    பள்ளி, கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான வாழ்வில், பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணி இடங்களில் தான் உள்ளோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

    ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சினைகளை எளிதாகப்புரிந்துகொள்வார். பிரச்சினையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சினை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம் என்பதை இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.

    உற்சாகம்

    `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

    உதவி

    எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

     மதிய உணவு

    அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

     குழு

    நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    • யானை படமாக இருந்தால் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.
    • மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம்.

    தன்னம்பிக்கையை அளிக்கும் படங்கள், இயற்கை அழகு மிகுந்த வண்ண ஓவியங்கள் ஆகியவற்றால் சுவர்கள் அலங்கரிக்கப்படும்போது மங்களம் தரும் சுப அதிர்வுகள் மனதில் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் காரணமாக மனதில் உற்சாகம் உண்டாவதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் அந்த உற்சாகம் பரவும்.

    வீடுகள் சிறிய அளவு கொண்டதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் அனைவரையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வீடுகளை அழகுபடுத்த வேண்டும் என்பதில்லை. கண்கவரும் வண்ணங்களில் அழகிய ஓவியங்களை ஆங்காங்கே மாட்டி வைத்தும் அறையின் சூழலை இனிமையாக மாற்ற இயலும்.

    அவ்வாறு ஓவியங்கள், சிற்பங்கள் அல்லது படங்களை அறைகளில் வைப்பது அல்லது சுவர்களில் மாட்டுவதை பொறுத்து வீடுகளில் நேர்மறை சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகள் வெளிப்படுகின்றன என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வீடுகளில் சிலைகள் அல்லது படங்களை மாட்டும் முன்னர் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.

     * ஒற்றைக் கொம்பு கொண்ட யூனிகார்ன் குதிரை படம் அல்லது மான்கள் துள்ளி ஓடும் படத்தையும் மாட்டி வைக்கலாம். அவை, பெருமை மற்றும் செல்வத்தை குறிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன.

     * வீடுகள் அல்லது அறைகளில் கிழக்கு பகுதிகளில் அறிவு மற்றும் சக்தி ஆகியவற்றின் உருவகமாக உள்ள யானைகள் கூட்டமாக இருக்கும் படங்கள் அல்லது இரண்டு கொக்குகள், இரண்டு அன்னங்கள், பறந்து செல்லும் பறவைகள் கொண்ட படங்களையும் மாட்டலாம். அவை ஒற்றுமையை குறிப்பிடுவதாக அமையும்.

    * ஒரு யானை கொண்ட படமாக இருந்தால் அதன் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது சிறப்பு.

    * தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றை காட்டும் குட்டிகளுடன் கூடிய தாய் சிங்கத்தின் படம், வளத்தை எடுத்துச்சொல்லும் பெரிய பாய்மர கப்பல் ஆகிய படங்களையும் வீடுகளில் பயன்படுத்தலாம்.

     * சமையலறை சுவர்களில் அல்லது சாப்பிடும்போது கண்களில் படும்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள் போன்றவை அடங்கிய படங்களை மாட்டி வைக்கலாம்.

    * படுக்கையறை சுவர்களுக்கு மென்மையான நீல மலர்கள் கொண்ட படம் மற்றும் மேஜையில் அலாரம் கொண்ட கடிகாரம் ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

    * போர்க்களத்தில் பயன்படுத்தும் ஆயுதங்கள், போரை நினைவு படுத்தும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள், பீரங்கி பொம்மைகள், பெருக்கல் குறி போன்ற வாள்கள் ஆகியவற்றை வீடுகளில் வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    * சிங்கம், புலி போன்ற விலங்குகள் இரையை துரத்துவது அல்லது அவற்றை வாயில் கவ்வி கொண்டிருப்பது போன்ற படங்களும் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும் என்ற நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் மாற்றங்கள் வருவதுண்டு.
    • சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் 'பேபி ப்ளூஸ்' என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம். இன்னும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை 'பெரி பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம்.

    பிரசவத்துக்குப் பிறகான 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு'க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

     மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார்.

    ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது.

    முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத்தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

     போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள்.

    பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுகுறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

    • 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

    எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    காலையில் பால் பாக்கெட் வராததில் தொடங்கும் டென்ஷன் திடீரென வேலைக்காரி லீவு போடுவது, குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருபது என இப்படியே தொடர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம்.

    இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.

     அறிகுறிகள்:

    வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும்.

    அடிவயிற்றில் வலி இருபதால் பலர் குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். சிலர் அமீபா கிருமியின் தாக்குதல் என நினைத்து அதற்கு மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் வலி தீராது. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

    • கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

     கதவை திறந்ததுமே உள்ளே இருக்கிற பொருட்கள் எல்லாம் கீழே விழுற மாதிரி ஃபிரிட்ஜில் (குளிர் சாதன பெட்டி) அனைத்தையும் அடைத்து வைப்பது பலரது வழக்கம். ஆனால், ஃபிரிட்ஜில் எவற்றை வைக்கலாம், எதையெல்லாம் வைக்கக்கூடாது என்ற வரைமுறை உண்டு.

    சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைத்துவிடுவார்கள். இது தவறு. பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

    உருண்டை வடிவ அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களையோ, டப்பாவையோ வைப்பதை தவிர்க்கலாம். அவை ஃபிரிட்ஜ் உள்ளே சரியாக உட்காராமல் கம்ப்ரசரின் அதிர்வுக்கு ஏற்ப அதிர்ந்து, தேவையில்லாத சத்தத்தை ஏற்படுத்தக்கூடும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அழுகிவிடக்கூடும். இதைத் தவிர்க்க அவற்றை `நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்.

     கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை காய்கறிக்கான பகுதியில் வைக்காமல் ஃபிரிட்ஜ் கதவில் இருக்கும் அறைகளில் வைக்கலாம்.

    சூடான பொருட்களை ஃபிரிட்ஜ் உள்ளே வைக்கக்கூடாது. அவற்றின் வெப்பநிலை ஃப்ரிட்ஜ் முழுவதும் பரவி, அங்கிருக்கும் வெப்பநிலையை அதிகரித்துவிடும். இதனால் மின் செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போகவும் கூடும்.

    ஃபிரிட்ஜ் கதவை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும். சிலர் வீட்டுக்கதவு போல ஃபிரிட்ஜை திறந்து வைத்துவிட்டு பொறுமையாக அதன் உள்ளே பொருட்களை வைப்பார்கள், எடுப்பார்கள்.

    ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக்கூடாது. பொதுவாகவே மற்ற அறைகளைவிட சமையல் அறையின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். அங்கே வைப்பதால் ஃபிரிட்ஜ் உள்ளே குளிர்ச்சி குறையலாம்.

    சிலர் ஃபிரிட்ஜில் அவ்வளவாகப் பொருட்கள் இல்லை என்று அடிக்கடி அணைத்து வைத்துவிடுவார்கள். இது தவறு. என்னதான் 6 அல்லது 8 மணி நேரம் வரை ஃபிரிட்ஜை அனைத்து வைத்திருந்தாலும் மீண்டும் ஆன் செய்யும்போது ஃபிரிட்ஜ் முதலில் இருந்து வேலைசெய்ய ஆரம்பிக்கும். இதனால் மின்செலவு அதிகரிக்கும். வெயில் காலம், குளிர்காலம் என தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி ஃபிரிட்ஜின் குளிர்ச்சியை மாற்ற வேண்டும்.

    ஃபிரிட்ஜ் வடிவமைக்கும்போதே இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைத்திருந்தாலும், அது மின்சாரத்தின் ஏற்ற, இறக்கத்தை அத்தனை பக்குவமாகச் சமாளிக்காது. அதனால் தரமான ஸ்டெபிலைசர் பொருத்துவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா, எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் கலந்து மென்மையான துணியால் ஃபிரிட்ஜின் உள்பாகங்களை துடைக்க வேண்டும். சோப்பை தவிர்க்க வேண்டும். அது ஃபிரிட்ஜினுள் தேவையில்லாத மணத்தை ஏற்படுத்துவதுடன் மென்மையான பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். வெளிப்பாகத்தை காரத்தன்மை குறைந்த குளியல் சோப்பு அல்லது ஷாம்பு கலந்த நீரில் துடைக்கலாம். ஃபிரிட்ஜின் கேஸ்கட்டையும் நன்றாக துடைத்து பராமரிக்க வேண்டும்.

    • முத்து நகைகள் பாரம்பரியமாக தமிழர்களின் வழக்கத்தில் இருக்கின்றன.
    • அழகை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

    பெண்களின் அலங்காரப் பொருட்களில் முக்கியமானவை நகைகள். ஆடைகளுக்கு ஏற்ற வகையில் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற பொருத்தமான நகைகளை அணியும் போதுதான் அலங்காரம் முழுமை பெறும். அந்த வகையில் முத்து நகைகள் பாரம்பரியமாக தமிழர்களின் வழக்கத்தில் இருக்கின்றன. நவீன காலத்திற்கு ஏற்றார் போல் முத்து நகைகள் தற்போது வடிவமைக்கப்படுகின்றன.

    காதணி, மோதிரம் போன்ற சிறிய நகைகள் முதல் ஆரம், ஒட்டியானாம், நெற்றிச்சுட்டி போன்ற பெரிய நகைகள் வரை முத்து நகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. இவை அழகை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. முத்து நகைகளை அணிவதன் பயன்கள் இதோ...

    முத்து நகைகள் மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை அதிகரித்து மனதை அமைதியாக்கும் என நம்பப்படுகிறது.

    நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். இது முத்து நகைகள் உள்பட அனைத்து நகைகளுக்கும் பொருந்தும். ஜோதிட ரீதியாக முத்து நகைகள் அணிவதன் மூலம் நினைவாற்றலும், தைரியமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    முத்து நகைகள் எதிர்மறை மண்ணங்களை நடுநிலையாக்கி செழிப்பு, அதிர்ஷ்டம் தருவதாகவும் நம்பப்படுகிறது. எளிதில் கோபப்படுபவர்கள், முத்து நகைகள் அணிவதன் மூலம் கோபத்தை கட்டுக்குள் வைக்க நம்முடைய பாரம்பரிய உடையான புடவை அணியும் போது, முத்து நகைகள் அணிவதன் மூலம் உங்கள் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக்காட்ட முடியும்.

     புடவை மட்டுமல்லாது மற்ற உடைகளோடு அணிவதற்கும் முத்து நகைகள் பொருத்தமாக இருக்கும். வெள்ளை மட்டுமல்லாமல் க்ரீம், கருப்பு, தங்கம், சாம்பல், பிங்க், நிலம் போன்ற நிறங்களிலும் முத்துகள் விளைகின்றன.

    பணிபுரியும் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடிக்கடி மனநிலை மாற்றங்களை சந்திக்கும் பெண்கள் முத்து நகைகளை அணிவதால் மனஅழுத்தம் குறையும்.

    முத்துகளில் காணப்படும் இரும்பு, துத்தநாகம், செலினியம், கால்சியம் போன்ற தாதுக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இவை முகப்பருக்கள். கரும்புள்ளிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

    முத்து நகைகளில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள், தாதுக்கள் மற்றும் ஆச்சிஜனேற்றிகள் பதற்றத்தை குறைக்கக்கூடியவை. போலியான மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட முத்து நகைகளும் சந்தைகளில் கிடைக்கின்றன. எனவே முத்துகளின் நன்மைகளை பெற விரும்புபவர்கள், உண்மையான முத்துகள் பதிக்கப்பட்ட அணிகலன்களை கண்டறிந்து வாங்க வேண்டும்

    • பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய்.

    பருவம் அடையும் காலகட்டத்தை நெருங்கும் உங்களுடைய பதின்மவயது மகளுக்கு ஒரு தாயாக உங்களுடைய ஆதரவும், ஆலோசனைகளும், அரவணைப்பும் அதிகமாக தேவைப்படும். இந்த நேரத்தில் பெண் குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பல்வேறு மாற்றங்களை சந்திப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு உண்டாகும் பயத்தையும். குழப்பத்தையும் போக்க வேண்டியது ஒரு தாயின் கடமையாகும்.

    மாதவிடாய் நாட்களை எளிதாகவும், இயல்பாகவும் எவ்வாறு கடந்து செல்வது என்பதை பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.

    பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதாகவே அவர்களுடைய மார்பகங்கள் பெரிதாவது. அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வது போன்ற மாற்றங்களை தாயால் கவனிக்க முடியும். தன்னுடைய மகள் பருவமடைய போகிறாள் என்னும் நிதர்சனத்தை தாய்மார்கள் பலரும் ஒருவித பதற்றத்துடனேயே எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் சானிட்டரி நாப்கின்கள் தொடர்பான விளம்பரங்களை பார்க்கும்போதே, குழந்தைகள் மாதவிடாய் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதை உணர்ந்து, மாதவிடாய் குறித்த சரியான தகவல்களை தாய்மார்கள் தான் மகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

     மனித வாழ்க்கையில் இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய். அதுகுறித்த தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் உங்கள் மகளிடம் பேசுங்கள். முதலில், மாதவிடாய் குறித்து அவள் என்ன தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதை காதுகொடுத்து கேளுங்கள். மாதவிடாய் குறித்து சில தவறான தகவல்களை உங்கள் மகள் தெரிந்து வைத்திருந்தாலும், அதை அன்போடு திருத்துங்கள்.

    9 முதல் 15 வயதுக்குள் பெண் குழந்தைகள் தங்களுடைய முதல் மாதவிடாய் நாட்களை சந்திக்கிறார்கள். சராசரியாக 12 வயது தொடங்கியதுமே, சானிட்டரி நாப்கின், ஒரு ஜோடி உள்ளாடைகள் ஆகியவற்றை எப்போதும் அவர்களது பள்ளிப் பையில் வைத்திருக்கவும், அதன் அவசியத்தையும் எளிமையாகச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

    மாதவிடாயைப் பற்றி வட்டார வழக்கில் கூறாமல் அறிவியல் ரீதியாக சொல்லிக் கொடுங்கள். தாயாகிய உங்களுக்கு பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேசுவதற்கு தயக்கம் இருந்தால், உங்கள் வயதுடைய உறவுக்கார பெண் அல்லது வயதில் மூத்த பெண்களை பேச வைக்கலாம்.

     மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின், கப், டாம்பான் ஆகியவற்றை முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாக. வெட்கப்படாமல் உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். மாதவிடாயின்போது அணியும் உள்ளாடைகளை சுத்தமாக பராமரிப்பது. உடலையும் அந்தரங்க உறுப்புகளையும் எவ்வாறு சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுங்கள். இதன் மூலம். மாதவிடாய் மீதான குழப்பமும். பயமும் நீங்கி பெண் குழந்தைகளின் மனம் தெளிவு அடையும்.

    மேலும், பிறப்புறுப்பு பகுதியில் சோப்பு போன்ற ரசாயனங்களைக்கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துங்கள்.

    பள்ளியிலோ, வீட்டிலோ, பொது இடத்திலோ அல்லது சமூக- குடும்ப நிகழ்வுகளிலோ இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டாலும், அந்த சூழ்நிலையை எளிமையாக கையாண்டு இயல்புநிலைக்குத் திரும்புவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுங்கள்.

    • குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதம் உள்ளது.
    • நோய் எதிர்ப்பாற்றலை கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது.

    தாய்மார்களுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை ஒரு நாளைக்கு தாய்ப்பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தாய்மார்களாலும் இந்த அளவுக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதமான லாக்டால்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் உள்ளது. இது மாட்டுப்பால் போன்ற பிற மாற்றுப் பொருட்களில் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிற, மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது. தாய்ப்பால் குடிக்கும்போது மட்டுமே குழந்தையின் நாக்கு, வாய் போன்றவை அசைந்து வேலை செய்கின்றன.

    புட்டிப்பாலை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் எதிர்ப்பாற்றலையும் அசைவையும் குறைத்துவிடும். திரும்பவும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்க மறுக்கும். மார்பகத்தில் இருந்து நேராக பால் புகட்டும்போது தாய்க்கும் சேய்க்குமான அன்பு உறவு வளரும். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணரும்.

     தாய்ப்பாலைத் தவிர மற்ற பொருள்கள் குழந்தையின் சிறுநீரகத்துக்கு பாதிப்பானது என்பது உண்மையா?

    தாய்ப்பாலைத் தவிர பிற மாற்றுப் பொருட்களையும் குழந்தையால் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் மாட்டுப்பால் போன்ற மாற்றுப்பொருட்களில் உள்ள உப்புச்சத்துகள், ஸ்டார்ச் போன்றவை குழந்தைகளின் இளம் சிறுநீரகத்துக்கு பாரமே. இதனால் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதற்கு முன்னர், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு முதன்மையான உட்பொருளாக இருந்தது. மனிதகுலம் அழியாது வளர்வதற்கு தாய்ப்பால் முக்கியக் காரணமாக உள்ளது. பிற பொருட்களைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத்தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது சரியா?

    சர்க்கரைத் தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது மிகவும் தவறு. அதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ கூடாது. இதுகுறித்து சரியான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் வேண்டும். சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்தால் குழந்தைகளின் வயிறு நிறைந்து விடும், பசி ஏற்படாது. பசி இருந்தால்தான் குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்கும். குழந்தைகள் பசி எடுத்து சப்புவதுதான் தாய்ப்பால் புகட்டலின் முக்கியமான பகுதி.

    மேலும் தாய்ப்பால் புகட்டுவது தனிமனித செயல்பாடு அல்ல, சமூகச் செயல்பாடு. இதனால் குழந்தைகளின் நலம் உந்தப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றுப்பொருள் உற்பத்தி செய்தால் ஒரு நாளைக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி என்பது, பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பால் இவற்றில் இருந்து காத்து குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது.

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    • ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும்.
    • மெனோபாஸ் வயது என்பது 50 தான்.

    * மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹோர்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்து பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    * 50 வயதிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பொப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

    * 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது.

     * மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹோர்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரிமெனோபாஸ் நேரத்திலும் வரும்.

    * ஒரு சிலருக்கு மாதவிடாய் கால தலைவலி வரும். அவர்கள் தாராளமாக மாத்திரை எடுக்கலாம், தவறில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    * பத்து பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிடுகிறது. இது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது.

    * அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வரும் என்று சிலர் சொல்வார்கள். அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவ ரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.

    * இந்த காலத்தில் கால தாமதமான திருமணம் காரணமாக நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மெனோபாஸ் காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது.
    • உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும்.

    இந்த பிரச்னையை 'இன்சோம்னியா' (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60 சதவிகிதப் பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது. சிலருக்கு தூக்கத்தைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும்.

    இன்னும் சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்துவிடும். மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே மெனோபாஸ் காலகட்டத்தில் சகஜமாக ஏற்படுபவை என்கின்றன ஆய்வுகள்.

    ஒரு வருட காலத்துக்கு பீரியட்சே வராமல் இருந்தால் அதை மெனோபாஸ் என்கிறோம். மெனோபாசுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸ் காலகட்டத்திலேயே நம் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதும் நடக்கும்.

    ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் உடல் சூடாவது, அதிகம் வியர்த்துக் கொட்டுவது போன்ற உணர்வுகள் சகஜமாக இருக்கும். உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்த்துக்கொட்டுவது போல உணர்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்போர் எல்லாம் குளிர்ச்சியாக உணர்ந்தாலும் உங்களுக்கு மட்டும் வியர்த்துக்கொட்டும். அதேபோல ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவுகள் ரொம்பவும் குறைவதால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரிக்கும்.

    வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகக்கூட தூக்கம் பாதிக்கப்படலாம். அப்படி எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அதைப் பரிந்துரைத்த மருத்துவரிடம் அது குறித்து ஆலோசனை பெறுங்கள்.

    தூக்கமின்மையில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சில வாரங்கள் நீடிக்கும், பிறகு தானாக சரியாகிவிடும். இன்னொரு வகை க்ரானிக் இன்சோம்னியா. இது நீண்டகாலமாகத் தொடரும். மூன்று மாதங்களுக்கு மேலும் தொடரும்.

     இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் வேளையில் தூக்கம் வருவதாக உணர்வார்கள். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாமல் தவிப்பார்கள். இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

    தூக்கமின்மை பிரச்சினைக்கான முதல் தீர்வு 'காக்னிட்டிவ் பிஹேவியரைல் தெரபி'. அதாவது நமக்கு ஏதேனும் நெகட்டிவ் சிந்தனைகள் உள்ளனவா, அவை நம் தூக்கத்தை பாதிக்கின்றனவா என பார்த்து அவற்றை சமாளிக்க கற்றுத்தரப்படும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி பரிந்துரைக்கப்படும்.

    சிலருக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அது பழக்கமாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு என்பதால் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

    அந்த மாதிரி மருந்துகளைத் தவிர்த்து மருத்துவரின் பரிந்துரையோடு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் எடுப்பது பெரிய அளவில் உதவும். மேற்குறிப்பிட்ட எந்த விஷயமும் உதவவில்லை என்றால் உங்களுடைய தூக்க ரொட்டீனை பார்க்க வேண்டும். தூக்கவியல் மருத்துவரை அணுகினால் அவர் அதுதொடர்பான கேள்விகளைக் கேட்டு பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

    நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களைச் சரிசெய்ய வேண்டியதும் அவசியம். முதல் விஷயம் நாம் தூங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாலை நேரத்தில் மங்கலான விளக்குகளையே பயன்படுத்துங்கள். செல்போன், லேப்டாப் போன்றவற்றின் உபயோகத்தைத் தவிர்க்கவும். யோகா, தியானம் போன்ற ரிலாக்சிங் டெக்னிக்குகளை பின்பற்றலாம்.

    தூங்குவதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். மிதமான உணவாக இருக்க வேண்டியது அவசியம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதற்கு தயாராக வேண்டும். நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் அவற்றைப் போக்க நிபுணர்களின் உதவியை நாடலாம்.

    ×