என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.
    முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.

    ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.

    மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள். டிரையர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம்.

    தலையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது. வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
    சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
    ஷேர்வானி, கோட்சூட், பிளேஸர்ஸ் - இவை மட்டுமே ஆளுமை தரும் ஆடைகள் என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை இப்பொழுது முதல் மாற்றிக் கொள்ளலாம். ஆம், ஆடவர்கள் அணியும் பேன்ட் மற்றும் ஷர்ட்டுகளும் அணியும் விதத்தில் அணியும் பொழுது அது ஆளுமையைத் தரும் ஆடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    * காண்ட்ராஸ்ட் நிறத்தில் அணியப்படும் பேன்ட்டும் ஷர்ட்டும் மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் ட்ரெண்டியாகவும் இருக்கும். பொதுவாகவே மென்மையான பிங்க் நிறச்சட்டைக்கு அடர்த்தியான நீல நிறப்பேண்ட் அணியும் பொழுது அது அணிபவருக்கு முறையான தோற்றத்தைத் (ஃபார்மல் லுக்) தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

    * சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

    * மிகவும் மென்மையான நிறமுடைய பேண்டிற்கு அடர்த்தியான வண்ணங்களில் அணியப்படும் சட்டைகள் பொருத்தமானதாக இருக்கும். இவை அலுவலகத்திற்கு மட்டுமல்லாது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏற்ற ஆடையாக இருக்கும்.

    * மென்மையான கிரே நிறமுடைய பேண்ட்டிற்கு மிகவும் பொருத்தமானது கருப்பு நிறமுடைய சட்டை என்றால் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். இது போன்ற சேர்க்கையில் பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது ஷர்ட்டிலிருக்கும் பொத்தான் வெண்ணை நிறத்தில் இருந்தால் அது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவற்றை அணியும் பொழுது தனித்துவமாக தெரிவோம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    * ஃபார்மல் பேன்ட்டிற்கு ஷர்ட், டி-ஷர்ட் மற்றும் போலோவை அணிவது டிரெண்டியிலும் டிரெண்டியாக உள்ளது.

    * வேஷ்டிக்கு ஜிப்பா அல்லது குர்த்தா அணிவதும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருக்கும். தென்னிந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக வேஷ்டி சட்டையைச் சொல்லலாம். வேஷ்டி அணியும் பொழுது வேஷ்டியின் கரையானது வலதுபுறமாக இருக்க வேண்டும். அதேபோல் கணுக்காலுக்கு மேலே வேஷ்டி இருந்தால் அது அழகான தோற்றத்தைத் தராது. லெதர் ஷூ அல்லது ஸ்னீக்கரை வேஷ்டி அணியும் பொழுது போட்டுக் கொண்டால் அது ஆண்களின் ஆளுமையை அட்டகாசமாக வெளிப்படுத்தும்.

    * பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது எதை செய்யக்கூடாது? எதைச் செய்யலாம்? என்பதை தெரிந்து கொண்டு திருத்தமாக அணியும் பொழுது அவை ஆளுமை தோற்றத்தைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

    * டை அணியும் நேரம் தவிர ஷரட்டின் மேல் பட்டனை போடாமல் இருப்பது அழகான கேஷூவலான தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

    * அதே போல் கூலர்ஸ்களை தலையில் அணிவதை விட ஷர்ட்டில் தொங்க விடுவது பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

    * டையானது பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். பேண்ட்டின் மேலோ அல்லது கீழோ தொங்குவது ஆளுமைத் தோற்றத்தைத் தருவதாக இருக்காது.

    * ஃபார்மல் உடைகளில் பெல்ட் மற்றும் ஷூஸ் மேட்ச்சாக அணியும் பொழுது அவை அட்டகாசமாக கெத்தான தோற்றத்தைத் தரும்.

    * நம் உடல் வாகுக்கு ஏற்றாற்போல் உடை அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    * அதே போல் நிகழ்வுக்கு ஏற்றாற் போன்ற ஆடைகளை அணிவதும் அணிபவருக்கு ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை கூட்டும்.

    * ஆயத்த ஆடையோ அல்லது வாங்கித் தைக்கும் ஆடையோ எதுவாக இருந்தாலும் நம் உடலுக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் ஆடைகளை அணிவதும் மிகவும் உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும்.

    * நாகரீகமான ஆடை என்பதற்காக நமக்கு பொருத்தமில்லாத ஆடையை அணிவது மிகவும் தவறான தேர்வாகும்.

    * ஜீன்ஸ் பேண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றுடன் நேர்த்தியான ஜாக்கெட்டுகளை அணிவதும் கிளாசிக்கான தோற்றத்தை நிச்சயம் தரும் என்று நம்பலாம்.

    * சரியான உடைகளுக்கு சரியான பாதணிகள், கைக்கடிகாரம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அணிவது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

    பேண்ட், சட்டை அணிவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளதா என்பது தெரிந்து கொண்ட யாரும் ஆண்களுக்கென்ன ஒரு சட்டையையும் பேன்ட்டையும் போட்டால் நிமிஷத்தில் தயாராகி விடலாம் என்று இனிமேல் சொல்ல மாட்டார்கள். ‘ஆள் பாதி ஆடை பாதி’யை சிறிதே மாற்றி ‘ஆள் பாதி ஆளுமை பாதி’ என்று சொல்லுமளவுக்கு நாம் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமாகும்.
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
    மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும். அவர்கள் சரும அழகை சீராக்குவதற்கு மாம்பழத்தை கூழாக தயாரித்து பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

    மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம். ஒரு பவுலில் மாம் பழக்கூழை கொட்டி அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழ தோலை உலரவைத்து பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
    வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.
    வைரமானது அணிந்திருப்பவருக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுக்கும் என்று நம்பப்பட்டதால் பழங்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லும் பொழுது வைரங்களை அணிந்து சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    * எப்பொழுதும் வைர மோதிரம், வைர மூக்குத்தி, வைரக்கம்மல்களை அணிந்து கொள்பவராக இருந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முகத்திற்கு ஃபேஷியல் செய்து கொள்வது, பாத்திரம் கழுவுவது மற்றும் கெமிக்கல்கள் கொண்டு வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்ற சந்தர்ப்பங்களில் வைர நகைகளைக் கழற்றி வைத்து விடுவது உத்தமமாகும்.

    * அதே போல நீச்சல் குளத்தில் நீராடும்பொழுதும் வைர நகைகளைக் கழற்றி வைத்து விட வேண்டும். ஏனென்றால், நீரில் கலந்திருக்கும் குளோரினானது வைரத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தலாம்.

    * வைர நகைகளைத் தனித்தனியாக அதற்கென்றே கொடுக்கப்பட்ட பெட்டிகளில் வைத்திருப்பது சிறந்ததாகும். என்னதான் வைர நகைகளாகவே இருந்தாலும் ஒரே பெட்டியில் வைக்கும்பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி சேதமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    * வைர நகைகளை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மென்மையான குளியல் சோப்பைக் கலந்து சாஃப்ட் பிரஷ்ஷினால் சுத்தம் செய்யலாம்.

    * கழுவிய பிறகு மென்மையான துணியினால் துடைத்து சிறிது நேரம் காற்றில் ஆறியபின் அணிந்து கொள்ளலாம்.

    * வீட்டில் வைர நகைகளைச் சுத்தப்படுத்த முடியாதவர்கள் நகைக் கடைகளில் கொடுத்தும் சுத்தம் செய்து கொள்ளலாம்.

    * வைர நகைகளை வருடம் ஒரு முறையாவது நகைக்கடைகளில் கொடுத்து அதன் தரத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    * வைரநகைகள் என்பது நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே செல்வதால் அதில் முதலீடு செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒன்று என்றே சொல்லலாம்.

    * வைர மோதிரங்கள் மற்றும் சிறிய வைரக்கம்மல்கள் பத்தாயிரம் முதலே கிடைக்கின்றன. வைரத்தை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டியவை.

    * 4Cs அதாவது கேரட் வெயிட், கலர் கிரேடு, க்ளாரிட்டி கிரேடு மற்றும் கட்கிரேடு இவற்றை ஆராய்ந்த பின்னரே வைர நகைகளை வாங்க வேண்டும்.

    * வைர நகைகளை வாங்கும் பொழுது அதனுடன் தரப்படும் தரச் சான்றிதழை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் அணியக்கூடிய பேண்ட்டுகளில் அழகிய மாற்றங்களுடன் வசதியாக அணிந்து கொள்ளும் விதத்தில் வந்தவைதான் பலாஸோ பேன்ட்டுகள். அதிலும் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.
    பெல்ட் பலாஸோ:-

    இடுப்பிலிருந்து சிறிது சிறிதாக தளர்வாகத் தொடங்கி கால்களை நெருங்கும் பொழுது அதிகத் தளர்வாக இருக்கும் பலாஸோ பேன்ட்டுகளில் பெல்ட்டுகளானது அதுவும் அதே பேன்ட் துணியிலேயே விதவிதமான வடிவங்களில் வருவது பெல்ட் பலாஸோ என்று அழைக்கப்படுகின்றது.

    பார்டர் பலாஸோ

    இந்த பேன்ட்டுகளின் கீழ்ப்பகுதியில் பார்டர்கள் வைத்து வருபவை பார்டர் பலாஸோக்களாகும். இந்த பார்டர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டவையாகவோ, பிரிண்டுகள் செய்யப்பட்டவையாகவோ, ஜரி, குந்தன் வேலைப்பாட்டுடனோ அல்லது பார்டர்கள் தனியாக வாங்கி இதன் மேல் வைத்து தைக்கப் பட்டவையாகவோ, லேஸ்கள் வைத்து தைக்கப்பட்டவையாகவோ இருக்கும். பார்டர்கள் மெல்லியதாகவும் கிடைக்கும் அதேபோல் முழுங்கால் வரை பார்டர்கள் இருப்பது போன்றும் கிடைக்கும்.

    ஸ்கர்ட் பலாஸோ

    அச்சு அசலாக பாவாடை போன்ற தோற்றத்துடன் இருக்கும் இவற்றை “லாங் ஸ்கர்ட் பலாஸோ” என்றும் அழைக்கிறார்கள். இடுப்புப் பட்டையிலிருந்தே சுருக்குப் பட்டைகள் துவங்குகின்றன. அதிக ஃப்ளேர்களுடன் வரும் இந்த ஸ்கர்ட் பலாஸோ ஷார்ட் குர்த்தியுடன் அணியும் பொழுது மிகவும் அழகாக இருக்கின்றது. ஸ்கர்ட் பலாஸோக்களின் பக்கவாட்டில் குஞ்சலம் மற்றும் சலங்கைகள் தொங்குவது போல் வருவது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது.

    பேன்ட் பலாஸோ

    பேன்ட் அமைப்பில் இருக்கும் இவ்வகை பலாஸோக்களை ஷர்ட்டுகள் மற்றும் குட்டை டாப்புகளுடன் அணியலாம். பெரும்பாலும் பிளெயின் மற்றும் கோடுகள் இருப்பது போன்றே இவை வடிவமைக்கப்படுகின்றன. கோடுகளுடன் வரும் பேன்ட்டிற்கு பிளெயின் நிறத்தில் டாப் அணிவதும், பிளெயினாக வரும் பேன்ட்டிற்கு கோடுகள் போட்ட டாப்பை அணிவரும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    ஃபிளீடட் பலாஸோ

    அதிக ஃபிளீட்டுகளுடன் வரும் இவ்வகை பலாஸோக்கள் குர்த்திகள் மற்றும் டாப்புகளுடன் அணிய ஏற்றவை. டாப்புகளை டக்இன் செய்து இவ்வகை பலாஸோவுடன் அணியும் பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கும்.

    சைட் ஸ்லிட் பலாஸோ

    கணுக்காலிலிருந்து முழங்கால் வரை பக்கவாட்டில் ஸ்லிட்டுகளுடன் வரும் பலாஸோக்கள் இப்பொழுது கல்லூரி மாணவிகளிடையே மிகவும் பிரபலம். குட்டை டாப்புகளுடன் இவற்றை அணியும் பொழுது இது நிச்சயமாக மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பக்கவாட்டில் வரும் ஸ்லிட்டானது சிலவற்றில் குறைந்த அளவு உடையதாகவும் வருகின்றது.

    தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

    * தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

    * வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

    * குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

    * வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

    * படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

    * தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

    * தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.
    ஆயத்த ஆடைகள் (ரெடிமேட்) போல புடவைகளிலும் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது புதுவரவாக உள்ளது. அதிலும், திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.

    மற்ற ஆயத்த ஆடைகளைப் போலவே இவ்வகை ஆயத்தப் புடவைகளும் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சில நொடிகளிலேயே இவற்றை உடுத்திக் கொள்ளும் விதத்தில் தைத்து தயார் நிலையில் இருப்பவை இவ்வகைச் சேலைகள்.

    மேலே இடுப்புப் பட்டையில் அட்ஜஸ்ட் செய்து அணிவது போல் கொக்கியானது கொடுக்கப்பட்டு புடவையின் கீழ்ப்புறம் ஃபிரில்களுடன், தோள்பட்டையில் அமரும் ஃபீளீட்டுகள் கூட அப்படியே அணிந்து கொள்வது போல் ரெடிமேடாக வரும் புடவைகளுக்கு ஏற்றார் போன்ற தைக்கப்பட்ட சோளிகள் பல்வேறு டிசைன்களில் அட்டகாசமாக வருகின்றன.

    நீளமான பாவாடையின் கீழ்ப்புறம் அழகிய ஃபிரில்களானது அதிக சுருக்கங்களுடன் தைக்கப்பட்டு தனியாக உள்ளது. அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் அழகிய கற்கள் பதித்த வேலைப்பாட்டுடன் நெட்டட் சோளிகள் இருக்க பாவாடையின் துணியிலேயே துப்பட்டாவானது மடிப்புகளுடன் சோளியின் முன்புறம் இணைக்கப்பட்டு பக்கவாட்டில் வளைவாகத் தொங்கி சோளியின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை அணியும் பொழுது அவை பார்ப்பதற்கு புடவையை நவீனமாக அணிந்தது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. மிக அழகான வண்ணங்கள் மற்றும் மென்மையான துணி ரகங்களில் வரும் இவற்றை “காக்ரா புடவைகள்” என்றும் அழைக்கிறார்கள்.

    புடவைகளின் கீழ்ப்புறம் மூன்று அடுக்குகளாக ஃபிரில் வைத்து வரும் புடவைகள் பிளெயின் வண்ணத்திலும், பல்வேறு பிரிண்ட்டுகளுடனும், புடவையானது பிளெயின் வண்ணத்திலிருக்க ஃபிரில்கள் பூப்போட்ட டிசைன்களுடனும் இருப்பது போன்றும் தோள்பட்டையில் புடவை மடிப்புகளை இணைத்து அதன் மேல் அழகிய புரோச்சுகள் வைத்து வருபவை அசத்தலாக உள்ளன.

    சோளிகளில் அழகிய வண்ணக் கற்கள், சமக்கிகள், முத்துக்கள் வைத்து செய்யப்படும் வேலைப்பாட்டின் அச்சு அசலாக புடவை மடிப்பின் ப்ரோச்சிலும் வேலைப்பாடுகள் இருப்பது மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

    ரஃபல் புடவைகள் அல்லது ரெடிடுவேர் புடவைகள் என்று அழைக்கப்படும் இவற்றின் பல்லுவும் ஒவ்வொரு விதமாக உள்ளது. புடவைகளில் வரும் ஃபிரில்கள் பல்லுவிலும் நெளியாக வந்து குறுகிய உயரமுடையவையாக இருப்பது புடவைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

    ஸ்கர்ட் போல அணிந்து கொள்வது ஒரு மாடல் என்றால் ரேப் அரவுண்டு மாடல் மற்றொரு வகையாக உள்ளது. இந்தப் புடவைகளில் வரும் வண்ணச் சேர்க்கைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அேத போல் புடவைகளில் வரும் பளபளப்பு கண்ணைக் கவரும் விதமாக உள்ளன.

    மிகவும் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் இவ்வகைப் புடவைகள் ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்தே கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

    தோள்பட்டையில் பல்லுவிற்கு பட்டையாக மடிப்புகள் இல்லாமல் குழாய் போன்று சுருட்டி அதன்மேல் அழகிய வேலைப்பாடுகளுடன் வருவதும் அமர்க்களமாக உள்ளது.

    சோளியானது ஸ்லீவ் லெஸ்ஸாக பிளெயின் நிறத்திலிருக்க அதன்மேல் எம்பிராய்டரி செய்யப்பட்ட கோட்டின் கீழ்ப்புறம் ஃபிரில்கள் இடுப்புவரை தொங்குவது போல் இருக்க அதன்மேல் புடவையை அணிந்து கொள்ளலாம். இவை “த்ரீ பீஸ்” மாடல் என்று அழைக்கப்படுகின்றது.

    இவ்வகை ஆயத்த புடவைகள் அனைத்துமே மிகவும் மென்மையான துணி ரகங்களில் செய்யப்பட்டவையாக இருப்பதால் இவற்றை அணியும் பொழுது அணிந்தவரின் உடல்வாகை ஒல்லியாக காட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    அதேபோல் புடவையின் கலரிலேயே சோளி இருப்பது ஒருவகை என்றால் புடவை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளி இருப்பது மற்றொரு வகை. வெல்வெட் துணிகளில் வேலை பாட்டுடன் சேலைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளிகள் வருவது மற்றொரு வகை. இவ்வகைப் புடவைகள் பெரும்பாலும் அதிக ஃப்ளேர்கள் இருப்பது போன்றே வடிவமைப்படுகின்றன.

    ஸ்லீவ்லெஸ் சோளிக்கு நெக்லஸ் மாடல் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் சிறிய கோட். இதை அணிய விருப்பமில்லை என்றால் தனியாகக் கழற்றி விடலாம். இந்த நெக்லஸ் மாடல் கோட்டை அணியும் பொழுது வேறு கழுத்தணி அணிவதற்கு அவசியமே இருக்காது. இவையும் “த்ரீ பீஸ்” புடவை என்றே அழைக்கப்படுகின்றது.

    கௌன் டைப்பில் வரும் புடவைகளும் புதுவரவே கழுத்திலிருந்து இடுப்பு வரை வேலைப்பாட்டுடன் டாப்பானது இருக்க இடுப்பிலிருந்து தரையைத் தொடும் அளவுக்கு பிளெயின் நிறத்துணியானது ஃப்ளேர்களுடன் டாப்புடன் இணைப்பட்டு பல்லுவும் பட்டாயாகத் தைக்கப்பட்டு அப்படியே அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது. டாப்பில் வேலைப்பாட்டிலேயே இடுப்பில் அணிவதற்கு பெல்ட்டானது கொடுக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் மணிகள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட “ஷ்ரக்கானது” ரெடிமேட் புடவைகளின் மேல் தனியாக அணிந்து கொள்வது போல் வந்திருப்பது புதுமையாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது.


    ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும்.
    தலை முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘பாலிக்கிள்’ எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது.

    நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது.

    இதில் ‘அனாஜன்’ என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள்.

    அடுத்தது ‘காட்டாஜன்’ என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்கு திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

    தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

    வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கிய காரணங்கள்.

    ஆன்ட்ரோஜன் ஹார்மோன், அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளை சுருக்கி வளர்ச்சி பருவத்தை குறைத்துவிடுகிறது.
    பெண்கள் வெளியே சென்றால் கையில் எடுத்து செல்லக்கூடிய கிளட்ச் பேக்- என்பது உலகளவில் பல விதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.
    கிளட்ச் என்பது ஆடம்பரமான தோற்றத்துடன் உருவாக்கப்படும் சிறு பேக் (அ) பர்ஸ் அமைப்பாகும் பெண்கள் வெளியே சென்றால் கையில் எடுத்து செல்லக்கூடிய கிளட்ச் பேக்- என்பது உலகளவில் பல விதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. விதவிதமான மேற்புற அமைப்பு மற்றும் அழகிய வேலைப்பாட்டுடன் வருகின்றன. கிளட்ச் என்பது சிறு செவ்வக வடிவில் ஓரப்பகுதி வளைந்தவாறு அழகிய பிடிங் உள்ளவாறும் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. கிளட்ச் என்பது தற்போது டிசைனர் கிளட்ச் என்றவாறு கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. தோல் மற்றும் உயர்ரக துணிகள் கொண்டு அழகுடன் திகைக்கும் அமைப்பு, கைவினை வேலைப்பாடு என்றவாறு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் தயார் செய்யப்படுகின்றன.

    கைவினை வேலைப்பாட்டுடன் கிளட்ச் பேக்

    ஓவல் வடிவம் உள்ளவாறு சிறு கலைநய பேக் போன்ற அமைப்பின் கைவினை கிளட்ச் உள்ளன. அதாவது ஏதேனும் ஒற்றை வண்ண பின்னணியில் இருபுறமும் தப்கா, நக்‌ஷி மற்றும் கட்தானா கைவினை வேலைப்பாடுகள் செய்யப்பட்டவாறு உள்ளது. அதாவது கையில் ஓர் கம்பீரமான கிரீடம் வைத்திருப்பது போன்ற தோற்றபொலிவுடன் தங்க நிற கம்பிகள் மூலம் மேல் எழுந்தவாறு அழகுடன் நெய்யப்பட்டு உள்ளன. இதில் மலர்கள், கொடிகள், பறவை கூண்டு அமைப்புகள் தங்கநிற ஜொலிப்புடன் உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதன் தலைப்பகுதியில் திறந்து மூட உள்ள அமைப்பு அழகிய மயில் உருவில் தகதகக்கும் தங்க ஜொலிப்புடன் காட்சி தருகிறது.

    பல வண்ண மார்பில் கற்கள் பதியப்பட்ட கிளட்ச்

    சிறு சூட்கேஸ் போன்ற தோற்றத்துடன் காணப்படும் இந்த கிளட்ச் பேக்-ன் மேற்புற அழகை மேம்படுத்த விதவிதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி பல வண்ண மார்பில் கற்கள் மேற்பகுதியில் விதவிதமான வடிவங்களில் ஒட்டப்பட்டிருக்கும். சிறு சிறு கற்கள் ஜொலிக்கும் வடிவில் ஒற்றை வண்ணத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து எடுத்துச்செல்லாம்.

    தங்க நிற பின்னணியில் டைமண்ட் கற்கள் பதித்த கிளட்ச்

    ஜொலிக்கும் அமெரிக்க டைமண்ட் கற்கள் கிளட்ச் பேக்-ன் தலைப்பகுதியில் அழகிய கிரீடம் போன்று இருக்கும். மெல்லிய கம்பிகள் முலம் முழுவதும் பின்னப்பட்ட தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த கிளட்ச் பேக் இரவு நேர பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு எடுத்து செல்லும்போது அதிக ஜொலிப்புடன் அனைவர் கவனத்தையும் ஈர்க்கின்றன.

    உலோக வண்ண பூக்கள் அலங்கரிக்கும் கிளட்ச்

    ஒற்றை வண்ண துணி அமைப்பின் மீது மேம்பட்ட உலோக (மெட்டல்) பூக்கள் வண்ணம் பூசப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளது. அதாவது விதவிதமான பூக்கள் என்பது வண்ணங்கள் வேறுபட்ட வகையில் ஜொலிக்கின்றன. அதாவது தங்க நிறம் மற்றும் பிங்க் நிற பூக்கள் என்பதுடன் பசுமையான வண்ணத்தில் இலைகள் அழகுடன் கிளட்ச் பேக்-ன் மேற்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

    வித்தியாசமான வடிவத்துடன் கூடிய கிளட்ச்கள்

    கிளட்ச் என்பது செவ்வக வடிவில் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டன, தற்போது இதன் வடிவங்கள் மாறுபட்ட இதழ் வடிவில், இதய வடிவில், அரை வட்டம் என்றவாறு பல வடிவங்களில் வருகின்றன. இதழ் மற்றும் இதய வடிவ கிளட்ச் என்பது செந்நிறமாக காட்சி தரும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சிறு சிறு கற்கள் பதியப்பட்டு ஜொலிக்கும் வகையில் இதன் உருவாக்கம் உள்ளது.

    ஜொலிக்கும் வகையிலான பிளைன் கிளட்ச்

    அதிக வேலைப்பாடுகள் இன்றி அதே சமயம் வெள்ளிநிறம், தங்கநிறம், ரோஸ்கோல்ட், ஊதா போன்ற நிறச் சாயல்களுடன் மேற்புற பகுதி ஜொலிக்கின்ற வகையிலான கலைநயப்பணி செய்யப்பட்டு பிளைன் கிளட்ச்சுகள் வருகின்றன. இவற்றின் மூடும் பகுதி வளைந்தபடி முன்புறத்தில் பட்டன்கள் உள்ளவாறு பெரிதாக இருக்கும். அத்துடன் உட்பகுதியில் அதிக இடவசதிகள் செய்யப்படும், பிரிவுகள் உள்ளவாறும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

    எம்பிராய்டரி கிளட்ச் பேக்

    துணியின் மீது பலவிதமான ஓவியங்கள் மற்றும் கலைவடிவங்கள் அழகுற எம்பிராய்டரி செய்யப்பட்ட அதனை கொண்டு கிளட்ச் பேக் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் மூடும் அமைப்பு மடித்தவாறு இருந்தால் அதில் இரட்டை வண்ண சாயல் கொண்டவாறு எம்பிராய்டரி பணிகள் செய்யப்படும். கிளட்ச் பேக் பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக துணையாக உள்ளது.
    தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும்.
    தற்போது ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். தாடி வளர்த்தால் அதனை நேர்த்தியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் முகத்தின் அழகும், ஒட்டுமொத்த தோற்றமும் மாறிப்போய்விடும். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.

    யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.

    தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

    ‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.
    சிறிய கண்களாக இருந்தால் கீழ்ப்பாகத்தில் கெட்டியாக போடுவதற்கு முயற்சிக்கக்கூடாது. மேல்பகுதியை நன்றாக வரைந்து, சிறிய வால் கொடுத்தால் அதுவே பொருத்தமாக அமைந்துவிடும்.
    சிவப்பு நிற அழகுக்கு பெண்கள் ஏங்கிய காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிவப்பை மறந்து, கருப்பு அழகை விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். இருண்ட நிறமும், இருட்டான மேக்கப்பும் தங்களுக்கு பிடித்தமானது என்று பெண்களில் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கருப்பாக தோன்ற `டார்க் ஸ்கின் ஷேட்ஸ்' பயன்படுத்துகிறார்கள். கருப்பை மேக்கப்பில் மட்டுமின்றி, ஆடையிலும் அதிக அளவில் உபயோகிக்கிறார்கள். பொருந்தாது என்று ஒதுக்கப்பட்ட கருப்பு நிற ஆடைகளும் இப்போது புதுப்புது வடிவங்களில் கவர்ச்சியாக வலம் வருகின்றன.

    டார்க் ஸ்கின் கொண்டவர்கள் கூடுதல் அழகுடன் திகழ மேற்கொள்ளவேண்டிய மேக்கப் முறை:

    கருப்பு நிறம் கொண்டவர்கள் பவுண்ட்டேஷனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். பவுண்ட்டேஷனில் ஐவரி, பெய்ஜ், பிரவுன்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு பிரவுன்ஸ் ஷேடுகள் பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின்னாக தோன்ற விரும்புகிறவர்கள் வழக்கமாக பயன் படுத்தும் நிறத்தினோடு, பிரவுன்ஸ் ஷேடு கலந்து பயன்படுத்தவேண்டும்.

    பெண்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் முகத்தில் அழகான உறுப்பு எதுவென்று தெரியும். கவர்ச்சியான அந்த பகுதிக்கு மேக்கப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்டைத்தீட்டவேண்டும். அதாவது புருவம் அழகானதாக தோன்றினால், அதனை ஹைலைட் செய்யவேண்டும். பவுண்ட்டேஷன் பூசும்போது முகத்தின் அனைத்துப்பகுதியிலும் அது துல்லியமாக ஒரே மாதிரி பதிந்தால்தான் முழுஅழகு கிடைக்கும். பவுண்ட்டேஷன் என்பது சருமத்தை சிவப்பாக்குவதற்கு அல்ல. ஸ்கின் டோனை பாதுகாப்பதே அதன் வேலை. தென்னிந்திய பெண்களுக்கு பொதுவாகவே `வாம் டோன் பவுண்ட்டேஷன் பேஸ்' தான் சிறந்தது.

    கண்களை ஜொலிக்கவைத்தால் முகத்தின் அழகு இரட்டிப்பாகும். கண்களை அழகுபடுத்து வதில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைலை கடைப் பிடிப்பார்கள். அந்த ஸ்டைலில் சிறந்ததை அவர்கள் பின்பற்றினால்போதும். அதனை கல்லூரிக்கு செல்லும்போதும், விருந்து-விழாக்களுக்கு செல்லும்போதும் பயன்படுத்தவேண்டும்.

    சிறிய கண்களாக இருந்தால் கீழ்ப்பாகத்தில் கெட்டியாக போடுவதற்கு முயற்சிக்கக்கூடாது. மேல்பகுதியை நன்றாக வரைந்து, சிறிய வால் கொடுத்தால் அதுவே பொருத்தமாக அமைந்துவிடும்.

    அகன்ற கண்களை கொண்டவர்கள் மேலும், கீழும் கெட்டியாக வரைந்து வால்கொடுத்தால் நன்றாக இருக்கும். பெரிய கண்கள் அமையப்பெற்றவர்கள், முக்கியத்துவம் கொடுத்து கண் அழகை மேம்படுத்தவேண்டும். இப்போது பல நிறங்களில் கண் மை கிடைக்கிறது. கலர் பென்சில் பயன்படுத்துகிறவர்களுக்கு அடர்ந்த நீலமும், டீல் கிரீனும் பொருந்தும். ஐஷேடோ பயன் படுத்தும்போது சிங்கள் ஷேடுகள் கொடுக்காமல், சில நிறங்களை கலந்து கொடுத்தால் அதிக அழகு கிடைக்கும்.

    கூந்தல் அலங்காரமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கூந்தல் அலங்காரத்திற்கும், சரும நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் உடல் அமைப்பிற்கும், முக அமைப்பிற்கும் கூந்தல் அலங்காரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. குண்டான உடல்வாகினை கொண்ட பெண்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொண்டால் பொருத்தமாக அமையும். குண்டான முக அமைப்பை கொண்டவர்களும் தலைமுடியை தோள் வரை வெட்டி, அலைபாயும் கூந்தலுடன் வலம் வரலாம். நீளமான கூந்தலை கொண்டவர்கள் பிடித்த மாதிரி கூந்தலை வெட்டிக்கொண்டு, ஒரு பக்கமாக வகிடு எடுத்து இருபக்கமாகவும் முன்னால் தூக்கிப் போட்டுக்கொள்ளலாம்.

    சிறிய முக அமைப்பை கொண்டிருந்தால் சுருண்ட கூந்தலுக்கும், ஸ்ட்ரைட் கூந்தலுக்கும் `பாய்கட்' பொருத்தமாக இருக்கும். கூந்தலை இறுக்கிப்பிடித்து கட்டிவைத்தாலும் இவர்களுக்கு அழகு கிடைக்கும். ஓவல் ஷேப் முக அமைப்பு கொண்டவர்களுக்கு `லோ ஷைடு பன் ஹேர் ஸ்டைல்' பொருந்தும். முடியை முழுவதுமாக வாரி எடுத்து பன் செய்து வட்டமாக கட்டும் முறை சிறந்தது.

    புஷ்டியான கன்னங்களை கொண்டவர்கள், பின்புறமாக வாரி சீவி, போனிடைல் போட்டுக்கொள்ளலாம். சதுரமான முக அமைப்பை கொண்டவர்கள் கூந்தலை அலையாக அவிழ்த்துவிடுவது பொருத்தமாக இருக்கும். நீளவாக்கில் சிறிய முகமாக இருந்தால் ஸ்ட்ரெய்ட் செய்து தோள் வரை பாப் செய்துகொள்ளலாம்.

    பெண்களுக்கு உதட்டு அலங்காரம் இன்றியமையாதது. லிப்ஸ்டிக்கை பொறுத்தவரையில் அது அவரவர் விருப்பத்திற்கு உரியது. ஆனாலும் அதில் சில பரி சோதனை முயற்சிகளை மேற்கொண்டால் அது உதடு களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் என்பது உண்மைதான். கருப்பு நிறம் கொண்ட பெண்களுக்கு அடர் நிறத்திலான லிப்ஸ்டிக் பொருந்தாது என்ற எண்ணம் இப்போது மாறிவிட்டது. கருப்பு நிற பெண்களும் அடர் நிறத்திலான லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தலாம்.

    டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு, சிவப்பு நன்றாக பொருந்தும். சிவப்பில் பலவிதமான ஷேடுகள் இருந்தாலும் ரூபி ரெட் நன்றாக இருக்கும். டார்க் ஸ்கின் கொண்டவர்களுக்கு நியான் ஆரஞ்சும் இணக்க மானது. டீப் பர்கண்டியும் பொருந்தும். இவைகளில் மேட் பினிஷ்க்கு பதில் கிரீம் பினிஷை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    மேட் பினிஷ் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மெஜந்தா ஷேடு அதிகம் பொருந்தும். சாக்லெட் மேட் பினிஷையும் பயன்படுத்தலாம். டார்க் ஸ்கின் டோன் கொண்டவர்கள் உதடுகளில் லிப் லைனரால் வரைந்து விட்டு லிப்ஸ்டிக் போட்டால் கூடுதல் கவர்ச்சி கிடைக்கும்.

    கருப்பு நிறம் கொண்ட பெண்கள் பளிச் நிறங்களின் மீது பாராமுகமாக இருக்கக்கூடாது. மாறாக எல்லா நிறமும் தனக்கும் பொருந்தும் என்று தன்னம்பிக்கைகொள்ள வேண்டும். அனைத்து சரும வகையினருக்கும் ஐவரி பொருத்தமாக இருக்கும். டார்க் ஸ்கின் வகையை சேர்ந்தவர்கள் புடவையானாலும், மாடர்ன் டிரஸ் என்றாலும் கண்களை மூடிக்கொண்டு ஐவரியை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சரும பிரிவினருக்கும் கருப்பு நிற உடைகளும் பொருத்தமாகத்தான் இருக்கும்.

    டார்க் ஸ்கின் கொண்டவர்கள் மஞ்சள் நிற உடைகளை தவிர்க்கவேண்டும். அதே நேரத்தில் மஞ்சள் நிற ஷேடு கொண்ட உடைகளை கருப்பு நிறமானவர் களுக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பரிந்துரைக் கிறார்கள். அதன் மூலம் அவர்களது அழகு மெரு கேறுகிறது.

    தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வெளிப் படுத்த விரும்பும் கருப்பு நிற பெண்கள், நீல நிற ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகை சருமத்தினருக்கும் லாவெண்டர் பொருந்தும். இது சுவீட் அன்ட் சிம்பிள் என்று வர்ணிக்கப்படுவதாகும். டார்க் ஸ்கின் கொண்டவர்கள் அணியும் ஆடைகளில் ஏதாவது ஒன்று வெள்ளை நிறத்தில் இருப்பது சிறப்பு. அப்படியிருந்தால் அவர்களது தன்னம்பிக்கை இரட்டிப்பாகும்.

    கருப்பு நிறம் கொண்டவர்கள் மணப்பெண் அலங்காரத்திலும் கவலைப்படவேண்டியதில்லை. மேக்கப் நிபுணர்கள் `உங்களுக்கு பிடித்த உடைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள். அதற்கு பொருத்தமாக உங்கள் மேக்கப் அலங்காரத்தை நாங்கள் மாற்றிக்காட்டுகிறோம்' என்கிறார்கள். பொருத்தமாக இருக்காது என்று நினைத்து நீங்கள் எதையும் தவிர்க்க வேண்டாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். கருப்பு நிறம் கொண்டவர்கள் அதிக ஜொலிப்புகொண்ட புடவைக்கு பதில், குறைந்த அளவு ஜரிகை கொண்ட புடவையை தேர்ந்தெடுத்தால் அழகு அதிகரிக்கும்.
    ×