என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • இளமையுடம் நீண்ட நாட்கள் இருக்க வாரம் ஒருமுறை இந்த பேஸ் பேக் போடுங்கள்.
    • முட்டையை வைத்து எப்படியெல்லாம் உங்கள் அழகை பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    முட்டையில் உள்ள புரோட்டீன் நல்ல மாய்ஸ்சுரைசராகவும், சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்க உதவும். எனவே நீங்கள் வெள்ளையாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வாரம் ஒருமுறை முட்டை கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய முட்டையை வைத்து எப்படியெல்லாம் உங்கள் அழகை பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    * முல்தானிமிட்டி இரண்டு ஸ்பூனுடன் முட்டையில் வெள்ளையை கலந்து பேஸ்ட் போல் கலக்கிக்கொள்ளுங்கள். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனால் முகப்பரு நீங்கி சரும நிறத்தை பொலிவாக்கும்.

    * முட்டையில் வெள்ளைப் பகுதியை தனியாக எடுத்து நன்கு கலக்குங்கள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் சீராகத் தடவுங்கள். 20 நிமிடங்கள் காத்திருந்து கழுவினால் சீரற்ற முக நிறம் சமமாகும். வாரம் இரண்டு முறை செய்யுங்கள்.

    * முட்டையில் வெள்ளையில் மைய அரைத்த கேரட் ஒன்று அதோடு 3 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனால் முகச்சுருக்கம், கருவளையம் போன்றவை நீங்கி பளிச்சென தெரியும்.

    * தேன், தயிர் ஒரு ஸ்பூன் அதோடு முட்டை வெள்ளை பகுதி சேர்த்து நன்குக் கலந்து கொள்ளுங்கள். அதை முகம் மட்டுமன்றி கழுத்திலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை குளிக்கும் முன் செய்தால் சிறப்பு. இதனால் முகம் ஈரப்பதத்துடன், வெயில் தாக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

    * ஒரு பௌலில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தின் மேல் தடவ வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

    * 2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையினால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுத்து, சருமத்தை வெள்ளையாக்கும்.

    • எலுமிச்சம்பழ சாற்றை தடவினால் தழும்புகள் குறையும் என்ற கருத்து நிறைய பேரிடம் இருக்கிறது.
    • ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது.

    பெண்கள் முக அழகை மெருகேற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். செயற்கை அழகு சாதன பொருட்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒருசில பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அது பற்றி பார்ப்போம்.

    1. சூடான நீர்: ஒருபோதும் சூடான நீரை கொண்டு சருமத்தை கழுவக்கூடாது. மேலும் சூடான நீரில் இருந்து வெளிப்படும் ஆவியையும் நுகரக்கூடாது. அது முகத்தில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் நீரிழப்புக்கு உள்ளாகும். சூடான நீர் சருமத்தின் உணர் திறனையும் பாதிக்கும். சருமத்தை உலர வைப்பதோடு, அதில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய்த்தன்மையையும் அப்புறப்படுத்தி விடும். அதற்காக குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவுவதும் கூடாது. அது சருமத்தை நன்றாக சுத்தம் செய்யாது. குளிர்ந்த நீர் சரும துளைகளை இறுக்கமாக்கிவிடும். மேலும் சருமத்தில் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை படரவைத்துவிடும். வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவுவதுதான் நல்லது.

    2. பற்பசை: சிலர் முக பருக்களை போக்குவதற்காக பல் துலக்க பயன்படுத்தப்படும் பற்பசையை உபயோகிக்கிறார்கள். அதில் டிரைக்ளோசன் உள்ளிட்ட ரசாயனங்கள் இடம்பெற்றிருக்கும். சில பற்பசைகளில் ஆல்கஹால்லும் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். சரும அழற்சிக்கும் வித்திடும். காயங்களுக்கும் வழிவகுக்கும். சருமத்தில் திட்டுகள் படர்ந்து கருமை நிறமாக மாறும் நிலையை ஏற்படுத்தும். இதற்கு ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று பெயர். இந்த பாதிப்பு நேர்ந்தால் சருமம் பாழாகிவிடும்.

    3. பேக்கிங் சோடா: சிலர் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதற்கு பேக்கிங் சோடா பயன்படுத்துவதுண்டு. பொதுவாக இது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், சருமத்தை எரிச்சலூட்டும். பேக்கிங் சோடாவை நேரடியாக சருமத்தில் தடவும்போது எந்த பாதிப்பும் வெளிப்படையாக தெரியாது. சில நிமிடங்கள் கழித்துதான் எதிர்வினை புரிய தொடங்கும். சிலருக்கு சரும வெடிப்பு, சிவத்தல், எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இதுவும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச் சினையை உருவாக்கி சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    4. எலுமிச்சை சாறு: எலுமிச்சம்பழ சாற்றை தடவினால் தழும்புகள் குறையும் என்ற கருத்து நிறைய பேரிடம் இருக்கிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பாதிப்புக்கு வித்திட்டு சருமத்தை கருமையாக்கிவிடக்கூடும்.

    5. ஆப்பிள் சைடர் வினிகர்: இதுவும் சருமத்திற்கு எரிச்சலூட்டும் அமிலம் கொண்டது. இது சருமத்தில் காயங்கள், வடு, தழும்புகள், அதிக நிறமி, கருமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    • கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார்.
    • பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

    புதுடெல்லி :

    கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடனான பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது. இந்த சந்திப்பில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ருபாலா, நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார். அத்துடன் இந்த பிரிவினருக்கு நிறுவன கடன் எவ்வாறு வழங்க முடியும்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிசான் கடன் அட்டை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கிராமப்புற வருவாயை பெருக்கும் வகையில், கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

    விவசாய கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்த வங்கிகளுக்கு பொதுத்துறை வங்கிகள்தான் நன்கொடையாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய மற்றொரு அமர்வில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு நன்கொடை திரட்டி உதவ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடியது.
    • வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக அளவில் கவனிப்புத் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பகுதிக்கு நாம் தேவையான அளவு கவனம் செலுத்துவதில்லை. இதனால் விரைவிலேயே வீங்கிய கண்கள், கரு வளையங்கள் மற்றும் சோர்வான கண்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    எனவே, உங்கள் கண்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நீங்கள் இதுவரை எந்த சீரமும் உபயோகிக்கவில்லை என்றால் வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    கரு வளையங்கள் ஏற்பட்ட கண்களுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது. ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக்கி கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களைச் சரி செய்து சுருங்கிய சருமத்தை சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணெயில் உள்ள ரெட்டினோல் மற்றும் வைட்டமின் ஈ கண்களின் கீழ் உள்ள கருவளையங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையங்களைச் சரி செய்து சருமத்தினை புத்துயிர் பெறச் செய்ய உதவுகிறது.

    7 தேக்கரண்டியளவு இனிப்பு பாதாம் எண்ணெய், 5 தேக்கரண்டியளவு ரோஸ்ஷிப் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய் எடுத்து பாட்டிலில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஷேக் செய்து கொள்ளுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்பு இந்த கலவையை எடுத்து மெதுவாக கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள். இதனை இரண்டு வாரம் தொடர்ந்து செய்வதினால் நல்ல மாற்றத்தினை விரைவில் காணலாம்.

    • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே ‘பிளீச்சிங்’.
    • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    கடலை மாவு பிளீச்

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

    தயிர் - 2 தேக்கரண்டி

    பாதாம் - 5

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

    புளி

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

    வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

    சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

    வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

    • சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • காம்பினேஷன் சருமத்திற்கு லேசான அழகு சாதனப் பொருட்கள் ஏற்றதாக இருக்கும்.

    சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரந்து, எப்போதும் எண்ணெய் பசையோடு இருக்கும் சருமத்தை 'ஆயில் சருமம்' என்கிறோம். மிகவும் குறைவான எண்ணெய் பசை கொண்ட சருமத்தை 'வறண்ட சருமம்' எனக் கூறுகிறோம். இவை இரண்டும் கலந்த கலவை தான் 'காம்பினேஷன் சருமம்'. இவ்வகை சருமம் கொண்டவர்களுக்கு பெரும்பாலும் 'T' சோன் என்று அழைக்கப்படும் இடமான நெற்றி, மூக்கு மற்றும் சில இடங்களில் அதிக எண்ணெய் பசையோடும், இரண்டு கன்னங்களிலும் எண்ணெய் பசை இல்லாமல் சருமம் வறண்டும் காணப்படும். காம்பினேஷன் சருமம் ஏற்படுவதற்கு பருவகால மாற்றமும், மரபியலும், ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றமும் காரணமாகும்.

    அறிகுறிகள்: நெற்றி மற்றும் மூக்குப் பகுதிகள் பளபளப்பாக இருக்கும். கன்னம், தாடை பகுதிகள் வறண்டு காணப்படும். முகப்பருக்கள் அடிக்கடி உண்டாகும். மூக்கு, நெற்றி மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள சருமத் துளைகள் பெரியதாக இருக்கும். மேக்கப் போட்ட சிறிது நேரத்திலேயே, முகம் முழுவதும் திட்டுத் திட்டாக காட்சியளிக்கும். சருமம் கோடைகாலத்தில் அதிக எண்ணெய் பசையோடும், குளிர்காலத்தில் மிகுந்த வறட்சியோடும் இருக்கும்.

    பராமரிப்பு: காம்பினேஷன் சருமத்தை பாதுகாப்பதற்கு காலை, இரவு என இரண்டு நேரங்களுக்கும் தனித்தனியான பராமரிப்பு முறைகள் உண்டு.

    அவை: காலை: 1. முதலில் 'கிளென்சர்' எனப்படும் கிரீமை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் 'டோனர்' கொண்டு முகத்தில் மீதமுள்ள எண்ணெய்த் தன்மையை நீக்க வேண்டும். இதன்மூலம் சருமத்தின் அமில-கார சமநிலை பாதுகாக்கப்படும். இதற்கு ஆல்கஹால் கலக்காத டோனரை உபயோகிப்பது நல்லது.

    2. மேக்கப் பொருட்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். காம்பினேஷன் சருமத்திற்கு லேசான அழகு சாதனப் பொருட்கள் ஏற்றதாக இருக்கும். பவுண்டேஷன் மற்றும் கன்சீலரை, எண்ணெய் இல்லாத கலவையாகப் பார்த்து வாங்க வேண்டும்.

    பொதுவான பராமரிப்பு முறைகள்:

    1) சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    2) எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு ஏற்றவாறு பல அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. உங்கள் முகத்தில் எந்தப் பகுதியில் எந்தவித சருமம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றவாறு தனித்தனியே இந்தப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

    • தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும்.
    • பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது.

    பேன்கள் நமது தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் முடியுடன் ஓட்டிக்கொள்கிறது. மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேன் முடியின் வழியாக மற்றொருவருக்கு பரவுகிறது.

    பேன்கள் கருப்பு, பழுப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

    பேன்கள் 3 வகை பேன்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. பேன்கள் மற்றொருவருக்கு மாற படுக்கைகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்களால் முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊறவைத்து கழுவவும். இதனால் பேன்களை அகற்றி பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

    தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது போன்களை அழிக்க உதவும். குறைந்தது அரைமணி நேரம் கழித்து முடிக்கு அடியில் இருக்கும் பேன்கள் வெளியே வரும். இப்போது மெல்லி குறுகிய சீப்பு கொண்டு முடியை சீவவும். இதனால் அனைத்து பேன்களும் வெளியே வரும்.

    அத்தியாவசிய எண்ணெயில் நச்சுகள் உள்ளன, அவற்றை நேரடியாக முடிக்கு பயன்படுத்தக்கூடாது. இவை மற்ற எண்ணெய்களுடன் கலக்கப்பட வேண்டும். தேயிலை மர எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், வேம்பு, யூகலிப்டஸ், மிளகுத்தூள், ஜாதிக்காய் எண்ணெய் போன்ற எண்ணெகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து இந்த எண்ணெயில் ஏதேனும் ஒன்றை தலைமுடிக்கு தடவி 10 மணிநேரம் ஊறவிட்டு விடுங்கள். பின்னர் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

    • இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
    • பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை, சலங்கை, கொலுசு போன்றவை கால்களின் கணுக்கால் பகுதியில் அணியப்படும் அணிகலன்கள் ஆகும். இவை அளவிலும் பயன்பாட்டிலும் சற்று மாறுபடும். தண்டை தடிமனாக இருக்கும். இது 'சிலம்பு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிலம்பை மையமாக வைத்தே, 'சிலப்பதிகாரம்' எனும் தமிழ் இலக்கியம் உருவாக்கப்பட்டது.

    உலக அளவில் இதன் வரலாற்றை பார்க்கும் போது, மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'தண்டை' போன்ற அணிகலன்களை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. பழங்கால எகிப்தியர்களும், கணுக்காலில் ஆபரணங்கள் அணிந்திருந்ததாக குறிப்பு உள்ளது. செல்வந்தர்கள் தங்கள் செல்வ செழிப்பை காட்டுவதற்காக, தண்டையில் விலை உயர்ந்த கற்களைப் பதித்து அணிந்திருந்தார்களாம்.

    பழங்காலத்திலே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த பெண்கள், தங்கள் கால்கள் இரண்டிலும் அணிகலன்கள் அணிந்து, அதனை ஒரு சங்கிலியால் இணைத்துக் கொண்டு நடந்தார்களாம். கால்களை அகற்றி நடக்காமல், குறுகிய அடிகள் எடுத்து வைத்து நடப்பதற்கான பயிற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. கால்களில் அணியும் அணிகலன்கள் வெள்ளியால் செய்யப்பட்டவை. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். பண்டைய காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே காலில் சலங்கை கொண்ட ஆபரணங்கள் அணிந்தனர். இதன்மூலம் ஒரு பெண் திருமணமானவரா, ஆகாதவரா என்பதை அணிகலன் எழுப்பும் சத்தத்திலே அறிந்து கொண்டனர்.

    தண்டையானது ஈயம் மற்றும் தாமிரத்தால் செய்யப்படுகிறது. ஈயம் மற்றும் தாமிரம் இரண்டையும் முறுக்கி செய்வதால் 'முறுக்கு தண்டாய்' எனவும் அழைக்கப்படுகிறது. தண்டை, குழந்தைகளின் கால் நரம்புகளை பலப்படுத்துகிறது. பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை அணியும் முறை மலைவாழ் மக்களின் கலாசாரத்தில் இன்றும் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தண்டை அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சினையை தீர்க்கலாம். மேலும் இது கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல் திறனையும் தூண்டிவிடுகிறது.

    குதிகால் நரம்பினைத் தண்டை தொட்டுக் கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க முடியும்.

    • வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
    • அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.

    உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும். வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு. கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும். வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    • அதிக நேரம் நம்மை சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
    • சன் ஸ்கிரீன் கிரீமை மற்ற கிரீமைப் போன்று சிறிதளவு எடுத்து தடவுவது பயனற்றது.

    சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், நமது சருமத்தில் ஊடுருவுவதால் ஏற்படும் எரிச்சல், தோல் சுருக்கம், தோல் கருத்தல், சிறு சிறு கொப்புளங்கள் முதலானவற்றைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக 'சன் ஸ்கிரீன்' செயல்படுகிறது. இது கிரீம், லோஷன், ஜெல், பாம் மற்றும் ஸ்பிரே என பல விதங்களில் கிடைக்கிறது. அதனைப் பற்றிய சில தகவல்களை இந்தத் தொகுப்பில் காண்போம்.

    சன் ஸ்கிரீனில் குறிப்பிடப்படும் எஸ்.பி.எப் (SPF) என்பது, புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களை எந்த அளவு மற்றும் எவ்வளவு நேரம் பாதுகாக்கும் என்பதைக் குறிக்கும் காரணியாகும். உதாரணமாக எஸ்.பி.எப் 30 என்பது 96.7 சதவீதமும், எஸ்.பி.எப் 50 என்பது 98 சதவீதமும் புற ஊதா கதிர்களின் பாதிப்பைத் தடுக்கும்.

    எப்படிப்பட்ட சன் ஸ்கிரீன் கிரீமை தேர்ந்தெடுக்க வேண்டும்?

    சன் ஸ்கிரீன் கிரீமை வாங்கும்போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது, அதன் ஆயுட்காலம். அதிக நேரம் நம்மை சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தண்ணீர் படும்போது எளிதில் கரையாதவண்ணம், தண்ணீர் புகா சன் ஸ்கிரீனை வாங்க வேண்டும்.

    சன் ஸ்கிரீன் கிரீமை மற்ற கிரீமைப் போன்று சிறிதளவு எடுத்து தடவுவது பயனற்றது. மாறாக அதிகளவு எடுத்து வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும். அப்பொழுது தான் அது சருமத்தில் ஊடுருவி பாதுகாப்பை அளிக்கும்.

    மேலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சன் ஸ்கிரீனைத் தடவ வேண்டும். அதிக நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

    எந்த வகை சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்?

    1 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் எஸ்.பி.எப் 50 உடன், 100 சதவீதம் மினரல் உள்ள சன் ஸ்கிரீனும், 6 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் சாதாரண எஸ்.பி.எப் 50 சன் ஸ்கிரீனும், 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் ஈரப்பதத்தை அதிகரிக்கும் அன்சீன் எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 25 முதல் 35 வயது உள்ளவர்கள் ஜிங்க் கலந்த, 100 சதவீதம் மினரல் உள்ள எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலர் கரெக்ட்டிங் எனப்படும் சிசி எஸ்.பி.எப் 35 சன் ஸ்கிரீனும், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் எஸ்.பி.எப் 30-ல் சீரம் வகை சன் ஸ்கிரீன் மற்றும் எஸ்.பி.எப் 40-ல் பட்டர் வகை சன் ஸ்கிரீனும், 60 வயதை கடந்தவர்கள் மாய்ஸ்சுரைஸ் வகையில் எஸ்.பி.எப் 40 வகை சன் ஸ்கிரீனும் பயன்படுத்தலாம்.

    • தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள் தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகளை குறைக்கும்.
    • கூந்தல் வளர்ச்சி அதிகரித்து எளிதில் உடையாத வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் மாறும்.

    சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது முக்கியம். இதற்கு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய். தாமரையை நேரடியாகப் பயன்படுத்துவதை விட, எண்ணெயாகப் பயன்படுத்தும் போது, சருமத்தில் எளிதில் ஊடுருவும்.

    இந்த எண்ணெய் தாமரை மலரை மட்டுமின்றி, விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரும பராமரிப்புக்குத் தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. தாமரை எண்ணெய்யில் உள்ள ஒலிகோசாக்கரைடு, சரும செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. சருமத்தின் இளமைக்கு அவசியமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க உதவும்.

    சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இதனால், செல்கள் புத்துயிர் பெறும். முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகள் குறையும். தாமரை எண்ணெயை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெயை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.

    தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். கூந்தல் எளிதில் உடையாத வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் மாறும். தாமரையில், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.

    தலை முடிக்கு இயற்கை சாயம்

    ஒரு டம்ளர் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் பிளாக் டீ இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் தூள் உப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை ஆற வைக்கவும். தலைக்கு குளித்தவுடன் இதை முடியில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இது இயற்கையான தலைமுடி சாயமாக பயன்படும்.

    சாக்லெட் லிப் பாம்

    தேன்மெழுகு 2 டீஸ்பூன், கோகோ பவுடர் 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், பெப்பர்மிண்ட் எண்ணெய் சில துளிகள் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடுபடுத்தவும். அதை விட சிறிய பாத்திரத்தில் தேன்மெழுகைப் போட்டு சூடான தண்ணீரின் மேல் வைக்கவும். தேன்மெழுகு உருகியதும், அதில் கோகோ பவுடரைக் கொட்டி நன்றாகக் கலக்கவும். பின்பு பாதாம் எண்ணெய், பெப்பர்மிண்ட் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலந்து ஆற வைக்கவும். ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி பத்திரப்படுத்தவும். இதை தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

    • கவரிங் நகைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
    • கவரிங் நகைகளைத் தவிர்த்து பின்வரும் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணியலாம்.

    நகைகளை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. பலவகையான உலோகங்களால் ஆன நகைகளை அணிந்தாலும், தங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பு பெண்களுக்கு இன்று வரை குறையவில்லை. விலை உயர்வு, பாதுகாப்பு போன்ற காரணங்களால், தங்கத்துக்கு மாற்றாக கவரிங் நகைகள் அணிவார்கள். ஆனால் இவ்வகை நகைகள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும பாதிப்புகளை அதிகரிக்கும். இவர்கள் கவரிங் நகைகளைத் தவிர்த்து பின்வரும் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணியலாம்.

    வெள்ளி: தற்போது தங்க நகைகளுக்கு நிகராக, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட நகைகள் தங்க முலாம் பூசப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு தங்கத்தைப் போலவே இருப்பதால் இவற்றுக்கு மவுசு அதிகம். வெள்ளி, தங்கத்தை விட விலை குறைவானது. வெள்ளியில், திருமணத்திற்கு அணிவதற்கு ஏற்ற பிரமாண்ட நகைகள் முதல் தினசரி அணியும் எளிய டிசைன் நகைகள் வரை கிடைக்கின்றன.

    முத்து: இயற்கையாக கிடைக்கும் முத்துக்கள் சற்றே விலை உயர்ந்தவை. இவற்றை போலவே தற்போது செயற்கை முத்துக்களும் கிடைக்கின்றன. இவற்றை அணிந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாகவும் இருக்கும்.

    கண்ணாடி நகைகள்: பழங்காலத்தில் இருந்தே அணிந்து வரும் நகைகளில் கண்ணாடியால் தயாரிக்கப்படும் நகைகளும் ஒன்று. வளையல்கள் மட்டுமில்லாமல் கழுத்து மற்றும் காதணி வகைகளும் தற்போது கண்ணாடியில் கிடைக்கின்றன. இவற்றை அணிவதிலும், பராமரிப்பதிலும் சற்றே கவனமாக இருக்க வேண்டும்.

    பேஸ் மெட்டல்: 'பேஸ் மெட்டல்' என்று சொல்லப்படும் பித்தளை, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களால் ஆன நகைகளை அணியலாம். இவற்றை தங்க முலாம் பூசியும், அவற்றின் அசல் நிறத்திலும் அணிவது நேர்த்தியாக இருக்கும். உலோகங்களின் அசல் நிறத்திலேயே நகைகளை அணியும்போது, வித்தியாசமாக காணப்படுவதோடு வெஸ்டர்ன் மற்றும் இந்தோ வெஸ்டர்ன் போன்ற ஆடை வகைகளுக்குப் பொருத்த மாகவும் இருக்கும்.

    டெரகோட்டா: தற்போது டிரெண்டில் இருப்பது டெரகோட்டா நகைகள்தான். இவை களிமண்ணில் தயாரிக்கப்படும் நகைகள். கைவினை கலைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மூலம் டெரகோட்டா நகைகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இவை மாடர்ன் ஆடைகள் முதல் சல்வார், புடவை என அனைத்து ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

    குவில்லிங் நகைகள்: பல வண்ண காகித சுருள்கள் மூலம் தயாரிக்கப்படுபவை குவில்லிங் நகைகள். கல்லூரி மாணவிகள் முதல் அனைவராலும் அதிகம் விரும்பி அணியப்படும் நகைகளில் ஒன்றாக இவை உள்ளது. காகிதத்தால் செய்யப்படுவதால் விலையும் குறைவு.

    ×