என் மலர்

  இயற்கை அழகு

  சன் ஸ்கிரீன்: தெரிந்து கொள்ள வேண்டியவை
  X

  'சன் ஸ்கிரீன்': தெரிந்து கொள்ள வேண்டியவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிக நேரம் நம்மை சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
  • சன் ஸ்கிரீன் கிரீமை மற்ற கிரீமைப் போன்று சிறிதளவு எடுத்து தடவுவது பயனற்றது.

  சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், நமது சருமத்தில் ஊடுருவுவதால் ஏற்படும் எரிச்சல், தோல் சுருக்கம், தோல் கருத்தல், சிறு சிறு கொப்புளங்கள் முதலானவற்றைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக 'சன் ஸ்கிரீன்' செயல்படுகிறது. இது கிரீம், லோஷன், ஜெல், பாம் மற்றும் ஸ்பிரே என பல விதங்களில் கிடைக்கிறது. அதனைப் பற்றிய சில தகவல்களை இந்தத் தொகுப்பில் காண்போம்.

  சன் ஸ்கிரீனில் குறிப்பிடப்படும் எஸ்.பி.எப் (SPF) என்பது, புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களை எந்த அளவு மற்றும் எவ்வளவு நேரம் பாதுகாக்கும் என்பதைக் குறிக்கும் காரணியாகும். உதாரணமாக எஸ்.பி.எப் 30 என்பது 96.7 சதவீதமும், எஸ்.பி.எப் 50 என்பது 98 சதவீதமும் புற ஊதா கதிர்களின் பாதிப்பைத் தடுக்கும்.

  எப்படிப்பட்ட சன் ஸ்கிரீன் கிரீமை தேர்ந்தெடுக்க வேண்டும்?

  சன் ஸ்கிரீன் கிரீமை வாங்கும்போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது, அதன் ஆயுட்காலம். அதிக நேரம் நம்மை சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தண்ணீர் படும்போது எளிதில் கரையாதவண்ணம், தண்ணீர் புகா சன் ஸ்கிரீனை வாங்க வேண்டும்.

  சன் ஸ்கிரீன் கிரீமை மற்ற கிரீமைப் போன்று சிறிதளவு எடுத்து தடவுவது பயனற்றது. மாறாக அதிகளவு எடுத்து வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும். அப்பொழுது தான் அது சருமத்தில் ஊடுருவி பாதுகாப்பை அளிக்கும்.

  மேலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சன் ஸ்கிரீனைத் தடவ வேண்டும். அதிக நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

  எந்த வகை சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்?

  1 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் எஸ்.பி.எப் 50 உடன், 100 சதவீதம் மினரல் உள்ள சன் ஸ்கிரீனும், 6 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் சாதாரண எஸ்.பி.எப் 50 சன் ஸ்கிரீனும், 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் ஈரப்பதத்தை அதிகரிக்கும் அன்சீன் எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 25 முதல் 35 வயது உள்ளவர்கள் ஜிங்க் கலந்த, 100 சதவீதம் மினரல் உள்ள எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலர் கரெக்ட்டிங் எனப்படும் சிசி எஸ்.பி.எப் 35 சன் ஸ்கிரீனும், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் எஸ்.பி.எப் 30-ல் சீரம் வகை சன் ஸ்கிரீன் மற்றும் எஸ்.பி.எப் 40-ல் பட்டர் வகை சன் ஸ்கிரீனும், 60 வயதை கடந்தவர்கள் மாய்ஸ்சுரைஸ் வகையில் எஸ்.பி.எப் 40 வகை சன் ஸ்கிரீனும் பயன்படுத்தலாம்.

  Next Story
  ×