search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kisan Credit Card"

    • 3 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

    அம்பை:

    அம்பை வட்டாரம் வெள்ளாங்குளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அம்பை ஒன்றியக்குழு தலைவர் சிவணுபாண்டியன் என்ற பரணி சேகர் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றி வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் ஆலோசனை பேரில் நடைபெற்ற விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன், அம்பை வட்டாரத்தில் வெள்ளாங்குளி, அயன்திருவாலீஸ்வரம் மற்றும் அடையக்கருங்குளம் ஆகிய 3 கிராம பஞ்சாயத்துகள் இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கிராம பஞ்சாயத்துகளில், ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மற்ற இரு கிராம பஞ்சாயத்துகளிலும் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்கசரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார்.
    • பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

    புதுடெல்லி :

    கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடனான பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது. இந்த சந்திப்பில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ருபாலா, நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார். அத்துடன் இந்த பிரிவினருக்கு நிறுவன கடன் எவ்வாறு வழங்க முடியும்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிசான் கடன் அட்டை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கிராமப்புற வருவாயை பெருக்கும் வகையில், கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

    விவசாய கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்த வங்கிகளுக்கு பொதுத்துறை வங்கிகள்தான் நன்கொடையாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய மற்றொரு அமர்வில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு நன்கொடை திரட்டி உதவ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

    ×