என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும்.
    • மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

    ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

    விதம் விதமான மெஹந்தி டிசைன்கள் குஜராத்தி மெஹந்தி டிசைன்: நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது.

    அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது. பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது.

    இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது. கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு கிளிட்டர் மெஹந்தி பரிந்துரைக்கப்படும். உடைக்கு மேட்ச்சாக ஜிகினா கலந்து பூக்கள், டாட்டூ போல பெரிய டிசைன்களாக வரைவதுதான் இதன் சிறப்பு. பார்ட்டி பிரியர்கள் அதிகம் விரும்பி போட்டுக் கொள்வதும் இந்த ஒரு நாள் மெஹந்திதான்!

    பிளாக் மெஹந்தி: இது இஸ்லாமிய நாடுகளில் பிரபலம். பூக்கள் நிறைய கொண்ட டிசைனில் வெளிக்கோடுகள் கருப்பு நிறத்திலும், உள் பக்கம் சிவப்பு நிறத்திலுமாக வரைவார்கள். கருப்பு-சிவப்பு காம்பினேஷனில் அந்த டிசைன் கண்களைக் கவரும். எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் யாருக்கும் அதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. எனவே, ரெடிமேட் மெஹந்தி கோன்களையே உபயோகிக்கிறார்கள்.

    ரெடிமேட் கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

    * லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

    * மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது.

    * இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய Para Phenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

    மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

    * சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், பொதுவாகவே ரெடிமேட் மெஹந்தி கோன்ஸ் உபயோகப்படுத்த வேண்டாம். முதல் முறை ரெடிமேட் கோன் வைத்து மெஹந்தி போட்டுக் கொள்கிறவர்கள் அதில் சிறிதளவை எடுத்து பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்துவிட்டு உபயோகிப்பது பாதுகாப்பானது. தரமான மெஹந்தி கோனால் அலர்ஜி வர வாய்ப்பில்லை. அப்படியே மெஹந்தியால் அலர்ஜி

    வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

    * சில தரமற்ற மெஹந்தி கோன்களில் நல்ல நிறம் வர வேண்டும் என்பதற்காக குங்குமம், சுண்ணாம்பு போன்றவற்றைக்கூட சேர்க்கிறார்கள். இவையும் நிறைய பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரிக்கும் முறை...

    நல்ல தரமான மெஹந்தி பவுடர் கடைகளில் கிடைக்கிறது. இதனுடன், எலுமிச்சைச் சாறு, டீ டிகாக்‌ஷன், சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பிறகு இந்தக் கலவையை 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு கோன்களில் அடைத்து, உபயோகப்படுத்தலாம்.

    மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்?

    * மெஹந்தி டிசைன் போட்ட இடத்தில், எலுமிச்சையும் சர்க்கரையும் கலந்த கரைசலை பஞ்சினால் தொட்டு டிசைன் மேல் ஒற்றி வரவும்.

    * டிசைன் காய்ந்து எடுத்த பின், தண்ணீர் படாமல் 4 மணி நேரம் பார்த்துக் கொள்ளவும்.

    * சுடுநீரில் 15 - 20 கிராம்பு போட்டு அதில் இருந்து வரும் ஆவியில் கையை காட்டினால், அதிக நிறம் வர வாய்ப்பு இருக்கிறது.

    * கையில் லோஷன், எண்ணெய், பிளீச் படாமல் பார்த்துக் கொண்டால், மெஹந்தி கலர் மாறாமல் இருக்கும்.

    "எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பது

    பாதுகாப்பானது."

    • வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
    • ராயல் லுக் தரும் கிளன் பிளைட் பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    ஆண்கள் அணிகின்ற சட்டையில் இடம் பெறும் பேட்டர்ன்கள் என்பது தனிசிறப்பு கொண்டவை. அதில் ஒவ்வொரு பேட்டர்ன்களும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டர்ன்கள் என்பது பிரபலமானதாக மாறிவிட்ட பிறகு அதற்கென தனித்துவம் ஏற்பட்டு விடுகிறது. உலகமெங்கும் சட்டை உற்பத்தியாளர்கள் இந்த பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றை கொண்டே சட்டையை உருவாக்கி தருகின்றனர். அதுபோல் மிக முக்கியமான சட்டை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டே விதவிதமான வண்ணக் கலவையுடன் சட்டைகள் உலா வருகின்றன.

    பிரபலமான சட்டை பேட்டர்ன்கள்

    உலகெங்கும் பிரபலமான சட்டை பேட்டர்ன்கள் என்றவாறு பல உள்ளன. அவை ஜின்கெம், மெட்ராஸ், டார்டன் பிளைட், ஷெப்பர்ட செக், ஹவுண்ட்ஸ் டூத், கிளன் பிளைட், விண்டோ பேன் செக், கிராப் செக், டாட்டர்ஸ் சால், மினி செக், பின் செக், அவனிங் ஸ்டிரிப், பெங்கால் ஸ்டிரிப்ஸ், கேண்டி ஸ்டிரிப்ஸ், பென்சில் ஸ்டிரிப், ஹேர்லைன் ஸ்டிரிப், பார்கோடு, ஷேடோ போன்றவாறு பல பேட்டர்ன்கள் உள்ளன.

    ஜின்கெம் பேட்டர்ன்

    ஜின்கெம் என்பது பொதுவாக கட்டம் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ணம் இணைந்தவாறு பெரும்பாலும் சதுர கட்டங்கள் பெரிய அளவில் உள்ளவாறு இதன் வடிவம் இருக்கும். நீளம் மற்றும் குறுக்குவாட்டில் பட்டை கோடுகள் என்பது இரட்டை வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்படும்போது சதுரமான கட்டம் போன்று காட்சியளிக்கும். நீளவாக்கில் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமான ஜின்கெம் பேட்டர்ன் என்பது 18-ம் நுற்றாண்டில் கட்டம் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட இந்த பேட்டர்ன் சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.

    மெட்ராஸ் பேட்டர்ன்

    கோடை காலத்தில் அணிய ஏற்றவாறு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் உருவாக்கிய பேட்டர்ன் தான் மெட்ராஸ். வண்ணமயமான கோடுகள் மற்றும் கட்டங்கள் உள்ளவாறு ஒரே சீரான இல்லாத மாறுபட்ட அளவுகளில் காணப்படும். மெட்ராஸ் பேட்டர்ன் கேஷ்வல் சட்டைகளாகவும், அரைகால் சட்டைகளாகவும் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.

    கிளன் பிளைட்

    கிளன் பிளைட் என்பது வேல்ஸ் ராஜா கட்டம் என்றவாறு அழைக்கப்படுகிறது. இந்த பேட்டர்ன் பெரும்பாலும் சூட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இரட்டை சாயல் கொண்ட வெட்டுப்பட்ட கட்டங்கள் கொண்டவாறு இருக்கும். அதுபோல் டார்க் மற்றும் லைட் வண்ண கோடுகள் மாற்றி மாற்றி உள்ளது போன்ற பேட்டர்ன் அமைப்பு. ராயல் லுக் தரும் இந்த பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.

    அவனிங் ஸ்டிரிப்ஸ்

    அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது அகலமான வடிவில் நீள கோடுகள் உள்ளது போன்று இருப்பது. வெள்ளை பின்னணியில் டார்க் மற்றும் லைட் வண்ண பட்டை கோடுகள் வருவது இதன் சிறப்பு அதாவது ¼ இன்ச் அளவிற்கு இந்த பட்டை கோடு உள்ளவாறு சீரான இடைவெளி அமைப்புடன் இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் பேட்டர்ன் உள்ளது. இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது கேஸ்வல் ஆடை வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    பென்சில் ஸ்டிரிப்ஸ்

    பென்சில் அளவுள்ள சிறிய கோடுகள் உள்ள அமைப்பு. சீரான இடைவெளியின்றி வரிசைகிரமமாக கோடுகள் நீளவாக்கில் இருப்பது இதன் அமைப்பு. இதுவும் வெள்ளை நிற பின்னணியில் வண்ண கோடுகள் நீளவாக்கில் வரும்.

    ஷேடோ ஸ்டிரிப்ஸ்

    ஷேடோ ஸ்டிரிப்ஸ் என்பது நீளவாக்கில் கோடுகள் போல அமைந்திருக்கும். ஒரு வண்ணத்திற்கு மற்றது மார்டன் போல காட்சியளிக்கும். மேலும் ஏதேனும் வண்ணக்கோடுக்கு ஏற்ப அதே வண்ண சாயல் பரவியுள்ளவாறு தோன்ற செய்யப்படும். பெரும்பாலும் மூன்று (அ) இரட்டை வண்ண சாயல் பின்னணியில் இந்த பேட்டர்ன் உருவாக்கம் அமைகிறது.

    ஹியரிங் போன்

    மேல் மற்றும் கீழ் நோக்கி 'க்ஷி' வடிவில் இந்த பேட்டர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனின் உள்முள் வடிவில் உள்ள இந்த பேட்டர்ன் சூட் மற்றும் வெளிநிகழ்வு ஆடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அணிகின்ற சட்டைகள் எந்த வகையான பேட்டர்ன் என்பதை அறிந்து அணியும்போது அதன் சிறப்பும் பெருமையும் அறிய முடியும்.

    • வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.
    • தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

    சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தடுக்கலாம்.

    உணவின் மூலம் வைட்டமின் ஈ சத்தை நேரடியாக பெற்று இயற்கையான வழியில் அழகை பாதுகாக்க முடியும். சூரியகாந்தி விதைகள், பாதாம், வேர்க்கடலை, அரிசி தவிடு மற்றும் கோதுமை தவிடுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

    நகங்கள் பராமரிப்பு

    கைகளுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பவர்களின் நகங்கள் வலிமை குறைந்து அழகின்றி நிறம் மங்கி காணப்படும். நகங்களை சுற்றிலும் தோல் உரிதல், சருமம் கருமை அடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவில் தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய்யை நகங்களை சுற்றியும், விரல்களிலும் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்கள் இயற்கையான வெளிர் சிவப்பு நிறத்தோடும் வலிமையோடும் காணப்படும்.

    கருவளையம் மறைவதற்கு

    கருவளையம் முகத்தின் பொலிவை குறைப்பதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சிலருக்கு கருவளையத்தோடு கண்களை சுற்றியுள்ள சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படும். இவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை கண்களை சுற்றிலும் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் கருவளையமும் சுருக்கங்களும் நீங்கி கண்களில் பொலிவு ஏற்படும்.

    இரவு நேர சரும பராமரிப்பு

    குறைந்த அளவிலான மேக்-அப் போட்டிருந்தாலும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அதை முழுவதுமாக கலைத்து முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும. மேக் அப் பொருட்களில் உள்ள வேதி மூலக்கூறுகள் சருமத்தை சேதடைய செய்து பருக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெயை சில துளிகள் எடுத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவலாம். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும் சிரமம் ஏற்படாது. வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் வறண்ட முகத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்.

    இளமையான சருமம்

    தளர்வு அடைந்த சருமங்கள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நெற்றி பகுதியில் சுருக்கங்களும், கோடுகளும் விழத்தொடங்கும். இவை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு வைட்டமின் ஈ சத்துள்ள எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    • சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும்.
    • மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம்.

    கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    * கால்களில் இருக்கும் முடிகளை, உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீமைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிப்பை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    • முகம் மிகவும் களைப்பாக தெரிந்தால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாம்.
    • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும்.

    தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்து விடுவார்கள்.

    நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தயிர் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவதை தடுக்கும். சருமத்தின் மேல் பகுதியில் உள்ள எபிடர்மிஸில் கால்சியம் சத்துக்களே நிறைய இருக்கும். அங்கு கால்சியம் சத்து நிறைந்த தயிரை தடவுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். அதே நேரத்தில் சரும வறட்சியிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    தயிரில் உள்ள ரிபோஃப்லாவின்(riboflavin)எனப்படும் விட்டமின் பி2 சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கச்செய்கிறது. அதோடு, நம் சருமத்தின் அடிப்படையான செல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

    சருமத்திற்கான அழகு சாதன பொருட்களில் இடம் பெறும் முக்கியப் பொருள் லேட்டிக் ஆசிட். இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும். அதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும். முகம் மிகவும் களைப்பாக தெரிந்தால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாம். இதிலிருக்கும் லாட்டிக் ஆசிட் சருமத்தில் உள்ள என்ஜைம்களை புத்துணர்சி பெறச் செய்யும்.

    இதனால் பிரகாசமான சருமத்தை பெற முடியும். தயிரில் உள்ள ஹைட்ராக்ஸில் ஆசிட் நம் சருமத்தில் உள்ள டெட் ஸ்கின் செல்களை அப்புறப்படுத்த உதவுவதுடன் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தயிரை பேஸ் மாஸ்க்காக தினமும் அப்ளை செய்து வந்தால், அது முகத்தில் சேரும் பாக்டீரியாக்களை அழித்திடும்.

    • பீட்ரூட் ஃபேஸ் பேக் கருவளையத்தை போக்கிட உதவுகிறது.
    • இந்த பேஸ் பேக் சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும்.

    அழுக்கு சேர்வது தான் சருமத்தில் ஏற்படுகிற பெரும்பாலான பிரச்சனைகளின் துவக்கப்புள்ளியாக இருக்கிறது. இது தீவிரமானால் இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், /ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

    இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதன் பிறகு இந்த கலவையை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.

    முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள். முகத்திற்கு தருகிற முக்கியத்துவத்தை கழுத்துக்கு யாரும் கொடுப்பதில்லை. இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.

    கழுவியதும் இது கூலிங் எஃபக்டை கொடுக்கும். அதோடு சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். பீட்ரூட்டில் அதிகப்படியான ஃபாலிக் அமிலம் மற்றும் அத்தியவசியமான விட்டமின்கள் இருக்கிறது. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. இதனை நீங்கள் வாரம் ஒரு முறை என இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து முயற்சித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் என்றால் உங்களுக்கு அடிக்கடி பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகள் ஏற்படும்.இவர்களுக்கு பீட்ரூட் சாறு ஃபேஸ்பேக் மிகச் சிறந்த தீர்வாக அமையும். சருமத்தில் பேக் போடுவது மட்டுமின்றி தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும் செய்திடலாம். பீட்ரூட்டின் சுவை பிடிக்காதவர்கள் அதில் வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இவற்றை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகளையும் போக்கிடும்.

    இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்குவதுடன் ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துவதால் பொலிவான சருமம் உண்டாகும். ஃபேர்னஸ் க்ரீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிலருக்கு அதிலிருக்கும் கெமிக்கல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இதனை தவிர்க்க பீட்ரூட் சாறு பயன்படும்.

    இன்றைக்கு பலரது கவலையாக இருப்பது கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் தான். அதனை போக்கவும் இந்த பீட்ரூட் ஃபேஸ்பேக் பயன்படும். அதோடு இவை உங்களது ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துவதால் இவை கருவளையத்தை போக்கிட உதவுகிறது. அதோடு முகத்தில் இருக்கிற கருந்திட்டுக்கள் எல்லாம் போக்கிடும்.

    உங்களுக்கு 30 வயதை தாண்டி விட்டாலே சருமத்தை இன்னும் சிரத்தையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஃபேஸ்பேக் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது. இதனை வாரம் இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தினால் விரைவில் சிறந்த பலனை பார்க்கலாம்.

    • இன்று பெண்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் லிப்ஸ்டிக் போடுவார்கள்.
    • உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது.

    இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.

    லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் * லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.

    * லிப்ஸ்டிக்கில் காட்மியம் சிறுநீரகத்தில் படிந்து அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டுவதினால் வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

    * லிப்ஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு முக்கிய காரணம் லிப்ஸ்டிக்குகளில் நரம்புகளை அழிக்கக்கூடிய ஈயம் அதிகமாக இருப்பதுதான்.

    * உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது. மேலும் இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

    * லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால் இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கும்.

    * உடலில் புற்றுநோயைத் தூண்டும் ஃபார்மால்டிஹைடு லிப்ஸ்டிக் அதிக அளவு உள்ளது. மேலும் இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற இதர பக்க விளைவுகளும் ஏற்படும்.

    * லிப்ஸ்டிக் உள்ள முக்கிய பொருளான கனிம எண்ணெய் சருமத்துளைகளை அடைக்கும் தன்மை கொண்டது, இதனை தினமும் பயன்படுத்தி வருவதினால் உதடுகளின் இயற்கை அழகு பாதிக்கும்.

    • மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன,
    • இந்த பேஸ் பேக்குகளை பயன்படுத்தினால் உங்கள் சருமம் பட்டுப்போல் மென்மையாகிவிடும்.

    பொதுவாக, வறண்ட சருமமாக இருந்தாலும், எண்ணெய் பசையாக இருந்தாலும் அல்லது கலவையான சருமமாக இருந்தாலும் (Skin Health), பருவமழையின் போது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று ஈரப்பதம். மழைக்காலம், சருமத்தின் மீது கூடுதல் அன்பையும் கவனிப்பையும் கோருகிறது.

    சருமத்தை சீர் செய்ய நீங்கள் பல்வேறு தயாரிப்புகளில் பணத்தை செலவழித்து, தோல் பராமரிப்பு முறைகளை பின்பற்றலாம் அல்லது உங்கள் சருமத்தின் அமைப்பையும் பளபளப்பையும் மேம்படுத்த உங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவலாம்.

    வறண்ட சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    10 பாதாம் எடுத்து, அதை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலக்கவும். பிறகுக் முகத்தில் பூசி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

    1 டீஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் (jojoba oil) கலக்கவும். இதை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    எண்ணெய் பசை சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    எண்ணெய் சருமத்தை சுத்தப்படுத்த ஒரு தூய ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்தவும். 2 தேக்கரண்டி ஓட்மீலை சிறிது ஆரஞ்சு சாறு அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

    பழுத்த பப்பாளி கூழை முகத்தில் பூசி, அது நன்றாக உலர்ந்த பிறகு முகத்தைக் கழுவவும். முகம் அழகாக மாறுவதோடு, சருமம் பொலிவு பெறும்.

    கலவையான சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்:

    2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2 சொட்டு ஸ்ட்ராபெரி எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    எந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினாலும், முகத்தை கழுவிய பிறகு, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

    • இந்த மசாஜை இரவு செய்து விட்டு படுக்கைக்கு செல்லுங்கள்.
    • இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    காபித் தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    காபி தூள் - 1/4 கப்,

    இனிப்பு பாதாம் எண்ணெய் - 1/2 கப்,

    ஆமணக்கு எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    • சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது ‘போர்ட்ரைட் மெஹந்தி’.
    • மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    அழகு கலையிலும், பேஷன் உலகிலும் அடிக்கடி புது 'டிரெண்ட்' உருவாகி, பிரபலமாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அழகு கலையில், சமீபத்திய டிரெண்டாக வலம் வருகிறது, 'போர்ட்ரைட் மெஹந்தி'. அதாவது மருதாணியை பயன்படுத்தி, அடுத்தவர் முகத்தை தத்ரூபமாக வரைவதுதான், இன்றைய டிரெண்ட். அதில் எக்ஸ்பெர்ட்டாக திகழ்கிறார், உனாதி பட்டேல்.

    இவரது உருவ மெஹந்தி வேலைப்பாடுகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பிரபலம். அதுபற்றிய தகவல்களை வண்ணமயமாக பகிர்ந்து கொள்கிறார். ''கொரோனா ஊரடங்கு காலகட்டம் ஒவ்வொருவருக்கும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்தவகையில், நான் வட இந்திய டீன் ஏஜ் பெண்களுக்கே உரித்தான, போர்ட்ரைட் மெஹந்தியை கற்றுக்கொண்டேன்.

    சிறுவயதில் இருந்தே மெஹந்தி போடுவேன் என்றாலும், போர்ட்ரைட் மெஹந்தியில் இப்போதுதான் ஆர்வம் பிறந்திருக்கிறது. யூ-டியூப், இணையதளம் வாயிலாக இந்த கலையை பயின்று, நிறைய முயற்சிகள் மேற்கொண்டு, இன்று இதில் கை தேர்ந்தவராகி இருக்கிறேன்'' என்று உற்சாகமாக ஆரம்பிக்கும் உனாதி, மகாராஷ்டிராவை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி. சில காலம் ஐ.டி.துறையில் பணியாற்றிவிட்டு, இப்போது புதுமையான அழகு கலைகளை முயன்று வருகிறார். அதில் போர்ட்ரைட் மெஹந்தி இவரது தனித்துவ கை வண்ணமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

    ''என்னுடைய அப்பாவிடம் இருந்து ஓவிய கலையை கற்றுக்கொண்டேன். ஆயில் பெயிண்டிங் கலையும் முயன்றிருக்கிறேன். அதன் காரணமாக, ஓவிய மாதிரியிலேயே உருவாகும் மருதாணி ஓவியத்தை மிக சுலபமாக வரைய முடிந்தது. இதுவும் ஓவியம்தான். ஆனால் வண்ணத்தூரிகைக்கு பதிலாக மெஹந்தி கோனும், காகிதத்திற்கு பதிலாக கையும் பயன்படுத்தி வரையும் தத்ரூப ஓவியம். மற்ற ஓவிய வேலைகளின்போது தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் மருதாணி ஓவியத்தில், தவறுகளை திருத்துவது கொஞ்சம் சிரமமானது.

    நிறைய பழகினால் மட்டுமே, கைகளில் மருதாணி ஓவியம் வரைய முடியும்'' என்று வர்த்தக ரீதியாக பேசும் உனாதி, பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு மெஹந்தி பூசியிருக்கிறார். குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட திருமணங்களில், உனாதியை பார்க்கமுடியும். புதுமையான வடிவங்களில் மெஹந்தி பூசி விடுவதுடன், உலக தலைவர்களின் ஓவியங்களையும், மருதாணியில் வார்த்தெடுத்திருக்கிறார். ''கை முழுக்க மெஹந்தி வரைய 2 மணி நேரம் தேவைப்பட்டால், இதுபோன்ற ஓவியங்களை வரைய கூடுதலாக அரை மணிநேரம் தேவைப்படும்.

    வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மணமகன்-மணமகள் ஓவியங்களை, கையில் மெஹந்தி ஓவியங்களாக வரையும், பழக்கமும் அதிகரித்திருக்கிறது. அதேபோல விஷேச நாட்களில், கடவுள் உருவங்களை கையில் வரையும் பழக்கமும், வரலாற்று சம்பவங்களை நினைவு கூறும் வகையிலான காட்சிகளை வரையும் டிரெண்டும் அதிகரித்திருக்கிறது. வட மாநிலங்களில் ஏற்கனவே வைரல் ஆகிவிட்ட இந்த போர்ட்ரைட் மெஹந்தி, சமீபகாலமாக தென்னிந்திய மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக வைரல் ஆகி வருகிறது'' என்றவர்,

    வருங்காலத்தில் இந்த கலை லாபகரமான பகுதிநேர தொழிலாக மாறும் என்றும் நம்பிக்கையோடு கூறினார். ''புதிய கலை வடிவமாக இப் போது இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் போர்ட்ரைட் மெஹந்தி, வருங்காலத்தில் பெண்களுக்கான அழகு கலை தொழிலாக மாறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வட இந்திய மோகம், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், மருதாணி ஓவியங்களுக்கு வருங்காலத்தில் அதீத வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.

    மேக்கப் கலை, புடவை கட்டிவிடுதல் போன்ற பகுதிநேர வேலை பட்டியலில் இதுவும் பெண்களின் விருப்பமான தொழிலாக மாற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சில நூறு ரூபாய் முதலீட்டில், பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும் என்பதால், கல்லூரி மாணவிகளிடம் அதீத வரவேற்பு பெறும். ஆனால் எல்லோராலும், இதை சுலபமாக செய்துவிடமுடியாது. கலைநயமும், பொறுமையும் இருப்பவர்களுக்கு, இந்த கலை லாபகரமான தொழிலாக மாறலாம்'' என்று நிறைவாய் பேசி முடித்த உனாதி, வருங்காலத்தில் மேலும் பல புதுமையான கலைகளை பயில ஆர்வமாய் இருக்கிறார்.

    • கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது.
    • கொய்யா இலையை சருமம், கூந்தலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து அதன் பரவலை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர பருக்கள் மறையலாம்.

    கொய்யா இலையில் அதிக அளவில் வைட்டமின் சி சத்து இருப்பதால் முகப்பரு உருவாவதை தடுக்கிறது. கொய்யா இலையில் இருக்கும் தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை மாற்றுகிறது.

    கொய்யா இலைகளை காயவைத்து அரைத்து கொள்ளுங்கள். அதனை நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் முகச்சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.

    கொய்யா இலைகளை ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இவ்வாறு தொடர்நது செய்து வந்தால் அழகு அள்ளும்.

    கற்றாழை சாறுடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    கொய்யா இலை, பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பூசி வந்தால் முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி அழகு கூடும்.

    கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி பலம் பெறும்.

    கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

    • தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம், முடியின் அழகை பராமரிக்கலாம்.
    • இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

    வறண்ட சருமத்திற்கு

    முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் பால் - 1/2 கப்

    ரோஸ் நீர் - 1/2 கப்

    ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    செய்முறை : முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.

    நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 6

    தேங்காய் பால் - 1 ஸ்பூன்

    செய்முறை : முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

    பளபளப்பான முகத்தை பெற

    முகம் மிகவும் பளபளப்பாக இருக்க ஒரு அருமையான வழி உள்ளது. அதற்கு இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும்.

    தேவையான பொருட்கள் :

    சந்தன பவுடர் - 1 ஸ்பூன்

    தேங்காய் பால் - 1 ஸ்பூன்

    தேன் - 1 ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை : முதலில் சந்தன பவுடர், தேங்காய் பால் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இவற்றுடன் தேன் மற்றும் குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மின்னும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    ×