என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் கிராமத்து பச்சை மொச்சை குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மொச்சை - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - 3
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    தேங்காய் விழுது - அரை கப்
    மிளகாய் தூள் - இரண்டு டீ ஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன்



    செய்முறை:

    பச்சை மொச்சையை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய், தனியா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இத்துடன் அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

    இந்த கலவையில் வேகவைத்த மொச்சையை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையெனில் உப்பு சேர்க்கலாம்.

    குழம்பு கொதிக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.

    குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த உடன் இறக்கிவிடவும்.

    சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.

    சூடான சாதத்திற்கோ, இட்லிக்கோ ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை, மாலை நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 5,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு.

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை:

    சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.  

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் வெண் பொங்கல் மிகவும் பிடிக்கும். இன்று சேமியாவை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கு,
    கறிவேப்பிலை - சிறிது,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க :

    மிளகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
    முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும்.

    பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.

    வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.

    அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

    சூப்பரான சேமியா வெண் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி - 1 கப்
    பட்டாணி - 1/2 கப்
    வெங்காயம் - 1
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    புதினா - 1/2 கப்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    வரமிளகாய் - 2
    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 10 பற்கள்

    தாளிப்பதற்கு...

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2 ஏலக்காய் - 1



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடைந்த தயிர் - 250 மி.லி.

    உருண்டை செய்ய...

    கடலைப்பருப்பு - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 50 கிராம்,
    காய்ந்தமிளகாய் - 10,
    தனியா - 2 டீஸ்பூன்,
    உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்.

    அரைக்க...


    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 6,
    இஞ்சி - 1 துண்டு,
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    அரிசி - 1 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்  
    பச்சை மிளகாய் - 3  
    மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கோதுமை மாவு - 200 கிராம்  
    நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

    பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ங

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    நூடுல்ஸ் - கால் கப்,
    கோதுமை பிரெட் - 10 துண்டுகள்,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    தக்காளி - ஒன்று,
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி - ஒரு சிறு துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கேரட் - 1 சிறியது,
    குடைமிளகாய் - பாதி,
    தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
    சீஸ் துருவல் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.
     

     
    செய்முறை :
     
    வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
     
    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
     
    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
     
    அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
     
    காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
     
    அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும்.
     
    ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன் சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.
    தேவையான பொருட்கள் :    

    துவரம்பருப்பு - கால் கப்,
    பாசிப்பருப்பு - கால் கப்  
    தக்காளி - 2  
    கேரட் - ஒன்று,
    கத்திரிக்காய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)  
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  
    சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  
    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10  
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :     

    கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்  
    வெந்தயம் - கால் டீஸ்பூன்  
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :    

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    துவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான டிபன் சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் தொக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - ஒன்று
    சோம்பு - அரை டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். 5 விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

    கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும்.

    கலவையில் தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். பேரீச்சம் பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பேரீச்சம் பழத்தில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - ஒரு கப்
    கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
    உலர்திராட்சை - அரை கப்
    பனை வெல்லம் - அரை கப்
    பாதாம், முந்திரி கலவை - அரை கப்
    தேங்காய்ப்பால் - 2 கப்
    சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்



    செய்முறை:

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டையை எடுத்து விட்டு தனியாக வைக்கவும்.

    பனை வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

    பேரீச்சம்பழத்தினை உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருகியதும் பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

    பின்பு அதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும்.

    பிறகு சோள கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும்.

    கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

    திக்கான பதம் வந்தவுடன் மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான பேரீச்சம்பழ கீர் ரெடி.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்தி, பூரி, சாதத்துடன் சாப்பிட பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா அருமையாக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - 200 கிராம்
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    நெய் - 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப)
    சீரகம் - 10 கிராம்
    காய்ந்த மிளகாய் - 10 கிராம்
    நறுக்கிய பூண்டு - 50 கிராம்
    கறுப்பு உளுந்து - 200 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 10 கிராம்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும்.

    சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×