search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா
    X

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா

    குழந்தைகளுக்கு பரோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடலைப்பருப்பு ஸ்டஃப்டு வைத்து எளிய முறையில் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 100 கிராம்  
    பச்சை மிளகாய் - 3  
    மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்  
    உப்பு - தேவையான அளவு.

    மேல் மாவுக்கு:

    கோதுமை மாவு - 200 கிராம்  
    நெய் அல்லது வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.

    வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

    பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும்.

    தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.ங

    சூப்பரான தால் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×