என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சுரைக்காய், முட்டைகோஸ் போன்றவற்றில் செய்யப்படும் கோப்தாக்களை விட வாழைக்காய் கோப்தா ருசி மிகுந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோப்தாவிற்கு...

    வாழைக்காய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    கிரேவிக்கு...

    இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    தக்காளி சாறு - 1/4 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    வாழைக்காய், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோப்தாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி சேர்த்து வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் தக்காளி சாற்றினை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கடலை மாவை சேர்த்து கிளறி, வாணலியில் ஊற்றி கிளறி, அடுத்து பொரித்து வைத்துள்ள கோப்தாக்களை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வாழைக்காய் கோப்தா கிரேவி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இடியாப்பத்தை வைத்து வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 300 கிராம்
    இடியாப்பம் - 3 கப்
    பட்டை - இரண்டு
    லவங்கம் - இரண்டு
    ஏலக்காய் - இரண்டு
    பிரிஞ்சி இலை - ஒன்று
    வெங்காயம் - இரண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - இரண்டு
    தக்காளி - ஒன்று
    மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தண்ணீர் - அரை டம்ளர்
    உப்பு - தேவைகேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் கடாயில் சேமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் கலந்த பின்னர் சிக்கன், தண்ணீர் அரை கப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

    கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைக்கவும் பிறகு பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு முட்டை சேர்த்து சூப்பரான மேகி முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    மேகி பாக்கெட் - 1
    ப.மிளகாய் - 2
    முட்டை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    சிக்கன் மசாலா - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மேகி மசாலா சேர்க்கவும்.

    அடுத்து அதில் மேகி நூடுல்ஸை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    மேகி நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்

    சூப்பரான மேகி முட்டை மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கனை தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது கால்மி கபாப். இந்த கால்மி கபாப்பை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃப்ரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக கலந்து 24 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திரட்டு பால் என்பது பால்கோவா போலதான் இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் திரட்டு பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பால் - 4 கப்
    சர்க்கரை - கால் கப்,
    பாதாம் - சிறிதளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கனமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கிளறி விடவும். பால் நன்றாக கொதித்து திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.

    பாலுடன் சர்க்கரை கலந்து கிளற கிளற உதிரி உதிரியாக கட்டியாக வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி சூடாகவே சாப்பிடலாம்.

    சூப்பரான திரட்டு பால் ரெடி.

    குறிப்பு :

    திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது கிளறி கொண்டே இருப்பது நல்லது. இல்லையெனில் அடிபிடித்து கருகிய வாசனை வந்து விடும். சிலர் பாலை பாத்திரத்தில் காய்ச்ச விடும் முன்னரே 2 டீஸ்பூன் நெய் விட்டு பின் பாலை ஊற்றி காய்ச்சுவர். இதன் மூலம் பாத்திரத்தில் பால் ஒட்டாது கிளற வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெஜிடபுள் பணியாரத்தை டிபனாகவும் சாப்பிடலாம், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சுவைக்கலாம். இன்று பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கிலோ
    உளுந்து - 1/4 கிலோ
    கேரட் - 1 கப்
    தேங்காய் - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    முட்டைக்கோஸ் - 1 கப்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 கப் (சிறியதாக கட் செய்தது)

    தாளிதம் :

    கடுகு, உளுந்தப்பருப்பு, எண்ணெய்.



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மறுநாள் காலை கேரட், முட்டைக்கோஸ், தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவு கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபுள் பணியாரம் ரெடி.

    அதனை தேங்காய் சட்னி, புதினா சட்டியுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது
    உருளைக் கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் - உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, பூரி, தோசை, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் கொத்துக்கறி. இன்று இந்த கொத்துக்கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,
    எண்ணெய் தேவைக்கு.

    தாளிக்க...

    இடிச்ச பூண்டு - 3,
    இடிச்ச சின்ன வெங்காயம் - 5,
    காய்ந்த மிளகாய் - 5,
    கறிவேப்பிலை - சிறிது,
    மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ தேக்கரண்டி.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.

    இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் கொத்துக்கறி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்பு கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு சாமை அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 3 கப்
    துருவிய வெல்லம் - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    சாமை அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி நிழலில் உலறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும்.

    ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.

    இந்த மாவு கலவையை 2 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.

    பின்பு அந்த மாவை அதிரசமாக தட்டி வைக்கவும்.

    தட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து நன்றாக எண்ணெயை வடித்து ருசிக்கவும்.

    சூப்பரான சாமை அதிரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
    உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி - தேவையான அளவு.



    செய்முறை  :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    இதற்கு கடலை மாவு- 2 கப்,
    நெய் - 3 டீஸ்பூன்
    பால் - 3 டீஸ்பூன்,
    நெய் - 1 கப் தனியாக,
    சர்க்கரை - 1 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்



    செய்முறை :

    கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.

    சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.

    பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.

    இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்

    சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்,
    பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
    பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    தேங்காய் பால் - ¼ கப்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.

    அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×