search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohan dal sweet"

    தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    இதற்கு கடலை மாவு- 2 கப்,
    நெய் - 3 டீஸ்பூன்
    பால் - 3 டீஸ்பூன்,
    நெய் - 1 கப் தனியாக,
    சர்க்கரை - 1 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்



    செய்முறை :

    கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.

    சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.

    பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.

    இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்

    சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×