என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த சேமியா - 200 கிராம்
    வெங்காயம் - கால் கப்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    அரிசி மாவு - கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.

    மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

    தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.

    அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.

    குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்தான மதிய உணவு முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துவரம்பருப்பு - கால் கப்,
    முருங்கை கீரை - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - தேவையான அளவு,
    நெய் - 2 டீஸ்பூன்.

    வறுத்து பொடிக்க:

    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    பச்சரிசி - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    காய்ந்த மிளகாய் - 1,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை:

    அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

    வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.

    கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் - 2 கப்

    புளிக்காய்ச்சல்...

    நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    புளி - 1 எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு

    பொடி செய்வதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 2
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    எள் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    மாங்காய் ஊறுகாயை பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். இன்று குஜராத்தி முறையில் இனிப்பு சேர்த்து ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய்த் துருவல் - 2 கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).

    அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும்.

    சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

    சூப்பரான ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் ரெடி.

    மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும். மோர்க்குழம்பு செய்யும் போது அதில் சுரைக்காய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - சிறியது 1
    கெட்டித்தயிர் - ஒரு கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    முழு உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    சுரைக்காயை தோல், விதை நீக்கி சிறியதுண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

    தயிரை கடைந்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்கொள்ளவும்.

    கடைந்த தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளியமுறையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 2 கப்
    கடலை மாவு - 1 கப்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    வெண்ணை அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

    அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

    எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும். இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

    சூப்பரான ரிப்பன் பக்கோடா ரெடி.

    கவனிக்க: மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம். அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பித்தம் அதிகம் உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த கொத்தமல்லி விதை சட்னி நல்ல பலனை அளிக்கும். இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி விதை - 100 கிராம்
    மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
    புளி - நெல்லிக்காய் அளவு
    கல் உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் - ஒரு எண்ணம்
    கடுகு - ¼ ஸ்பூன்
    வெந்தயம் - 10 எண்ணம்



    செய்முறை :

    முதலில் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.

    கொத்தமல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

    புளியை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

    வறுத்த கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும்.

    சுவையான கொத்தமல்லி விதை சட்னி தயார்.

    இதனை இட்லி, தோசை, ஆப்பம், சாத வகைகள் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓட்டலில் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
    தந்தூரி மசாலா - சிறிதளவு
    தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
    எலுமிச்சம்பழம் - ஒன்று
    வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.

    கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

    வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

    பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.

    தந்தூரி சிக்கன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் இந்த முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோலை வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4,
    முட்டை - 4,
    சிக்கன் (எலும்பு இல்லாதது) - 150 கிராம்,
    பெரிய வெங்காயம் - 1,
    மிளகுதூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - சுவைக்கேற்ப.

    அரைக்க:

    மிளகு - கால் டீஸ்பூன்,
    சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) - கால் டீஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 3 பல்,
    பட்டை - 1.



    செய்முறை :

    சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து, எண்ணெயில் நன்கு வதக்குங்கள்.

    பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.

    முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.

    தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும்.

    வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரசாரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும். இன்று இந்த சுவையான கோதுமை துக்கடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 400 கிராம்
    மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
    வெள்ளைப் பூண்டு - 5
    க‌ல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


     
    செய்முறை

    வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

    கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது எண்ணெய் தடவி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
     
    பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும். சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது. பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும். இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும். அவ்வப்போது சதுரத்துண்டுகளை போட்டு கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் அடங்கியதும் எடுத்து விடவும்.

    சுவையான கோதுமை துக்கடா தயார்.

    இது ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - அரை மூடி
     
    தாளிக்க :

    கடுகு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 10
    நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு


     
    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    சுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.

    இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×