என் மலர்
சமையல்
- முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 2
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கொத்துமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
மிளகு - விருப்பத்திற்கேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.
- பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இந்த மில்க் ஷேக் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
பழுத்த பப்பாளிப்பழம் - 1/2
தேங்காய்ப் பால் - 1 கப்
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை :
பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பப்பாளிப்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.
நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.
சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.
- நாவல் பழத்தில் 'ஜாம்' செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
நாவல் பழம் - 1 கிலோ
சர்க்கரை - 150 கிராம்
எலுமிச்சம் பழம் - பாதியளவு
செய்முறை:
நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். விதைகளை நீக்கி விடவும்.
வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள நாவல் பழத்தை வாணலியில் கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும்.
பிறகு சர்க்கரையை அதனுடன் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். துவர்ப்பாக இருப்பதாக தோன்றினால் சர்க்கரையை சிறிதளவு கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
சிறிது நேரம் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்பு பாதியளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் சேர்த்துக் கிளறவும்.
சிறிது நேரத்தில் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
அதனை ஆற வைத்து பயன்படுத்தலாம்.
சூடு ஆறிய பிறகு ஜாமை ஒரு கண்ணாடி ஜாரில் பத்திரப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் 6 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் வைத்து பயன்படுத்த முடியும். ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
- எள் உடல் எடையை குறைக்க உதவும்.
- உடலில் கொழுப்பு அளவை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - அரை கிலோ
வெல்லம் -அரை கிலோ
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது.
வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.
பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும்.
பின்பு லட்டுகளாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெந்தயக்கீரை- ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை மிளகாய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.
அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.
இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
- காலிஃப்ளவரில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - கால் கப்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்கவும்.
காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப்போட்டு பொரித்தெடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அடுத்து அதில் நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பிரியாணி ரெடி.
- தோசை, இடியாப்பம், இட்லிக்கு சூப்பராக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேக வைக்க :
ஆட்டுக்கால் - 4
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளக்காய் - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 மேசைகரண்டி
உப்பு - தே. அளவு
தேங்காய் - அரை மூடி
தாளிக்க :
எண்ணெய்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.
* ஆட்டுக்காலை நன்றாக தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடியை எடுத்து விடவும்.
* குக்கரில் ஆட்டுக்கால், நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.
* விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.
* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
* ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.
* இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.
- இந்த சாண்ட்விச்சை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- காலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 4
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப
சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை கலவை செய்ய
முட்டை - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் டோஸ்ட் செய்த சாண்ட்விச்'சை வைக்கவும்.
சான்விச் முழுவதும் ஆம்லெட் வரும் படி மூடவும். நன்றாக வேக விடவும்.
கடைசியாக அடுப்பிலிருந்து எடுத்து பாதியாக நறுக்கவும்.
இப்போது அருமையான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் தயார்.
- குழந்தைகளுக்கு சாக்லேட் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சாக்லேட் புட்டிங் கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் கொக்கோ பவுடர் - ¼ கப்
சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை கொட்டி கலக்கவும்.
பின்பு அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.
பின்னர் அதை கப்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
நன்றாகக் குளிர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.
- பச்சை பட்டாணி குருமா ரொம்பவே ஈஸியான ரெசிபி
- இந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 4
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் முதல் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைப்பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும்.
2 தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.
மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, லவங்கம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக வெட்டி நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கிய பின்னர் முன்பு அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.
தொடர்ந்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணி போட்டு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு கீழே இறக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பச்சை பட்டாணி குருமா தயார்.
- ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தியமாக படைக்கப்படும்.
- இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - ¼ கப்
ஏலக்காய் பொடி - கால் மேசைக்கரண்டி
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.
* கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.
* தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.
மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
* மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.
* இப்போது சுவையான திருவாதிரை களி ரெடியானது.
திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.
- முழுவதும் பாலில் செய்யக்கூடிய இனிப்பு தான் 'பெங்காலி மிஷ்டி டோய்'.
- இதை சாப்பிட்டால் முகத்தில் உண்டாகும் சுருக்கம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.
தேவையான பொருட்கள்:
புளிப்பில்லாத தயிர் - 50 மி.லி.
கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி.
சர்க்கரை - 3 தேக்கரண்டி
பால் - 400 மி.லி.
குங்குமப்பூ - 1 கிராம்
பிஸ்தா பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை வடிகட்டியில் ஊற்றி, அதில் இருக்கும் தண்ணீர் நீங்கும் வரை நன்றாக வடிகட்டவும். பின்னர் அதனை முட்டை அடிப்பானைக் கொண்டு கிரீம் பதத்தில் வரும் வரை கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் 300 மி.லி. பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சவும்.
வாணலியில் சர்க்கரையைக் கொட்டி, பொன்னிறமாக உருகும் வரை கிளறவும். பின்பு அதில் 2 மேசைக் கரண்டி பால் ஊற்றி கலக்கவும். பால் சர்க்கரையுடன் கலந்து கிரீம் பதம் வரும்வரை கலக்கவும். இப்பொழுது 'பால் கேரமல்' தயார்.
கன்டென்ஸ்டு மில்க் கலவையில், கேரமல் ஊற்றி கலந்துகொள்ளவும். பின்னர் அதில் தயிர் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுள் ஸ்டாண்ட் வைக்கவும். தயிர் கலவை உள்ள பாத்திரத்தை அலுமினியம் பாயில் கவர் அல்லது மெல்லிய துணியால் மூடி ஸ்டாண்ட் மீது வைத்து வாணலியை மூடவும். கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். பின்னர் அதன் மீது பொடிதாக நறுக்கிய பிஸ்தா, குங்குமப்பூ தூவி அடுப்பை அணைக்கவும்.
இப்பொழுது நாவில் கரையும் 'பெங்காலி மிஷ்டி டோய்' தயார்.






