search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்
    X

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாவல் பழ ஜாம்

    • நாவல் பழத்தில் 'ஜாம்' செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    நாவல் பழம் - 1 கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    எலுமிச்சம் பழம் - பாதியளவு

    செய்முறை:

    நாவல் பழங்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றைப் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். இவ்வாறு செய்யும்போது பழத்தின் விதைப் பகுதி தனியாக பிரிந்துவிடும். விதைகளை நீக்கி விடவும்.

    வேக வைத்துள்ள நாவல் பழத்தை நன்றாக ஆற வைத்து தனியாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள நாவல் பழத்தை வாணலியில் கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும்.

    பிறகு சர்க்கரையை அதனுடன் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். துவர்ப்பாக இருப்பதாக தோன்றினால் சர்க்கரையை சிறிதளவு கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறிது நேரம் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    பின்பு பாதியளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    சிறிது நேரத்தில் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.

    அதனை ஆற வைத்து பயன்படுத்தலாம்.

    சூடு ஆறிய பிறகு ஜாமை ஒரு கண்ணாடி ஜாரில் பத்திரப்படுத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

    எலுமிச்சை சாறு சேர்த்திருப்பதால் 6 மாதத்திற்கு கெட்டுப்போகாமல் வைத்து பயன்படுத்த முடியும். ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

    Next Story
    ×