என் மலர்
சமையல்
- கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற காலை உணவாக இருப்பது 'இதழ் அப்பம்'.
- இதை கறிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 1 ½ கப்
தேங்காய் - 1
வடித்த அரிசி சோறு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவிய பின்பு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது மிக்சி ஜாரில் சீரக சம்பா அரிசி, வடித்த சாதம், தேங்காய்ப்பால், தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அந்த மாவை தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்ப்பாக வரும் அளவுக்கு, தேங்காய்ப்பால் ஊற்றி கலந்துகொள்ளவும்.
இட்லி வேகவைப்பது போல, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேகவைப்பதற்கான ஸ்டாண்டை வைத்து, அதன் மேல் சற்று குழிவான தட்டை வைக்கவும். தட்டின் உள்பகுதியில் சிறிதளவு நெய் தடவவும்.
பின்பு அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றி பாத்திரத்தை மூடவும். 3 முதல் 4 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் மாவு வெந்திருக்கும். அதன் மேல் சிறிதளவு நெய்யை முழுவதுமாக தடவவும்.
இப்போது ஒரு கரண்டி மாவை ஏற்கனவே வெந்திருக்கும் மாவின் மீது ஊற்றி மூடி வைக்கவும்.
அது வெந்தவுடன் அதன் மேல் நெய்யைத் தடவி மீண்டும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். இவ்வாறு தொடர்ச்சியாக, ஒவ்வொரு அடுக்காக தட்டு நிரம்பும் வரை மாவை ஊற்றி வேக வைக்கவும்.
கடைசியாக மிதமான தீயில் மேலும் 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
ஆறிய பிறகு தட்டின் ஓரங்களை நெய் தடவிய கத்தியைக் கொண்டு தளர்த்தி, அகலமான தட்டின் மீது தலைகீழாக கவிழ்த்து வைத்தால், இதழ் அப்பம் பாத்திரத்தில் இருந்து எளிதாக வரும்.
பின்பு இதனை ஒவ்வொரு இதழாகப் பிரித்து எடுக்கலாம்.
- பூசணியில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
- பூசணியில் பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
சோளமாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 கறி
மசாலாத்தூள் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.
துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.
ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.
பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.
இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 1/2 கிலோ
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.
கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள் :
பேரீச்சம்பழம் - 1/4 கிலோ
சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி
தேங்காய் - 1/2 மூடி
செய்முறை :
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
தேங்காயை துருவி கொள்ளவும்.
சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.
உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.
- இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
- இதை 3 அல்லது 4 மாதங்கள் வைத்து உபயோகிக்கலாம்.
இந்த பொடியை மரசெக்கு நல்லெண்ணெய் விட்டு சுடு சாதத்துடன் நன்றாக பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புளி - 100 கிராம்
வெல்லம் பொடித்தது - 1/4 கப்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுக்க
கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
கொத்தமல்லி விதை - 1/2 கப்
மிளகு - 2 மேஜைக்கரண்டி
கருப்பு எள் - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பூசணி விதை - 1 தேக்கரண்டி
வெள்ளரி விதை - 1 தேக்கரண்டி
மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க
வேர்கடலை - 1/2 கப்
கடுகு - 1 மேஜைக்கரண்டி
மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - 1/2 கப்
செய்முறை
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக சிறிது சிறிதாக நல்லெண்ணெய் விட்டு மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.
அடுத்து 1 தேக்கரண்டி நல்லெண்ணய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அதே வடசட்டியில் எண்ணெய் விடாமல் புளியை சிறிது நேரம் சிறுதீயில் வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்து கொள்ளவும்.
இப்பொழுது வடைச்சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்கடலை போட்டு நன்றாக 3 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து முறுகலாக எடுத்து வைத்து கொள்ளவும்.
மீதமுள்ள நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும்.
இப்பொழுது மிக்ஸியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் அதில் வறுத்து புளி, பெருங்காயம், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது அரைத்து வைத்துள்ள இந்த பொடியுடன் தாளித்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜில் பத்திரபடுத்தி வைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான புளியோதரை பொடி ரெடி.
- இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த மசாலாவை கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வதே சிறந்தது.
தேவையான பொருள்கள் :
தனியா - கால் கப்
ஏலக்காய் - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
கிராம்பு - 2 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப்பூ - 4
ஒரு இன்ச் அளவில் பட்டை - 4
ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி
ஜாதிபத்திரி - ஒன்று
பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேவையானவற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.
ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு போக ஆற வைக்கவும்.
ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.
இப்போது மணமான கரம் மசாலா பொடி தயார்.
காற்று போகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்துங்கள்.
- இது கராச்சி அல்வா, நட்ஸ் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த அல்வாவை மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கார்ன்ஃப்ளார் - 50 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - ½ கப்
ஆரஞ்சு நிறம் - 1 சிட்டிகை
பொடித்த நட்ஸ் - ½ கப்
ஏலக்காய் பொடி - ¼ தேக்கரண்டி
செய்முறை
ஒரு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதனுடன் 1 ½ கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து மாவு கரையும் வரை கலக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
சர்க்கரை கரைந்த பின்னர் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவு கலவையை சேர்த்துக் கலக்கவும்.
குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும் கிளறும் போது லேசாக கட்டிகள் உருவானால் பயப்பட வேண்டியதில்லை.
கார்ன்ஃப்ளார் மாவு ஓரளவு கெட்டியாக கண்ணாடி பதம் வந்த பிறகு அதில் 1/2 கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
நெய்யை முழுமையாக சேர்த்த பின்னர் பொடித்த நட்ஸ் சேர்த்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவிய பின்னர் தயார் செய்துள்ள அல்வாவை அதில் சேர்க்கவும்.
அதனை ஒரு கரண்டி கொண்டு சமமாக செய்த பிறகு ஓரளவு கெட்டியாகும் வரை ஆறவைக்கவும்.
அல்வா ஆறிய பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
சுவையான பாம்பே அல்வா தயார்.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.
- காலையில் இட்லி, தோசைக்கு பதில் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 5
முட்டை - 3
பெரிய வெங்காயம் -1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
சில்லி ப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - ¾ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
வெண்ணை - 2 - 3 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட்டை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
தீயை குறைத்து வைக்கவும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.
ஒவ்வொரு பக்கமும் 1 - 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும், அவ்வபோது திருப்பி போடவும். நன்றாக வெந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா பிரெட் ரோஸ்ட் தயார்.
- இந்த குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இந்த குருமாவை செய்ய அரை மணி நேரமே போதுமானது.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 1
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதனை சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசி, பின் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெடி!!!
- தயிர் உடலுக்கு மிகவும் சிறந்தது.
- தயிரை சேமியாவுடன் சேர்த்து, ஒரு கலவை சாதம் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
தயிர் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மாதுளை முத்துக்கள் - அரை கப்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சேமியாவை போட்டு வேக வைக்க வேண்டும்.
சேமியா வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் அலசி, அந்த நீரை வடிகட்டிவிட்டு, சேமியாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிரில் ஊற்ற வேண்டும்.
பின் மிக்ஸியில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து, அரைத்து, தயிரில் போட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள சேமியாவையும் தயிரில் போட்டு, கிளற விட வேண்டும்.
கடைசியாக மாதுளை முத்துக்கள், நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான தயிர் சேமியா ரெடி!!!
- கிராமப்புறங்களில் நந்தை கறி சாப்பிடுவது வழக்கம்.
- நத்தை கறி சுவையானது, ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்
நத்தை - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
கறி நன்கு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.
- வீட்டில் முட்டை தோசை செய்து இருப்பீங்க.
- இன்று முட்டை மசாலா தோசை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
முட்டை - 6
கடுகு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
½ tbsp மிளகு தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து தோசைகளாக ஊற்றி சற்று தடிமனாக ஊற்றவும்.
பின் அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்ட பின் சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயாராகி விட்டது.






