search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் புளியோதரை பொடி...
    X

    கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் புளியோதரை பொடி...

    • இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • இதை 3 அல்லது 4 மாதங்கள் வைத்து உபயோகிக்கலாம்.

    இந்த பொடியை மரசெக்கு நல்லெண்ணெய் விட்டு சுடு சாதத்துடன் நன்றாக பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    புளி - 100 கிராம்

    வெல்லம் பொடித்தது - 1/4 கப்

    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வறுக்க

    கடலைப்பருப்பு - 1/2 கப்

    உளுந்தம் பருப்பு - 1/2 கப்

    கொத்தமல்லி விதை - 1/2 கப்

    மிளகு - 2 மேஜைக்கரண்டி

    கருப்பு எள் - 1 மேஜைக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    பூசணி விதை - 1 தேக்கரண்டி

    வெள்ளரி விதை - 1 தேக்கரண்டி

    மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி

    தாளிக்க

    வேர்கடலை - 1/2 கப்

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    மரச்செக்கு நல்லெண்ணய் - 1 மேஜைக்கரண்டி

    வரமிளகாய் - 5

    கறிவேப்பிலை - 1/2 கப்

    செய்முறை

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக சிறிது சிறிதாக நல்லெண்ணெய் விட்டு மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

    அடுத்து 1 தேக்கரண்டி நல்லெண்ணய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதே வடசட்டியில் எண்ணெய் விடாமல் புளியை சிறிது நேரம் சிறுதீயில் வறுத்து எடுத்து வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது வடைச்சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேர்கடலை போட்டு நன்றாக 3 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து முறுகலாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    மீதமுள்ள நல்லெண்ணய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும்.

    இப்பொழுது மிக்ஸியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

    அதன் பின்னர் அதில் வறுத்து புளி, பெருங்காயம், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது அரைத்து வைத்துள்ள இந்த பொடியுடன் தாளித்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜில் பத்திரபடுத்தி வைத்து கொள்ளவும்.

    இப்போது சூப்பரான புளியோதரை பொடி ரெடி.

    Next Story
    ×