என் மலர்
சமையல்
- இது அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்,
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்,
கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்,
கடலை மாவு – 1 ஸ்பூன்,
காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்,
உப்பு – 1ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
தனியா தூள் -1 ஸ்பூன்,
கறிவேப்பிலை -1 கொத்து,
எண்ணெய் – 250 கிராம்.
செய்முறை
அடுப்யில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இதை சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சுத்தம் செய்து வைத்து காலிஃப்ளவரை இதில் சேர்த்து பத்து நிமிடம் கழித்து காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி (இது போன்று மசாலா பொருட்களை பொரிக்க தயார் செய்யும் போது அத்துடன் எப்போதும் எண்ணெய் சேர்த்து பிசையும் போது மசாலாக்கள் அதில் நன்றாக ஊறி உதிராமல் இருக்கும் அதே நேரத்தில் நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும்). அத்துடன் லேசாக தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்து கொள்ளுங்கள்.
காலிஃப்ளவரை மசாலாவில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் அதிக சூட்டுடன் இருக்கும் போது காலிஃப்ளவரை போட்டால் கருகி ருசி மாறி விடும். எண்ணெய் அதிகம் சூடாகாமல் காலிஃப்ளவரை பொரித்தால் எண்ணெய் அதிகமாக குடித்து காலிஃப்ளவர் மெது மெது வென்று ஆகி விடும்.
இப்போது காய்ந்த எண்ணெயை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு, மசாலா கலந்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு விடுங்கள். காலிஃப்ளவரை போட்ட உடன் திருப்பி போடக் கூடாது. எதையும் செய்யாமல் இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் சலசலப்பு பாதி வரை அடங்கிய பிறகு தான், அதை மறுபுறம் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் சலசலப்பு முழுதாக அடங்கிய பிறகு காலிஃப்ளவரை அதிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் உறிஞ்சிய பிறகு கறிவேப்பிலை மேலே தூவி பரிமாறுங்கள்.
- காய்கறிகளில் அனைத்து சத்துக்களும் உள்ளது.
- சூடான சாதத்துடனும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2,
கேரட் - 1,
உருளைக்கிழங்கு - 2,
காலிஃப்ளவர் சிறியது - 1,
பீன்ஸ் - 10,
பச்சை பட்டாணி - அரை கப்,
இஞ்சி சிறிய துண்டு - 2,
பச்சை மிளகாய் - 3,
முந்திரி பருப்பு - 15,
எண்ணெய் - 5 ஸ்பூன்,
கடுகு - அரை ஸ்பூன்,
சோம்பு - ஒரு ஸ்பூன்,
பட்டை சிறிய துண்டு - 1,
ஏலக்காய் - 2 ,
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1,
உப்பு - ஒரு ஸ்பூன்,
தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி.
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
மிக்சியில் வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து ஊற்றி சூடானதும் காய்கறிகளை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை வேறு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
மசாலா நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, இவற்றுடன் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
பிறகு இவை அனைத்தும் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான வெஜிடபிள் மசாலா ரெடி.
- தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
- விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வெந்தயக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். (கீரை 5 நிமிடங்கள் வெந்தால் போதுமானது)
அடுத்து அதில் சிறிது உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
கீரை வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
கடைசியாக அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.
இப்போது கமகம வெந்தயக்கீரை பொங்கல் தயார்.
- காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- இந்த பொங்கல் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட்- 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
உருளைக்கிழங்கு - 1 சிறியது
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். (காய்கறிகள் அனைத்து 1 கப் அளவிற்கு இருக்க வேண்டும்)
அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிக்கலவையைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.
இப்போது கமகம காய்கறிப் பொங்கல் தயார்.
- மலேசிய நாட்டில் பிரபலமாக இருக்கும் நூடுல்ஸ் சூப் வகை 'லக்சா லீமக்'.
- இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு விதமாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 50 கிராம்
புரோக்கோலி - 50 கிராம்
சிகப்பு குடைமிளகாய் - 50 கிராம்
காளான் - 50 கிராம்
டோபு - 50 கிராம்
நூடுல்ஸ் - 100 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1 கப்
வெல்லம் - 1 தேக்கரண்டி
அரைப்பதற்கு:
பாதாம் பருப்பு - 12
மிளகாய் வற்றல் (தண்ணீரில் ஊறவைத்தது) - 10
மிளகாய் வற்றல் (உலர்ந்தது) - 2
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தனியா - 1 டீஸ்பூன்
எலுமிச்சைப் புல் - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
நூடுல்ஸை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
பாதாம் பருப்பை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.
மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தனியா, ஊறவைக்காத மிளகாய் வற்றல், சிறிது எலுமிச்சைப் புல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஊறவைத்த பாதாம் மற்றும் மிளகாய் வற்றலும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினைப் போட்டு 15 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவை தொக்கு பதத்திற்கு வந்து, எண்ணெய் பிரியும் நிலையில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஒரு கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலந்து சிறிது நேரம் ஆறவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காளான் மற்றும் டோபுவை போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெய்யில் மற்ற காய்கறிகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து வடிகட்டி எடுக்கவும்.
பரிமாறும் முறை:
ஒரு கிண்ணத்தில் மசாலா கலந்த கலவையை ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.
அதன் மேல் வேகவைத்த காய்கறிகள், வறுத்த காளான் மற்றும் டோபு சேர்த்து பரிமாறவும்.
- இதில் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.
- வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது.
தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 கிராம்
காய்ச்சிய பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 6 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
குங்குமப்பூ - 1 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.
பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.
பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.
இப்போது பாதாம் ஷிரோ தயார்.
அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூ தூவி பரிமாறவும்.
- இந்த பொங்கல் செய்வது மிகவும் சுலபம்.
- இந்த பால் பொங்கல் செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்
பால் - 4 கப்
முந்திரி - 20
உலர் திராட்சை - 20
ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும்.
* இறுதியில் அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.
குறிப்பு:
* பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.
* பால் பொங்கலுக்கு சர்க்கரை அல்லது வெல்லம் என எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
* பால் பொங்கலை குக்கரிலும் செய்யலாம் அல்லது பாத்திரத்திலும் செய்யலாம்.
- இந்த பொங்கல் டயட்டில் இருப்பர்களும் சாப்பிடலாம்.
- சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
திணை - 1/2 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கருப்பட்டி - 1 கப்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் திணையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, அரை கப் நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் திணையில்ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சூப்பரான திணை கருப்பட்டி பொங்கல் தயார்.
- இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆட்டு தலை - 1
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் துருவல் - 1 கப்.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும்.
குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும்.
- ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும்.
- இன்று ஆந்திரா ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
பச்சை ஏலக்காய் - 3
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
அத்துடன் உப்பு, வறுத்து அரைத்த மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!
- குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- அந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கன் கொத்துக் கறி மசாலாவில் இருக்கும் சிக்கனை பிய்ந்து வைக்கவும்,
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
மூடிவைத்து மிதமான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும்.
பிறகு அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடிவைத்து 1 நிமிடம் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
இப்போது சூப்பரான சிக்கன் ஆம்லெட் தயார்.
- சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சேமியா தேங்காய் பால் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 200 கிராம்,
நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1/4 கப்,
பச்சைப்பட்டாணி - 1/4 கப்,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு.
தாளிக்க...
பட்டை - 1 துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
கடல்பாசி - சிறிது,
நெய், எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
இதில் 1 சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி தண்ணீரை வடிய விடவும்.
அடிகனமான கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், கடல்பாசி, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் பச்சைமிளகாய், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
பின் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்கு கலந்து, குழம்பு பதமாக வரும்போது சேமியா சேர்த்து கிளறி, மூடி சேமியாக உதிரியாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான சேமியா தேங்காய் பால் புலாவ் ரெடி.






