search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கிராமத்து சுவையில் அட்டகாசமான ருசியில் மட்டன் தலைக்கறி
    X

    கிராமத்து சுவையில் அட்டகாசமான ருசியில் மட்டன் தலைக்கறி

    • இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆட்டு தலை - 1

    தக்காளி - 2

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    தனியா தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் துருவல் - 1 கப்.

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும்.

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும்.

    Next Story
    ×