என் மலர்
சமையல்
- சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து விடும்.
- காரசாரமான ஆலு சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா சட்னி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஓமப் பொடி(சேவ்) - தேவையான அளவு
கொத்தமல்லி நறுக்கியது - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மாதுளை - அலங்காரத்திற்கு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்
பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்
இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.
இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் சூப்பரான ஆலு சாட் ரெசிபி ரெடி
- அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய கொள்ளு - 1 கப்,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 2,
உப்பு, எண்ணெய்-தேவைக்கு,
பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொள்ளு பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கொள்ளு வடை தயார்.
- பூசணியில், கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
- பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
சோளமாவு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.
பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.
இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 10
கொத்தமல்லித்தழை - 1 கப்
கறிவேப்பிலை - ¼ கப்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - சிறு துண்டு
கடுகு - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.
பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.
- குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும்.
- குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப சூப்பரான ரெசிபி இது.
தேவையான பொருட்கள் :
தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்
அரிசி - 3/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கேரட் - 2
பீன்ஸ் - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டு சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு ஊற வைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் ரெடி.
- அவலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- காலையில் அவசரமாக வேலைக்கு செல்வர்கள் இந்த ரெசிபி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், நெய் - தேவைக்கு
மிளகு, சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு- தேவைக்கு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் பாசிப்பருப்பை போட்டு உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.
மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.
பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
அவல் கார பொங்கல் ரெடி.
- இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைக்க இந்த ரெசிபி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - கால் கப்
தண்ணீர் - ஒரு கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - தேவைக்கு
சர்க்கரை - அரை கப்
பால் - 1 கப் - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - தேவைக்கு
பாதாம், பிஸ்தா - தேவைக்கு
செய்முறை:
பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.
முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.
இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.
- நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
- இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மெல்லிய அவல் - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1.
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.
- தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிலை மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - 1
பூண்டு - 7
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.
- எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
- வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
எள் - அரை கப்
உலர்ந்த தேங்காய் பொடி - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பால் பவுடர் - 6 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - முக்கால் கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை
எள்ளை வெறும் கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்தெடுத்து கொள்ளவும். ஆறிய பின் இதனை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் எள்ளுடன் உலர்ந்த தேங்காய் பொடி சேர்க்கவும். இவை மூன்றையும் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும்.
நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும்போது, இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பர்ஃபியை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
குறிப்பு: உலர்ந்த தேங்காய் பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம்.
- செரிமானக் கோளாறை நீக்கும்.
- சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறையில் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரம் என நான்கு சுவையையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படுவது 'நெல்லி சுண்டா'. ஊறுகாயைக் குறிக்கும் சொல் 'சுண்டா'. 'நெல்லி சுண்டா' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 7
வெல்லம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
உப்பு - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு அதை ஆறவைத்து விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், நெல்லிக்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
வெல்லம் கரைந்த பிறகு அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக மாறும் வரை அடிப்பிடிக்கவிடாமல் கிளறவும்.
பின்னர் அந்தக் கலவையில் பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான 'நெல்லி சுண்டா' தயார்.
இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வரலாம்.
- அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது.
- சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு.
தேவையான பொருட்கள்:
கம்பு - 2 கப்
வெல்லம் - ½ கப்
தேங்காய்த் துருவல் - ¼ கப்
முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்
வெந்நீர் - தேவைக்கு ஏற்ப
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவைக்கு
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
வாழை இலை - 1
செய்முறை:
* கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்
* அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.
* சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.
* மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்
* இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.
* வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்
* அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.






