என் மலர்
சமையல்
- காலிஃப்ளவரில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1 பூ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டு அடுப்பை அணைக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.
- புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
புளிக்கரைசல் - ஒரு கப்
கீறிய பச்சை மிளகாய் - 2
வெந்த துவரம் பருப்பு - அரை கப்
மிளகு, சீரகம், ரசப்பொடி – தலா 2 ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இதில் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.
இரண்டு கப் தண்ணீர் எடுத்து வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.
ரசம் பொங்கி, நுரைத்து வரும் பொது, கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.
இப்போது சூப்பரான புதினா ரசம் ரெடி.
- பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
- இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
* இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* பன்னீரை துருவிக்கொள்ளவும்.
* ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
* இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.
- குழந்தைகள் இந்த தோசையை விரும்பி சாப்பிடும்.
- காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
கேரட் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - சிறிதளவு
ஸ்வீட் கார்ன் - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* வரமிளகாய கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* பின்பு மிளகுத்தூள், கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* அவ்வளவுதான் இப்போது மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.
மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
அருமையான பிஷ் கபாப் ரெடி.
- கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
- இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - ஒரு கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளித்தண்ணீர் - 2 கப்,
தக்காளிச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
* சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.
* பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.
* வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
* புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
- வித்தியாசமான இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - அரை கப்,
நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
குடைமிளகாய் - 1
கேரட் - அரை கப்,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.
மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.
- குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சீஸ் வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 3,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
கேரட்- 1,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீஸ் - ஒரு சிறு கட்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, கேரட், கோஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.
அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள்.
விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம்.
சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- பிரசவம் ஆன பெண்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.
- சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1 கப்,
பூண்டு - அரை கப்,
தக்காளி - 3,
புளி - எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவைக்கு.
அரைக்க :
மிளகு - 3 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
கண்டதிப்பிலி - 2 சிறிய குச்சி,
சுக்கு - விரல் நீளத் துண்டு,
வால்மிளகு - அரை டீஸ்பூன்,
அரிசி திப்பிலி - சிறிதளவு,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - 3 டீஸ்பூன்.
தாளிக்க :
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு சூடுவர வறுத்து ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
இந்த நீருடன் தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்தெடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள பொடியை தூவுங்கள்.
கிளறி இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
சளி, அஜீரணத்துக்கு நல்லமருந்து இந்தக் குழம்பு.
- இதயநோய் உள்ளவர்கள் வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- டபுள் பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
டபுள் பீன்ஸ் - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
தேங்காய் - 5 சில்லு,
காய்ந்த மிளகாய் - 3,
வேர்க்கடலை - ஒரு ஸ்பூன்,
பொட்டுக்கடலை - ஒரு ஸ்பூன்,
சீரகம் - அரை ஸ்பூன்,
சோம்பு - ஒன்றரை ஸ்பூன்,
தனியா - அரை ஸ்பூன்,
கரம் மசாலா - அரை ஸ்பூன்,
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - - ஒரு கொத்து,
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
டபுள் பீன்ஸ் பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
தேங்காயைத் துருவி கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் ஊற வைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரை ஸ்பூன் சோம்பு, துருவிய தேங்காய், தனியா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஊறவைத்த டபுள் பீன்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு முறை கலந்து விட்டால் போதும்.
சுவையான டபுள் பீன்ஸ் கிரேவி தயாராகிவிடும்.
- குழந்தைகள் எப்போது வித்தியாசமான ரெசிபிகளை விரும்புவார்கள்.
- இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 2
மூவர்ண குடமிளகாய் - தலா 1
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
டூத்பிக் - தே.அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குடைமிளகாய், இட்லியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
இனி டூத்பிக்கில் இட்லி, குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்.
சூப்பரான இட்லி டிக்கா ரெடி.






