என் மலர்tooltip icon

    சமையல்

    • முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
    • இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 200 கிராம்

    வெங்காயம் - 50 கிராம்

    முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

    நறுக்கிய பச்சை மிளகாய் - 2

    நெய் - ஒரு டீஸ்பூன்

    சோம்பு - ஒரு டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

    • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
    • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,

    கொள்ளு - 30 கிராம்,

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்,

    காய்ந்த மிளகாய் -10,

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

    கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

    கடுகு, கறிவேப்பிலை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் கீமா - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தயிர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு- தேவையான அளவு

    பட்டை, கிராம், ஏலக்காய் - சிறிதளவு

    செய்முறை :

    சிக்கன் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி,ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்..

    அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    ஒரு 15 நிமிடங்களுக்கு நீர் வற்றி திக்கான பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

    இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கீமா ரெசிபி ரெடியாகிவிட்டது.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு.
    • இந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    இஞ்சி - ஒரு சிறு துண்டு

    பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

    செய்முறை:

    வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பை தனித்தனியாக போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

    இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

    மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

    குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

    • கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால்.
    • ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    முட்டை - 1

    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் பெரியது - 1

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

    பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

    இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

    பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    அதன் மேல் சிறிது கொத்தமல்லித்தழையைத் தூவவும்.

    இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார்.

    இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோன்னசை சேர்த்து சாப்பிடலாம்.

    • மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - அரை கிலோ

    முட்டை - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 2

    பூண்டு - 2

    துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கச கசா - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    கிராம்பு - 2

    கசகசா - 2 டீஸ்பூன்

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.

    அது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்..

    பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மட்டன் விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி செய்து வைத்த மட்டன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெடி.

    • பன்னீரில் கால்சியம் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    வறுக்க:

    தனியா - 2 1/2 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்- 12

    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்

    தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    புளி - எலுமிச்சை அளவு

    தனியா தூள் - அரை டீஸ்பூன்

    வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    காஷ்மீர் மிளகாவை 1மணி நேரம் சூடு தண்ணிரில் போட்டு ஊற வைக்கவும்.

    வாணெலியில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

    மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், வறுத்த தனியா, வெந்தயம், மிளகு, சீரகம், காஷ்மீர் மிளகாய், கடுகு, 1 1/2 தயிர், புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

    வாணெலியில் நெய்யை ஊற்றி சூடானதும் பன்னீரை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    வாணெலியில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த வைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கிளற வேண்டும்.

    பின் தனியா தூள், கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

    அத்துடன் வறுத்த பன்னீர் சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விட வேண்டும்.

    இப்போது சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் ரெடி.

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 1 சிறியது

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப

    உப்பு - தேவையான அளவு

    சீஸ் - விருப்பத்திற்கேற்ப

    வெண்ணெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் அதில் துருவிய சீஸ் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றி மேலே மிளகு தூள் தூவி எடுக்கவும்.

    அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் டோஸ்ட் செய்து எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

    மீண்டும் தவாவை அடுப்பில் வைத்து பிரெட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும்.

    அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.

    • சாட் மசாலாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • இதை செய்ய அதிக செலவும் ஆகாது.

    தேவையான பொருட்கள் :

    சீரகம், தனியா, அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள் - பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - தலா கால் கப்,

    மிளகு - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - அரை கப்,

    கருப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன்,

    ஏலக்காய், லவங்கம் - தலா 5,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கல், தூசி இல்லாமல் பார்த்து வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் நன்றாக காய வைக்கவும்.

    நன்றாக காய்ந்ததும் அதை மிக்சியில் அல்லது கடையில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    இப்போது சூப்பரான சாட் மசாலா பொடி தயார்!

    இதனை சாட் வகைகள் தயாரிக்கும்போது பயன்படுத்தலாம்.

    • டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடலாம்.
    • மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

    தேவையானபொருட்கள்:

    ஓட்ஸ் - 2 மேசைக்கரண்டி,

    கேரட் - சிறியது 1,

    பீன்ஸ் - 2,

    முட்டை கோஸ் - 25 கிராம்,

    இஞ்சி - சிறிய துண்டு,

    பூண்டு - 2 பல்,

    பச்சை மிளகாய் - 1(தேவைப்பட்டால்),

    வெஜ் ஸ்டாக் பவுடர் - கால் தேக்கரண்டி,

    எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்),

    மிளகு தூள் - தேவையான அளவு,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூப் செய்ய போகும் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், வெஜ் ஸ்டாக் பவுடர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதி வந்ததும் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

    இந்த காய்கறி கலவையில் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.

    சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி தயார்.

    தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    அதிகம் காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து விடலாம்.

    எலுமிச்சைசாறும் அவரவர் ருசிகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

    • எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன், தக்காளி -  தலா ஒன்று,

    சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்,

    எலுமிச்சம்பழம் - அரை மூடி,

    சிறிய பூரிகள் - 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்),

    காராசேவ், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    ஒரு தட்டில் பூரிகளை பரத்தி வைக்கவும். அதன் மீது உதிர்த்த ஸ்வீட் கார்ன், தக்காளி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, காராசேவ், உப்பு ஆகியவற்றை தூவவும்.

    ஹெல்தியான, எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.

    விரும்பினால் கிரீன் சட்னியையும் மேலே விட்டு பரிமாறலாம்.

    • பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 100 கிராம்,

    பால் (காய்ச்சி ஆறவிடவும்) - அரை லிட்டர்,

    சர்க்கரை - 3 டீஸ்பூன்,

    வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.

    செய்முறை :

    பாதாமை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் அதன் தோலை உரித்து, மிக்ஸியில் கொஞ்சம் பால் சேர்த்து விழுதாக அரைத்து, சர்க்கரை சேர்க்கவும்.

    இதனுடன் ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மீதமுள்ள பாலுடன் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பாதாம் மில்க் ஷேக் ரெடி.

    ×