என் மலர்
சமையல்
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் -1,
கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப்,
சீரகம் - அரை டீஸ்பூன் (தட்டிப் போடவும்),
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்த பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாய், கடைந்த தயிர், சீரகம், உப்பு சேர்த்து உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான மைதா போண்டா ரெடி.
இதை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி சூப்பராக இருக்கும்.
- பொங்கலை இன்று வித்தியாசமான முறையில் செய்யலாம்.
- பொங்கல் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பட்டை, லவங்கம், கிராம்பு - சிறிதளவு
புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு- சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு நெய் விட்டு இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
அடுத்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பைபோட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம், முந்திரிப்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
சுவையான மசாலாப் பொங்கல் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளித்தொக்கு, ஊறுகாய் சூப்பராக இருக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சில்லி பொட்டேட்டோ செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 5
சோள மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - விருப்பத்திற்கேற்ப
சாஸ் செய்ய
நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
நறுக்கிய குடைமிளகாய் - 1/2 கப்
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் சாஸ் - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை
உருளைக்கிழங்கு தோல்களை சீவி விட்டு நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தண்ணீரை படி படியாக சேர்த்து கரைத்துக்கொள்ளவும். சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.
நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், சில்லி சாஸ், பச்சை மிளகாய் சாஸ், தக்காளி கெட்சப், மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய பின்பு இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை திக்கான பதம் வந்ததும் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சில்லி பொட்டேட்டோ தயார்.
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
- சர்க்கரை நோயாளிகளும் இந்த தோசையை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
வெல்லம் (பொடித்தது) - 1 கப்,
பச்சரிசி மாவு - கால் கப்,
தேங்காய் (துருவியது) - கால் மூடி,
நன்கு பழுத்த வாழைப்பழம் - 2
ஏலக்காய் - 4,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பழத்தை நன்றாக மசித்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், வெல்லம் நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 5,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.
தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.
- காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடும்.
- 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2
கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் போட்டு கொட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தளர்வாகி விட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் கலந்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.
* தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
- 10 நிமிடத்தில் இந்த் ஸ்நாக்ஸ் செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 4
ரவை -1 கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ரவையை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ரவையில் மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த கலவையை விரல் வடிவில் உருட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்ததை ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் கலக்கல் சுவையாக இருக்கும்..
- பன்னீரில் அதிக கால்சியம் சத்து உள்ளது.
- சாப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மல்லித் தூள் -1 ஸ்பூன்
சீரகப் பொடி -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1ஸ்பூன்.
முந்திரி - 3 ஸ்பூன்
பாதாம் -3 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன்
க்ரீம் - ½ கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சர்க்கரை -1 ஸ்பூன்
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும்.
முந்திரி, பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் வேக வைக்கவும்.
கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மலாய் பன்னீர் ரெடி...
- இந்த அல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
- சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - 200 கிராம்,
கருப்பட்டி - 175 கிராம்,
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 30 கிராம்,
பாதாம் - 20 கிராம்,
பிஸ்தா - 20 கிராம்,
நெய் - 100 கிராம்,
தண்ணீர் - 200 மி.லி.,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.
பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.
ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும்.
பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.
- பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
- பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 200 கிராம்
பசலைக்கீரை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்து மாவில் சேர்க்கவும்.
அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான பசலைக்கீரை தோசை ரெடி.
- குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் வந்தால் இதை செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு கப்,
பால் - 3 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்பால் - ஒரு கப்.
செய்முறை:
பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.
பால் நன்றாக சுண்டியதும் ஆற வைக்கவும். (பால்கோவாவிற்கு முந்தைய பதம்)
பால் நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
சூப்பரான இளநீர் டிலைட் ரெடி.
- தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
- சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 200 கிராம்
கோதுமை - 100 கிராம்
ராகி - 100 கிராம்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வரகு அரிசி, கேழ்வரகு, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.
எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.
இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நல்லெண்ணெய் விட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான கோதுமை வரகு கேழ்வரகு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.






