search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா...
    X

    சப்பாத்திக்கு அருமையான சிக்கன் கீமா...

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் கீமா - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தயிர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு- தேவையான அளவு

    பட்டை, கிராம், ஏலக்காய் - சிறிதளவு

    செய்முறை :

    சிக்கன் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி,ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்..

    அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    ஒரு 15 நிமிடங்களுக்கு நீர் வற்றி திக்கான பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

    இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கீமா ரெசிபி ரெடியாகிவிட்டது.

    Next Story
    ×