என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் உணவுமுறை உள்ளது.
    • நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடலை உருக்கி விடும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள் பற்றி காண்போம்:

    1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

    3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் இரவு 1 டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும், ரத்த சர்க்கரையின் அளவு, தேவையில்லாத கொழுப்பைக்குறைக்கும்.

    இதுதவிர தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி, நீச்சல், இறகுப்பந்து என ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம், மனக்கவலை இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

    • இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும்.
    • சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர்.

    நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன கலிதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    சித்த மருத்துவ மருந்துகளில் விதைகளை முறைப்படி சுத்தி செய்து சூரணமாக்கி (துணை மருந்துகளும் உள்ளடக்கியது) ஆண்மை சம்பந்தபட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும்.

    நத்தை சூரி சூரணத்தையும், அமுக்கரா சூரணத்தையும் இருவேளையும் தளா ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர விந்து கெட்டிப்படும்.

    நத்தை சூரி விதையை பொன்வறுவலாக வறுத்து 400 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்டவைத்து அதனுடன் ஒரு டம்ளர் சுத்த பசும்பால் விட்டு இருவேளை குடித்து வர உடலில் தங்கியுள்ள உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும். ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும்.

    நத்தை சூரி சூரணத்தை தொடந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து தளர்ந்த தசைகள் இறுகும். புறா நத்தை சூரி விதைகளை விரும்பி உண்ணுவதனாலயே புறாவின் தசைகள் இறுக்கமாக உள்ளது.

    நத்தை சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச்சூரியின் விதையை பொடித்து, தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் போக்கும்.

    பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும்.

    இதன் வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது. உடலைத் தேற்றவும், விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.

    • இது பொதுவான நோய்களில் ஒன்றாகும்.
    • தினமும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும்.

    சைனசைடிஸ் நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை இருப்பதாக வேலூர் சித்த மருத்துவ டாக்டர் திவ்யா கூறினார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் சித்த மருத்துவர் டாக்டர் எம். திவ்யா சைனசைடிஸ் நோய்க்கான அறிகுறிகள், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து கூறியதாவது:-

    சைனசைடிஸ்

    இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சைனசைடிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவான நோய்களில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் இதனை பீனிசம், நீர் கோவை, மூக்கடைப்பு நோய் போன்ற பெயர்களால் குறிப்பிடுவர். நமது முகம் மற்றும் தலைப்பகுதிகளில், மூக்கின் இரு பக்கம், நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளில் குழிகள் போன்ற காற்றறைகள் உள்ளன. இவையே 'சைனஸ்' எனப்படும். இவற்றில் குளிர்ந்த காற்று, தூசி போன்றவற்றால் நீர்த்தேக்கம் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதில் நோய் தொற்று, அழற்சி, வீக்கம், தும்மல் போன்ற குறி குணங்கள் ஏற்பட்டு சைனசைடிஸ் என்ற நோய் நிலையை அடையும்.

    காரணிகள்

    பண்பான பித்தத்தில் சேத்துமம் கூடி பரிசித்தால் பீனிசமும்' என்ற சதகநாடியின் படி உடலில் பித்தம் முற்றும் மிகுந்துள்ளபோது கபத்தை பெருக்கக் கூடிய செயல்களால் பிறந்த கபபித்த நோயை பீனிசம் ஆகும். உடற்சூடு அதிகரித்துள்ள போது குளிர் காற்றில் ஈடுபடுதல், குளிர்ந்த பானம் அருந்துதல், வெயிலில் அலைந்து வந்த மறுகணம் குளிரூட்டப்பட்ட அறையில் இருத்தல். புகை, தீங்கு விளைவிக்கும் வாயு, தூசி போன்றவற்றை நுகர்தல், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்ளல்.

    குறிகுணங்கள்

    தும்மல், மூக்குநீர்பாய்தல், மூக்கடைப்பு, தலைவலி மூக்கில் இருந்து சளி, சீழ் போன்றவை வெளியாதல், கண் சிவந்து நீர் வடிதல், தலைபாரம், மூக்கின் துளை சிவந்து காணல், முகம் மற்றும் காது முதலானவை நோதல்.

    வெளி மருத்துவ முறைகள்

    தும்பை, நொச்சி, வேப்பிலை, எலுமிச்சை முதலியவற்றின் இலைகள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு நீராவி பிடித்தல்.

    மூக்கடைப்பிற்கு ஓம பொட்டணமிடல். மூலிகை எண்ணெய் குளியல். தைலங்களை கொண்டு நசியமிடல் வர்ம சிகிச்சை முறை மேற்கொள்ளல்.

    மூக்கடைப்பு மற்றும் அழற்சிக்கு மூலிகையாலான வர்த்தி கொண்டு புகையிடல்.

    அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை

    சைனசைடிஸ் நோயிலிருந்து தற்கால தற்காத்துக் கொள்ள அதிக உடல் சூட்டை குறைக்கும் படியான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும். உடல் சூட்டை அதிகரிப்பதற்கான காரணங்களானவை; நேரம் தவறி உண்ணுதல், இரவு வெகு நேரம் கண்விழித்தல். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கரிசாலை, மணத்தக்காளி கீரை, கத்தரிபிஞ்சு முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, வரப்பு நண்டு முதலியவற்றை உணவில் சேர்த்தல் வேண்டும். தினமும் மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்) மேற்கொள்ளுதல் நல்ல பலன் அளிக்கும். வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைமுழுகுதல் வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகளான தூதுவளை, மிளகு, புதினா, துளசி, சுக்கு, மஞ்சள் முதலியவற்றை தினசரி சேர்த்தல் வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும்.

    வீட்டு வைத்திய முறை

    மிளகு பாவனம், தூதுவளை ரசம், நண்டு ரசம் முதலியவற்றை அருந்த வேண்டும். இலவங்கப்பட்டை தூள் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்துதல் வேண்டும். மஞ்சள் தூளில் துளசி இலைச்சாறு, தும்பை பூச்சாறு, கற்பூரவல்லி இலைச்சாறு முதலிய சாறுகளை இட்டு நெற்றி மற்றும் மூக்கின் இரு பக்கங்களில் பற்றிடல் வேண்டும்.

    சைனசைடிஸ் நோய்க்கான தக்க சித்த மருத்துவ உள் மருந்துகளை டாக்டரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொண்டு நலம் பெற்று வாழ்வோம்.

    • தூக்கம் வாழ்க்கையில் மிக அவசியம்.
    • சரியான தூக்கம் இல்லாவிட்டால் கோபம் வரும்.

    தூக்கம் வாழ்க்கையில் மிக அவசியம். அது இல்லாவிட்டால் வாழ்க்கையில் வேதனைதான் மிஞ்சும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் கோபம் வரும். எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்பட நேரும். இதை எல்லாம் தவிர்க்க தினமும் 7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார்கள், வல்லுனர்கள்.

    * தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் வாழ்க்கைமுறையை ஆய்வு செய்தபோது, அந்த மாணவர்கள் மற்றவர்களை விட நிம்மதியாகத் தூங்கியிருப்பது தெரிந்தது.

    * பிற்பகல் சாப்பாட்டை உரிய நேரத்தில் முடிப்பவர்களுக்கு இரவு நன்றாகத் தூக்கம் வரும்.

    * படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக காபியோ, தேநீரோ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், டி.வி பார்ப்பது, இண்டர்நெட்டில் 'கேம்ஸ்' விளையாடுவது ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

    * சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும். இதற்கு ஒரே வழி, நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது.

    * படுக்கையில் படுத்தபடி டி.வி. பார்ப்பதும், படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பதும் தூக்கத்துக்கு முதல் எதிரி.

    * படுக்கை அறையில் அதிக வெளிச்சத்தைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வெளிச்சம் குறைவான 'டிம்' லைட் இருக்கட்டும்.

    * சுற்றிலும் சத்தம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு தூங்கினால், அந்தத் தூக்கம் சுகம்.

    * படுக்கையில் மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தினால், தூக்கம் மேலும் சுலபமாக வரும்.

    இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நன்றாகத் தூங்கினால், மூளையின் செயல்திறன் கூடும். இதயப் படபடப்பு இருக்காது.

    படுப்பதற்கு முன் உடற்பயிற்சி கூடாது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் இரவு நன்கு தூக்கம் வரும்.

    • பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டு.

    தொப்புள் அருகில் வலியில்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' என்ற குடல் இறக்கம் நோயில் தான் பெரும்பாலும் காணப்படும். தொப்புள் பகுதியில் உள்ள வயிற்று தசை சுவரின் வலு குறைவதால் தொப்புள் வழியாக குடல் இறங்கிவிடும்.

    வயிற்றுக்குள் ஏற்படும் வாயுவின் அழுத்தம், உடல் பருமன், வயிற்று தசைகளில் அதிகமான கொழுப்பு படிவது, நாள்பட்ட இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது, அதிக பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற காரணங்களால் குடலுக்கு முன் உள்ள தசை வலுவிழந்து விடுவதால் குடல் இறக்கம் ஏற்படுகிறது.

    இதற்கான சித்தமருத்துவம்:

    1) மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதாக மலம் கழிய சித்த மருத்துவத்தில் மூலக் குடார நெய் - இரவு 5 முதல் 10 மி.லி. எடுக்க வேண்டும்.

    2) வயிற்றில் உள்ள வாயுவின் அழுத்தத்தை குறைக்க குன்ம குடோரி மெழுகு 250 முதல் 500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்,

    3) வாயுவைப் பெருக்கும் உணவு வகைகளான கிழங்குகள், மொச்சை இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். நாட்பட்ட இருமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்ய வேண்டும். வீக்கம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தால் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை.
    • சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும்.

    சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.

    வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம்.

    உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

    சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக அல்லது ஆசன வாய் வழியாக வெளியேறும். நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப்பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப்பக்கத்தில் வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்குகிறது.

    மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

    வாயுப் பிரச்சினை தீர உதவும் உணவுப் பழக்கம்:

    1) தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.

    2) உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாயுப்பிரச்சினை குறையும்.

    3) சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, சோற்றில், உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப்பிரச்சினை நீங்கும்.

    4) மோரில் வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். 5) ஓமத்தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.

    சித்த மருத்துவத்தில்: 1) ஏலாதி சூரணம் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும். 2) சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் காலை, இரவு சாப்பிட வேண்டும். 3) குன்ம குடோரி மெழுகு 250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கரும்பில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?

    1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

    2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.

    3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.

    5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

    6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.

    7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

    10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.

    கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

    கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.

    கரும்பு ஏன் இனிக்கிறது?

    கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!

    • இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது.
    • குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.

    பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சைல குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.

    தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும்.

    வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

    நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

    'இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.

    பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும்.

    கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

    பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும் படி செய்தால் நோய் நீங்கும்.

    • பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) தினமும் செய்ய வேண்டும்.
    • புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும்.

    தூங்கும் போது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு இயல்பாகவே குறுகி விடுகிறது. இதன் கூடவே தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி (டான்சில்), மூக்கில் வளரும் சதை வளர்ச்சி (பாலிப்), தொப்பை வயிறு, வயிற்றில் ஏற்படுகின்ற காற்றின் அழுத்தம் அதிகப்படுவது, இதய நோய்கள், தைராய்டு பிரச்சினை, மூக்கு இடைச்சுவர் வளைவு போன்ற காரணங்களினால் பொதுவாக குறட்டை (ஸ்னோரிங்) ஏற்படுகிறது. மேலும், குறட்டை விடும் பொழுது திடீரென சத்தம் நின்று போவது, மூச்சு விட திணறுவது போல் இருப்பது 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' என்றழைக்கப்படும்.

    ஆகவே குறட்டை சத்தம் அதிகமாக விடுபவர்கள் இதய நோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர் மூலம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    குறட்டை நீங்க பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) உடல் பருமன், தொப்பையை குறைத்துக்கொள்ள சீரான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இன்றியமையாதது.

    2) மல்லாந்து படுப்பதைத் தவிர்த்து ஒரு பக்கமாக தூங்கினால் தொண்டை சதைகளின் தளர்ச்சி சற்று குறைந்து குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    3) மூக்கடைப்பு, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மஞ்சள் தூள் வைத்து ஆவி பிடிக்கலாம்.

    4) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் எடுத்து பொடித்து காலை, இரவு டீ போல போட்டு குடிக்கலாம்.

    5) லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு சேர்த்து டீ போட்டு குடிக்கலாம், இது தொண்டை சதைகளுக்கு சிறந்தது.

    6) பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) தினமும் செய்ய வேண்டும்.

    7) புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.
    • மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்.

    கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்...

    பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.

    உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக உள்ளனர்.

    கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.

    உங்கள் கண்களின் அளவு கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அகலம் கொண்டது. எடை 0.25 அவுன்ஸ்.

    சிலர் இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒருவகை நோய். அதன் பெயர் ஹீடகோமியா.

    மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.

    80 சதவிகித கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெறக் கூடியதாகவும் உள்ளது.

    உலகில் பொதுவான கண் நிறம் பிரவுன். கண்களின் நிறம் கருவிழி படலத்தில் உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

    நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.

    கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது; பெரும்பாலும் அப்படி தும்ம முடியாது.

    தீக்கோழிக்கு அதன் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.

    புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும். குறிப்பாக இரவு கண் பார்வையை.

    பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும், இருட்டில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.

    டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.

    தேனீக்கு 5 கண்கள் உண்டு.

    மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    • இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
    • குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

    குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக் குளம் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.

    இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.

    • தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
    • தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது.

    எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தக்காளி. இது அதிக மருத்துவ குணம் நிறைந்தது. தக்காளி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

    ஊட்டச்சத்து கலவை:

    தக்காளியில், வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் பி 9 போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் பைலோகுவினோன் என்றும் அழைக்கப்படும், 'வைட்டமின் கே 1' ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

    எலும்பு ஆரோக்கியம்:

    எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் உணவில் சேர்க்கலாம். வைட்டமின்-கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் வளமான அளவில் இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

    கண் பார்வை:

    தக்காளி கண் பார்வை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தி, மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. குணப்படுத்த முடியாத கோளாறான மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை தினமும் தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

    பொலிவான கூந்தல்:

    தக்காளி கூந்தலை அழகாக வைப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் வைட்டமின்-ஏ இருப்பதால் கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும், இதனால் கூந்தல் அழகாக மாறும்.

    புற்றுநோய்:

    இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. செல்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்டுகளும் தக்காளியில் உள்ளன. இதனால் புரோஸ்டேட் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

    உடல் எடை குறைய:

    தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் தக்காளி பழத்தில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி பழத்தை சாப்பிடலாம்.

    100 கிராம் தக்காளியில்...

    நீர்ச்சத்து- 95 சதவிகிதம்

    புரதச்சத்து- 0.9 கிராம்

    கார்ப்ஸ்- 3.9 கிராம்

    சர்க்கரை- 2.6 கிராம்

    நார்ச்சத்து- 1.2 கிராம்

    கொழுப்பு- 0.2 கிராம்

    மொத்த கலோரிகள்- 18

    ×