என் மலர்
பொது மருத்துவம்
- இது மூன்று வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளது.
- தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும்.
கால் பாதங்களில் ஏற்படுகின்ற நாட்பட்ட உராய்வுகள், அழுத்தங்கள் மற்றும் முட்கள், கல் இவை பாதங்களில் ஏற்படுத்துகின்ற அழுத்தத்தை தொடர்ந்து கால் ஆணி வருகிறது. இது ஒரு ஆபத்தான நிலை அல்ல, ஆனால் அவை தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். அவற்றின் அளவு சிறியது முதல் பெரியது மற்றும் மூன்று வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளது. இறுக்கமான காலணிகளைப் பயன்படுத்துவது கால் ஆணிகளுக்கு ஒரு பொதுவான காரணமாகும். ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும் பெண்களுக்கு அழுத்தம் உள்ள பகுதிகளில் கால் ஆணி அல்லது கால்சஸ் உருவாகிறது, மற்றும் இது குதிகால் வலியை உருவாக்கும்.
1. கடினமான கால் ஆணி: அவை கடினமான இறந்த தோலின் சிறிய திட்டுகளை உள்ளடக்கியது. அவை பொதுவாக கால்விரல்களில் தோன்றும். இந்த பகுதியில் தோன்றும் எலும்பு அழுத்தம் கடினமான கால் ஆணியை உருவாக்குகிறது.
2. மென்மையான கால் ஆணி: இந்த வகை கால் ஆணி மென்மையானவை மற்றும் தொடும் போது ரப்பர் போன்ற உணர்வைக் கொண்டிருக்கும். அவை பொதுவாக சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் உள்ளன மற்றும் கால்விரல்களுக்கு இடையே உள்ள பகுதியில் இது உருவாகின்றன.
3. விதை கால் ஆணி: இது பொதுவாக கால்களின் அடிப்பகுதியில் தோன்றும் கால் ஆணியின் சிறிய வடிவமாகும்.
இதற்கான சித்த மருந்துகள்:
1) அம்மான் பச்சரிசி பாலை கால் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து போட்டு வர அது மறையும்.
2) அமிர்த வெண்ணெய், வங்க வெண்ணெய் ஆகியவற்றை கால் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து போட்டு வர அது மறையும்.
3) கொடிவேலி வேர், மஞ்சள் இவைகளை சூடுபடுத்தி கால் ஆணி உள்ள இடங்களில் வைத்து ஒற்றடம் கொடுத்து வர கால் ஆணி மறையும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும்.
- குளிர்காலத்தில் உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிவிடும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் எட்டிப்பார்க்கும். குளிர்காலத்தில் உடல் சமநிலையை பேணுவதற்கு உட்கொள்ளும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் எந்தவித நோய்களையும் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய சூப்பர் உணவுகள் இவை...
இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். குளிர்ந்த மாதங்களில் எத்தகைய நோயையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி டீயும் பருகி வரலாம்.
பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஈ சத்தும் ஏராளமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். பாதாமை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் ஊற வைத்தும் சுவைக்கலாம். பாதாம் பாலும் பருகி வரலாம்.
மஞ்சள் :மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பப்பெற்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் துளசி இலையில் உள்ளன. சுவாச மண்டலத் துக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது. நுரையீரலையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தினமும் தவறாமல் துளசி இலைகள் சிறிதளவு உட்கொள்வது நல்லது.
பூண்டு :இது வைட்டமின் சி, பி, துத்தநாகம் மற்றும் போலேட் போன்ற சத்துக்களின் கலவையாக விளங்குகிறது. மேலும் பூண்டில் ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குளிர்கால நோய் பாதிப்புகளான சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.
- ஞாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.
- உடற்பயிற்சி, தியானம் நல்லது.
ஞாபக மறதி நோய் 'டிமென்ஷியா' மற்றும் 'அம்னீஷியா' என்று இரு வகைகளில் அடங்கும். 'அம்னீஷியா' என்பது மூளையில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகள், மூளைக்காயங்கள், மூளைக்கட்டிகள், வலிப்புகள் இவற்றை தொடர்ந்து ஏற்படும். கடந்த கால, நிகழ்கால ஞாபக மறதியைக் குறிக்கும் 'டிமென்ஷியா' வில் ஞாபக மறதி, மன அழுத்தம், பழக்கவழக்க மாற்றங்கள், கனவுகள் இவை காணப்படும். இது அல்சீமர் நோய் பாதிப்பு, பார்க்கின்சன் நோய், மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பு, டோபமைன், செரட்டோனின் குறைபாடு போன்ற காரணங்களால் வருகிறது.
ஆனால் திடீர் ஞாபக மறதி 'டோர்வே எபக்ட்' எனப்படும். நம் கண் முன்னால் ஒரு பொருள் இருந்தும் அவசர கதியில் அதைக் கவனிக்காமல் எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை எங்காவது வைத்துவிட்டு, பிறகு அதைத் தேடுவது, ஏற்கனவே அறிமுகமான நபரைத் திடீரென பார்த்தவுடன் அவரது பெயர் நினைவுக்கு வராமல் சமாளிப்பது, போன்றவை இந்த திடீர் ஞாபக மறதியில் வந்துவிடும்.
ஞாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:
1) பிரமி நெய் 5 மி.லி. வீதம் காலை, இரவு சாப்பிடலாம்,
2) வல்லாரை மாத்திரை 2 காலை, இரவு எடுக்க வேண்டும்.
3) அமுக்கரா லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
4) நெல்லிக்காய் லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு சிறந்த பலனைத் தரும்.
6) அக்கரகாரம் என்ற மூலிகை வேரிலிருந்து எடுக்கப்படும் `பைரித்ரின்' நரம்பு களுக்கு உற்சாகத்தை தருகிறது.
வல்லாரை, பிரமி கீரை, துளசி செடி இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை எடுத்து இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஞாபக சக்தி பெருகும். வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகைப் பழங்கள், பூசணி விதைகள், பாதாம், வால்நட், வேர்க்கடலை இவைகளில் உள்ள விட்டமின் ஈ, விட்டமின் டி, ஒமேகா-3, துத்தநாகம் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன. உடற்பயிற்சி, தியானம், பிரார்த்தனைகள் நல்லது.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- இது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவாது.
- பாரம்பரியமாக வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு.
'சொரியாசிஸ்' என்பது 'ஆட்டோ இம்யூன்' வகையைச் சார்ந்த ஒரு தோல் நோயாகும். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலைத் தாக்கி ஒரு நோயை உருவாக்குமானால் அதையே 'ஆட்டோ இம்யூன்' என்கிறோம். சாதாரணமாகத் தோலின் வெளி அடுக்கு 28 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை உதிர்ந்து, புதிய தோல் உருவாகிறது. ஆனால், சொரியாசிஸ் நோயில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தோல் உதிர்ந்து செதில்களாக மாறிவிடுகிறது. இது உடலின் எந்த பாகத்திலும் வரலாம். இது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவாது. பாரம்பரியமாக வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஒரு நபருக்கு சொரியாசிஸ் ஒருமுறை வந்து சரியான பின்னரும் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.
இது கட்டேட், பஸ்டுலார், எரித்ரோடெர்மிக், பிளேகு, இன்வெர்ஸ் என்று பல வகைப்படுகிறது. ஒரு சிலருக்கு நகத்தில் மட்டும் வரும், சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்காலில் வருகிறது. இது 'பால்மர் மற்றும் பிளான்டர் வகை சொரியாசிஸ்' என்றும், தலையில் மட்டும் வந்தால் 'ஸ்கால்ப் சொரியாசிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தநோய் வந்தவர்கள் கவலை, பயம், பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த நோய் குணமாக உதவும் சித்த மருந்துகள்: 1) அமுக்கரா மாத்திரை 2 வீதம், மூன்று வேளை சாப்பிடவும். 2) பரங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், பலகரைப் பற்பம் 200 மி.கி, சிவனார் அமிர்தம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, வெந்நீர் அல்லது தேனில் சாப்பிடலாம். 3) பரங்கிப்பட்டை ரசாயனம் 500 மி.கி இருவேளை உணவுக்குப் பின்பு எடுக்கவும். 4) வெட்பாலைத் தைலம் 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசவும். 5) ஆடு தீண்டாப்பாளைத் தைலம் வெளியே பூசி வரவேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு உதவும்.
- கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாக தயிர் உள்ளது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாகவும் தயிர் உள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்யும். மேலும் தயிரில் குறைந்த அளவே கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு இவை உதவும்.
இருப்பினும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த அதனை உட்கொள்வது சளி, இருமல் பிரச்சினைக்கு வித்திடும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது. குளிர்காலத்திலும் தயக்கமின்றி உட்கொள்ளலாம். இருப்பினும் இரவில் உட்கொள்வதாக இருந்தால் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பகல் பொழுதிலும் தயிர் உட்கொள்வதற்கு யோசிப்பவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.
குளிர்காலத்தில் வரும் சரும பிரச்சினைகளில் முக்கியமானது சருமம் உலர்வடைவது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் தயிரில் இயற்கையாகவே உள்ளன. அவை சருமம் உலர்வடையாமல் தடுக்கக்கூடியவை. முகப்பரு பிரச்சினை இருப்பவர்களுக்கு தயிர் சிறந்த நிவாரணியாக அமையும். அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தை அழகுபடுத்தும் `பேஸ் பேக்'காகவும் உபயோகிக்கலாம். தயிரை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் போதும். அது முகத்திற்கு பொலிவு சேர்ப்பதோடு, இறந்த செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும். குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. அது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.
குளிர்காலத்தில் உணவில் கலந்து சாப்பிடுவதோடு சமைக்கும் பொருட்களிலும் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு தயிரும் சேர்க்கலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாவில் கலந்து ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக்களின் எண் ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும்.
ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகை செய்யும். குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க தயிர் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட்டாக தயாரித்து கொடுப்பது சிறப்பானது.
- மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
- குளிர்காலத்தில் சளி, இருமல் ஏற்படுவது இயல்பானது.
குளிர்காலத்தில் சூடாக டீ, காபி பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அது குளிர்ச்சியான கால நிலையில் இருந்து உடலை சூடாக வைத்திருக்க உதவும். இருப்பினும் டீ, காபிக்கு மாற்றாக மசாலா டீ, கிரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சாமந்தி டீ, இஞ்சி டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். குளிர்காலத்தில் இந்த மூலிகை டீக்களை ஏன் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
1. சளி - இருமலை எதிர்த்துப் போராடும்
குளிர்காலத்தில் சளி, இருமல் ஏற்படுவது இயல்பானது. அந்த சமயத்தில் சூடான தேநீர் பருகுவது இதமளிக்கும். இருப்பினும் மசாலாப் பொருட்கள் கலந்திருக்கும் மூலிகை தேநீர் சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, மஞ்சள் சேர்க்கப்பட்ட டீ, லவங்கப்பட்டை கலந்த டீ பருகுவது மூக்கின் வீக்கத்தை தணித்து நாசிப்பாதைக்கு இதமளிக்கும். சளி அல்லது இருமல் அறிகுறிகளை போக்க உதவும்.
2. செரிமானம் சீராக நடைபெறும்
குளிர்காலத்தில் எளிதில் ஜீரணமாகாத கடினமான உணவுகளை உண்பது, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை தவிர்க்க இஞ்சி டீ, புதினா டீ, சோம்பு டீயை பருகலாம். இவை இரைப்பை, குடல் பாதிப்புகளை தடுக்கவும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும் உதவும்.
3. ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சி தன்மையும், உடல் செயல்பாடு குறைந்து போவதும் உடல் விறைப்பு தன்மை அடைவதற்கு காரணமாகிவிடும். அதனால் ரத்த ஓட்டமும் தடைப்படும். லவங்கப்பட்டை தேநீர், சாமந்தி தேநீர் பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
4. அழற்சியை குறைக்கும்
ஏதேனும் ஒரு மூலிகை தேநீருடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து பருகலாம். கொதிக்கும் நீரில் சிறிதளவு கிராம்புகளை சேர்த்து, வடிகட்டி பருகலாம். இவை குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், உடல் வலியை குறைக்கவும் உதவும்.
5. உடல் ஆற்றலை அதிகரிக்கும்
மசாலா டீ, இயற்கையாகவே உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஊக்கியாக செயல்படுகிறது. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. வேறு ஏதும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. மூலிகை தேநீர் தவிர மற்ற பானங்களில் காபின் உள்ளடங்கி இருக்கும். அதனை அதிகம் நுகரும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது.
- கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயிறு வகைகளில் பச்சைப் பயிறு முக்கிய இடம் பிடிக்கிறது. இவற்றில் வைட்டமின்கள்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த அற்புதமான பயிறை நாம் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் இன்னும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
முளை கட்டிய பச்சைப் பயிற்றில் ஏகப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் முளை கட்டிய பச்சைப் பயிறு உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். இவற்றில் சோடியம் குறைவு. இது கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். முளை கட்டிய பச்சைப் பயிற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறது.
- மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது
- குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும்.
'அதலைக்காய்' என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள்காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இந்த காயை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.
பாகற்காயைப் எப்படி பொரியல் மற்றும் குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிட வேண்டும்.
- உங்கள் உடலின் எந்தப் பகுதியும் பாதிக்கப்படலாம்.
- சொரியாசிஸ் என்பது வம்ச வழியாக வரக்கூடிய ஒரு மரபணு நிலை.
சொரியாசிஸ் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இது தடிமனான வறண்ட நிறமாற்றம் செய்யப்பட்ட தோலில் அரிப்பு அல்லது புண் திட்டுகளை ஏற்படுத்தும். உங்கள் உடலின் எந்தப் பகுதியும் பாதிக்கப்படலாம்.
சொரியாசிஸ் ஆபத்து யாருக்கு அதிகம்?
சொரியாசிஸ் என்பது வம்ச வழியாக வரக்கூடிய ஒரு மரபணு நிலை. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக திகழ்கிறது. மேலும் அறிகுறி கள் பொதுவாக 15 மற்றும் 35 வயதிற்குள் உருவாகின்றன. சொரியாசிஸ் பிளேக்குகள் பொடுகு போன்ற சில இடங்களில் இருந்து பெரிய வெடிப்புகள் வரை பெரிய பகுதிகளை உள்ளடக்கும். சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:-
* நிறமாற்றம் பெற்ற திட்டுகள் அல்லது செதில்களால் மூடப்பட்ட தோலின் உயர்த்தப்பட்ட பிளேக்குகள் (Pla que),
* உலர்ந்த அல்லது வெடிப்பு தோல்.
*பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் எரிச்சல் அரிப்பு அல்லது புண்.
*குழி அல்லது தடித்த விரல் நகங்கள் அல்லது கால் நகங்கள்.
* வீங்கிய மூட்டுகள்
சொரியாசிஸ் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்:
1) வம்சவழி, 2) மன அழுத்தமும் சொரியாசிஸ்ம் 3) குளிர் காலநிலை, 4) உலர்ந்த சருமம் சருமத்தை காயப்படுத்தும் எதுவும் அதிகப்படியான வறண்ட சருமம் உட்பட சொரியாசிஸ் ஏற்படுத்தும். 5) சில மருந்துகள், 6) மேல் சுவாச நோய்த் தொற்றுகள் (Upper Respiratory Infection) சளி மற்றும் பிற நோய்த் தொற்றுகள் சொரியாசிஸ் ஏற்படுத்தும். * புகைப்பிடித்தல், * மது
சொரியாசிஸ்சின் கால அளவு
சொரியாசிஸ் ஒரு நாள்பட்ட துன்ப நிலையாக கருதப்படுகிறது. தற்போது முழுமையான சிகிச்சை இல்லை. ஆனால் இந்த தோல் நோய் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளலாம். சிலருக்கு சொரியாசிஸ் ஒரு நேரத்தில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட தொடர்ந்து இல்லாமல் இருக்கலாம். இது நிவாரணம் என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்கள் சுழற்சி முறைகளில் தடிப்புத் தோல் அழற்சியை அனுபவிக்கிறார்கள்.
சொரியாசிஸ்கான சிகிச்சை
சொரியாசிஸ்யை முழுமையாகவும் குணப்படுத்த முடியாது என்றாலும் அதற்கு சிகிச்சையளிப்பதற்கான வழியுள்ளன. நீங்கள் பயன்படுத்தும் சிகிச்சை முறைகளின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
Dr.A.தேவி சங்கீதா M.D., (DVL), சாந்தி நர்சிங் ஹோம், சுரண்டை
- பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.
- பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன
பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-
பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது.
இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.
நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.
மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது.
பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும். மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும். கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது.
பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும். முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
- அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆசனவாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலை சுற்றி உள்ளது வெளி மூலம்.
இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த கசிவை காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தை பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப்பயணம் போன்றவற்றை தவிர்க்கவும். மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல். நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும். குடல்வால் நோய் ஏற்படும். முதலில் மலச் சிக்கலை தவிர்க்க வேண்டும்.
உணவில் அகத்திக்கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும். மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம். கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது. மீன், கருவாடு, கோழி கூடாது. மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
அதிக காரம் கூடாது.ஒரே இடத்தில் நீண்டநேரம் அமரக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் பகுதி வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல் வேண்டும். இவ்வாறு செய்து அதன் பாதிப்பை குறைக்கலாம்.
- பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
- பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும்.
காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம்
பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும்.
Atherosclerosis இந்த பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இருதய நோய் உள்ளவர்கள் பல் மருத்துவரை அணுகும் போது இருதய நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் மாத்திரைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
ஈறுகளில் உள்ள கிருமிகளை உண்டாக்கும் இன்பக்ஷன் மூலமாக நமது மூளையில் இருக்கும் செல்கள் பாதித்து நமக்கு ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற நோய்களை உண்டாக்கும். இப்படியும் ஆகுமா என பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பலரும் பல் பிரச்சினையை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர்.
நீரழிவு நோய் உள்ள ஒரு சிலருக்கு எவ்வளவு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், சாப்பாடு திட்டமாக எடுத்துக்கொண்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையவே குறையாது. ஏன் என்றால் அவர்களின் ஈறுகளில் உள்ள கிருமிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விடாது. எனவே நமது பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






