என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை.
    • மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை.

    கோவை புதுசித்தாப்புதூரில் ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டரின் டாக்டர்.S.கோகுலரமணன் கூறியதாவது:-

    கோவை ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் இன்று வலைத்தளங்களில் (online) மிகவும் அதிகமாக காணப்படும் விளம்பரம். Diabetic is reversible? சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இல்லாதவர்களாக மாற முடியுமா? இது சாத்தியமா?

    அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இது சாத்தியம் அல்ல. 5 முதல் 10 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் 10 சதவீதம் நோயின் தன்மையை குறைக்க முடியும். மருந்துகளுக்கான தேவையை குறைக்க முடியும்.

    சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை. மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை. இதில் 2-வது இன்சுலின் செயல்படாத தன்மை இருப்பவர்களுக்கு உடல்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நேரம் தவறாமை உணவு உட்கொள்ளுதல் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை மிகவும் குறைக்க முடியும். கண்மூடித்தனமாக தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, இன்சுலினை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது.

    அன்மைக்காலத்தில் நிறைய சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட்டு, பிற மருத்துவமுறைகளை செய்து சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்க்க வேண்டிய கட்டாயமாகிறது. சர்க்கரை மருந்து, மாத்திரைகளை வேற எந்த மருந்துகளுடனும் எடுத்து கொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 90876 44003, 0422-2522138 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் டாக்டர் S.கோகுலரமணன் பேட்டி

    • 100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது.
    • ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

    100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

    பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

    பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

    இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.
    • நட்ஸ் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கண்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் 24 மணி நேரத்தில், குறைந்தது 12 மணி நேரம் கணினி திரைகளையே பார்த்து கொண்டிருப்பதால், கண்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். அத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு, கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.

    ஆரோக்கியமாக கண்களை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

    1. மீன்

    நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 ஆகியவை மீனில் அதிகம் நிரம்பி இருக்கின்றன. இவை கண் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு நன்மை தரும்.

    2. முட்டை

    லுடீன் மற்றும் வைட்டமின் ஏ உட்பட முட்டையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    3.முழு தானியங்கள்

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் நியாசின் ஆகியவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

    4. பச்சை காய்கறிகள்

    கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலார்ட் கீரைகள், புரோக்கோலி, பட்டாணி மற்றும் வெண்ணெய் ஆகியவை கண் தசை பராமரிப்புக்கான சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

    5. சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் பெர்ரிகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கும்.

    6. நட்ஸ்

    பிஸ்தா, வால்நட், பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அவை உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    7.பருப்பு வகைகள்

    கிட்னி பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை பயோ பிளவனாய்டுகள் மற்றும் துத்தநாகத்தின் நல்ல ஆதாரங்களாகும். இது கண் பார்வை மற்றும் பிற கண் தொடர்பான செயல்பாடுகளுக்கு உதவும்.

    8.கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆதாரமான வைட்டமின் ஏ-வை உற்பத்தி செய்ய உதவுகிறது.

    • கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது.
    • பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு.

    பித்தப் பை பேரிக்காய் வடிவிலிருக்கும் ஜீரண உறுப்பு. பித்தப்பையில் தான் கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் சேகரிக்கப்பட்டு உணவு செரிமானத்தின் போது சிறு குடலை வந்தடையும். சுமார் 30-50 மி.லி. பித்த நீர் பித்தப் பையில் இருக்கும். கொழுப்பு செரிமானத்திற்கு பித்த நீர் இன்றியமையாதது. கல்லீரல் சுரக்கும் பித்த நீரில் கொழுப்பு அதிக அடர்த்தியாக இருப்பது, பித்த நீரில் பிலிரூபின் அதிகமாக இருப்பது, பித்தப் பை சரியாக சுருங்கி, விரியாமல் இருப்பது, இவை பித்தப் பையில் கற்கள் உருவாகுவதற்கான பொதுக் காரணங்கள்.

    இவை தவிர பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது, அதிக எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, உடல் பருமன் போன்ற காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

    சித்த மருத்துவத்தில் பித்தப்பை மற்றும் பித்தத்தாரை கற்களுக்கான சிகிச்சை முறைகள் வருமாறு:

    இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, பழச்சாறு, புதினா சாறு இவைகளை சமஅளவில் எடுத்து, அதனுடன் சமஅளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 10 மி.லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பழச்சாற்றில் கலந்து குடிக்க வேண்டும். கீழாநெல்லி பொடி அல்லது கீழாநெல்லி சாறு மற்றும் கரிசாலை பொடி அல்லது கரிசாலைச் சாறு எடுத்து மோருடன் கலந்து காலை, இரவு என இருவேளை குடித்து வரவேண்டும்.

    கீழாநெல்லி மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். சாந்த சந்திரோதய மாத்திரை காலை, மதியம், இரவு 2 மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும்.

    பிடங்கு நாறி இலைப்பொடி, மஞ்சள், கடுக்காய்த் தோல் இவை மூன்றையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் குடிக்க வேண்டும். இது பிடங்கு நாறிக் குடிநீர் எனப்படும். மண்டூராதிக் குடிநீர், வெடியுப்புச் சுண்ணம், வெடிஅன்னபேதிச் செந்தூரம் இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    நார்ச்சத்து அதிகமுள்ள அவரை, பீன்ஸ், கோவைக்காய், சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகள் இவைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
    • இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

    இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

    * காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.

    * காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது.

    * கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

    * மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.

    * காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.

    * கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    * காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.

    * ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.

    • சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

    வயிற்றுப்புண் குணமடைய நேரம் தவறாமல் உணவு சாப்பிடுங்கள். காரமான, புளிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். இரவு நெடுநேரம் கண்விழித்து டி.வி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஹெச்.பைலோரை பாக்டீரியா தொற்றினாலும் குடல் புண் வரும்.

    இதற்கான சித்த மருந்துகள்: வில்வாதி லேகியம், சீரக வில்வாதி லேகியம் இவைகளில் ஒன்றை காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடுங்கள். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. எடுத்து மூன்று வேளை, நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், குன்ம குடோரி மெழுகு கால் டீ ஸ்பூன் (250 மி.கி) காலை, இரவு உணவுக்குப் பின்பு சாப்பிடுங்கள்.

    உணவில் மோர், தயிர், பிரண்டைத் தண்டு துவையல், மணத்தக்காளி கீரை, சுண்டை வற்றல் குழம்பு மற்றும் பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், இஞ்சி, மோர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களில் மாதுளம்பழம், செவ்வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுங்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உடல் பருமனுள்ளவர்களுக்கு அதிகமாக வருகிறது.
    • நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரும்.

    வெரிகோஸ் வெயின் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது.

    இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.

    சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

    வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கைகளைக் கழுவுவதற்கும் ஒரு முறை இருக்கிறது.
    • விரல் இடுக்குகளில் சோப்பு தேய்ப்பது அவசியம்.

    தொழில்நுட்ப ரீதியாக இன்றைய நவீன வாழ்க்கை ஒருபுறம் பிரமிக்க வைத்தாலும் மறுபுறம் மிகுந்த சுகாதாரக்கேடாக இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலே இப்படி இருப்பதால் கைகளின் வழியாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் மிகுதியாகவே ஆகிவிட்டது.

    இத்தகைய நிலையில், நம்மைத் தற்காத்துக் கொள்ள கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கென சில முக்கியமான நேரங்களையும், கைகளைக் கழுவும் முறை பற்றியும் விளக்குகிறார்கள்.

    சரி... எப்போதெல்லாம் கைகளைக் கழுவ வேண்டும்?

    உணவு சமைக்கச் செல்லும் முன்பும், சமைத்த பின்பும்...

    உணவு உண்ணும் முன்...

    உடல்நலக் குறைவானவர்களைக் கையாண்ட பிறகு...

    ஏதேனும் காயத்துக்கு அல்லது

    புண்ணுக்கு மருந்து தடவிய பிறகு...

    மிக முக்கியமாக கழிப்பறை சென்று வந்த பிறகு...

    குழந்தைகளுக்கு டயாபர் மாற்றிய பிறகு அல்லது கழிவறை சென்று வந்த குழந்தையை சுத்தம் செய்த பிறகு...

    கைகளை வைத்து இருமும்போது அல்லது சளியை சுத்தம் செய்யும்போது...

    ஏதேனும் ஒரு விலங்கையோ அல்லது செல்லப் பிராணியையோ தொடும்போது அல்லது செல்லப் பிராணிக்கு உணவு வழங்கிய பிறகு அல்லது செல்லப்பிராணியின் கழிவுகளை அகற்றிய பிறகு...

    குப்பைகளை அகற்றிய பிறகு அல்லது வீட்டினை சுத்தம் செய்த பிறகு...

    மேற்கண்ட நேரங்களில் கைகளைக் கழுவுவது அவசியம். கைகளைக் கழுவுவதற்கும் ஒரு முறை இருக்கிறது.

    பைப்பிலிருந்து வருகிற சுத்தமான தண்ணீரால் அல்லது ஓடுகிற தண்ணீரால் கைகளை முழுவதுமாக நனைத்துக் கொள்ளுங்கள். சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். விரல் இடுக்குகளில் சோப்பு தேய்ப்பது அவசியம். தண்ணீரில் 20 விநாடிகள் வரையாவது கழுவ வேண்டும்.

    கைகளைக் கழுவிய பிறகு, சுத்தமான துண்டினால் துடைத்துக் கொள்ளுங்கள். அழுக்குத் துணியால் துடைத்தால் அதுவரை நீங்கள் மெனக்கெட்டு கழுவியது வீணாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

    • நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும்.

    வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.

    நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும்.

    மூட்டு வீக்கம்

    கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.

    கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும்

    உணவு முறைகள்

    மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது.

    மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும்.

    தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும்.

    பழங்கள்

    உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப் பிரயோகம்

    வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும். 100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்.

    • காது இரைச்சல் என்பது நோயே அல்ல.
    • இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும்.

    அனைத்து இசையையும், பேச்சையும் கேட்பதற்காக படைக்கப்பட்டது தான் காது. அந்த காதுக்குள்ளேயே இரைச்சல் கேட்பது பலருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு அந்த பிரச்சனை உள்ளது.

    காது இரைச்சல் (Hnnitus) என்பது என்ன?

    காது இரைச்சல் என்பது நோயே அல்ல. அது ஒரு உணர்வு (Sensation) உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு. இதற்கான காரணம் காதிலும் இருக்கலாம். உடலில் வேறு பகுதியிலும் இருக்கலாம். காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, விசில் அடிப்பது போன்றோ, அல்லது 'ஸ்விங்' என்று காற்று அடிப்பது போன்றோ இருந்தால் ஒரு நபருக்கு காது இரைச்சல் இருக்கிறது என அர்த்தம். இந்தப் பிரச்சனை சிலருக்கு விட்டு விட்டு இருக்கும். வேறு சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். இந்த இரைச்சல் சுற்றுப்புற சூழல் அமைதியாக இருந்தால் அதிகமாக தெரியும். குறிப்பாக இரவில் இதனால் தூக்கம் குறைவதுடன் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

    தற்காலிக காரணங்கள்

    * வெளிக்காதில் இயற்கையாக சுரக்கின்ற மெழுகு கட்டி யாகி காதை அடைத்துக்கொள்ளுதல்.

    * அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக் கொண்டால்.

    * காளான் தொற்று ஏற்பட்டால்

    * அடிக்கடி சளி பிடிப்பதால்

    * நடுக்காதில் நீர் கோர்த்துக் கொண்டால் மற்றும் சீழ் பிடித்தால் காதில் இரைச்சல் கேட்கும்.

    * தொண்டையையும் காதையும் இணைக்கிற 'காது மூக்கு தொண்டைக்குழாய் சுழற்சி அடைந்து வீங்கிக் கொண்டாலும் காது இரைச் சல் வரும். ஒலி மாசு தரும் போது இரைச்சல் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். பெருநகரங்களில் சாதாரண மாக 90 டெசிபல் சத்தம் கேட்டுக் கொண்டிருக் கிறது.

    *இயந்திரங்களுக்கு மத்தியில் வேலை செய்பவர்கள் பாதிப்படைகின்றனர்.

    * 'வாக் மேன்' அல்லது 'இயர் போன்' அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு பாதிப்பு அதிகம்.

    * விமான நிலையம் போன்ற அதிக சத்தம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

    அதிக ஒலியினால் 'காக்ளியர்' எனும் உள்காது நரம்பு அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, அங்கு இருக்கும் 'நரம்பிழைகள்' சிதைந்து விடுகின்றன. இதனால் காது கேட்கும் திறன் குறைந்து அதனால் இரைச்சல் ஏற்படும்.

    நிரந்தர குறைபாடு

    * மேற்கூறிய அதிக ஒலி மாசுவினால் காது கேட்கும் திறன் நிரந்தரமாக பாதிப்படையும்.

    * வயதானவர்களுக்கு இயற்கையாகவே கேட்கும் திறன் குறைந்து, அதனால் இரைச்சல் ஏற்படும்.

    *பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இரைச்சல் ஏற்படும்.

    * நடுக்காதில் 'எலும்பு முடக்கம்' எனும் நோய் ஏற்படும் போது எலும்புகள் குறுகி ஒலி அதிர்வுகள் உள்காதிற்குள் செல்வது தடைபடும். இது உடனே சரி செய்ய முடியாவிட்டால் நாளடைவில் காது கேட்கும் திறன் பாதித்து அது நிரந்தர குறைபாடாக மாறும்.

    * பல்வேறு நோய்களுக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது காது திறன் பாதிக்கப்பட்டு, இரைச் சல் ஏற்படும். உதாரணமாக காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இருதய நோய்.

    சிகிச்சை

    மேற்கூறியவற்றில் நிரந்தரக் குறைபாடு ஏற்பட்டு காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் போது, "காது கருவி பொருத் துதல்" ஒன்றே தீர்வு. ஏனென்றால் எவ்வளவு சதவீதம் திறன் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த குறைபாட் டிற்கு தகுந்த சத்தம் உள்ளே செல்லும்போது காதிற்குள் கேட்கும் இரைச்சல் முற்றிலும் நிற்கும். அதனால் கட்டாயம் கருவி (Hearing Aid) பொருத்திக் கொள்ள வேண்டும்.

    * ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் இரைச்சலுக்கான காரணம் கண்டறிந்து சரி செய்யலாம்.

    * இரைச்சலுக்கு தற்போது மறைபோலி தொழில்நுட்பம், டி.ஆர்.டி. போன்ற முறைகளும் இப்போது பிரபலம் அடைந்து வருகின்றன.

    மேலும் ஆலோசனை களுக்கு தயங்காமல் அழையுங்கள். செல்: 9626297922.

    மு. கண்ணன் நிறுவனர், இன்ஸ்டா ஹியரிங் சொல்யூஷன்ஸ்

    • தொப்பை வரும் போது உடல் பருமனும், இடுப்பு அளவும் கூடுகிறது.
    • தொப்பை இருக்கிறதா என்பதை இடுப்பின் அளவை வைத்து அறியலாம்.

    தொப்பை வரும் போது உடல் பருமனும், இடுப்பு அளவும் கூடுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்'. இது 19-க்கு கீழிருந்தால் உடல் எடை குறைவு. 19-24-க்குள் இருந்தால் சரியான உடல் எடை. 24-30 க்குள் இருந்தால் அதிக உடல் எடை. 30-க்கும் மேலிருந்தால் அது உடல் பருமனை குறிக்கும். சராசரியாக ஆண்கள் 21 -25, பெண்கள் 18 - 23 அளவில் இருக்கலாம்.

    தொப்பை இருக்கிறதா என்பதை இடுப்பின் அளவை வைத்து அறியலாம். இடுப்பின் அளவு அதிகமாக இருப்பது நம் ஆயுளின் அளவைக் குறைக்கும் என்பது ஒரு பொது நியதி. ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ (37 அங்குலம்), பெண்ணாக இருந்தால் இடுப்பின் அளவு 80 செ.மீ (32 அங்குலம்) இருக்கலாம். இதற்கு அதிகமாக இருப்பது அதிகரித்த உடல் பருமனைக் குறிக்கும்.

    சித்த மருத்துவத்தில்

    1) நத்தைச் சூரி விதைப்பொடியை காப்பி போல இருவேளை காய்ச்சி குடிக்கலாம்.

    2) குங்கிலியப் பற்ப மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம்.

    உணவுகள்: சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) எடுத்து அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.

    இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து 5 மில்லி தேன் கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்)

    எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.

    வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாகதான் இருக்கின்றன. அந்த வகையில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

    பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் 'அல்சர்' ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் 'ஸ்டார்ச்' அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.

    ரத்தம் சம்பந்தமான பல பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.

    ×