என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • பலர் உடல் வலிகளால் அவதிப்படுவது பெருமளவில் இந்த காலங்களில் தான்.
    • குளிர்கால உடல்வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.

    மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை. இந்த காலங்களில் பலவிதமான வெளி நிகழ்வுகளில் பங்கேற்பதும், மழை சாரலில் லேசாக உடல் நனைவதில் ஏற்படும் சுகமான அனுபவங்களும், கிறிஸ்மஸ், நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக வெளியிடங்களுக்கு, குறிப்பாக திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்பதெல்லாம் மனதிற்கு குதூகலம் மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய ஒன்றுதான். இருந்தாலும் பல பேர் உடல் வலி, மூட்டு வலிகள், தசை பிடிப்பு, தசைகள் இறுகியது போன்ற உணர்வு, நரம்பு வலிகள் போன்றவற்றில் அவதிப்படுவதும் பெருமளவில் இந்த காலங்களில் தான். இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

    குளிர்காலங்களில் 1. உடலுக்கு தேவையான சூடு குறைவதால், 2. தசைகள் இறுகுவதால் 3. ரத்த ஓட்டத்தில் வேகம் குறைவதால், 4. உடலில் நீர் பிடிப்பு குறைவதால் மற்றும் 5. காற்றின் அழுத்தம் குறைவதால் போன்ற பல காரணங்களினால் வலிகள் ஏற்படுகின்றன.

    குளிர்கால உடல் வலிகளின் அறிகுறிகள் என்னென்ன

    * உடலின் மூட்டுகளில் வலி இடுப்பிலிருந்து குதிகால் வரையில் பரவும் அதீத வலி

    * உடலின் தசைகள் திடீரென்று சுளுக்கு போல் பிடித்துக் கொள்ளுதல்

    * விரல்களின் மூட்டுக்கள் இறுகி வேலை செய்வதில் சிரமம் ஏற்படுத்துதல்

    * தசைகளில் வலி அவ்வப்போது குறுகிய காலத்திற்கு விட்டு விட்டு வந்து போதல் போன்றவை எல்லாம் இந்த குளிர் பனி காலங்களில் ஏற்படக்கூடியது சகஜமே.

    குளிர்காலம் ஏன் தசைகளையும் மூட்டுகளையும் பாதிக்கிறது

    பொதுவாக குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் இதயம் நுரையீரல் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக அளவில் செல்வதை உடல், உறுதி செய்து கொள்கிறது. இந்த நேரங்களில் கை கால்களுக்கு ரத்த ஓட்டத்தில் லேசான தடை ஏற்படலாம். இதனால் அந்த பகுதிகளுக்கு வெப்பம் செலுத்தப்படுவதும் குறைகிறது. இதனால் உடலில் ஒரு வித இறுக்கம் ஏற்பட்டு கை கால்களின் நுனிகள் குறிப்பாக விரல்கள் வலிக்க துவங்குகிறது. பொதுவாக குளிர்காலங்களில் குளிர்சசியினால் காற்றின் வெப்பம் குறைகிறது. இதனால் காற்றின் அடர்த்தி அதிகம் ஆகிறது. இதனால் பேரோமெட்ரிக் ஏர் பிரஷர் என்று அழைக்கப்படும் காற்றின் அழுத்தம் குறைகிறது. இந்த காற்றின் குறைந்த அழுத்தம் நம் உடலின் மூட்டுகளை சுற்றியுள்ள மென் திசுக்களை விரிவடைய செய்கிறது. இதனால் மூட்டுகளின் அசைவுகள் குறைக்கப்பட்டு நமக்கு வலி தோன்றுகிறது. மூட்டுக்கள் மட்டுமின்றி மூட்டு தசைகள் உள்ள பகுதி முழுவதுமே நமக்கு வலிக்கிறது.

    இந்த தசைகள் மற்றும் மூட்டுகள் குளிர் காற்றினால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன

    தசைகளில் மற்றும் மூட்டுகளில் இறுக்கம், குறிப்பாக காலையில் எழும்பொழுது, உடல் சோர்வு, உடல்களில் வீக்கமும் சிவப்புத் தன்மையும் ஏற்படுவது, நடப்பதில் சிரமம், அசைவுகளில் சிரமம், பசியின்மை, வேலை செய்ய பிடிக்காமல் சோம்பல் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

    குளிர்கால உடல்வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி

    குளிர்காலங்களில் நாம் சில விஷயங்களை விழிப்போடு கடைப்பிடிப்போமானால் இந்த மூட்டு தசை வலிகளில் இருந்து நம்மை பெரிதளவும் நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு என்னென்ன செய்யலாம் என்பது கீழ் வருமாறு

    * மிதமான உடற்பயிற்சியை தினமும் செய்வது

    * அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்ப்பது. உட்கார்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தால், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடங்கள் உடலுக்கு ஒரு அசைவை கொடுத்து விட்டு அமர வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்து விட்டு வந்து அமர வேண்டும்.

    * போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்

    * வலியுள்ள பகுதிகளை சற்றே உயர்த்தி வைத்திருப்பதும் வலியை குறைக்க உதவும்

    * மூட்டுக்கள் மற்றும் தசைகளை லேசாக மசாஜ் செய்வது. கடுகு எண்ணெய் பூண்டு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யும் பொழுது அந்த தசைகளுக்கு சூடும் கிடைக்கும் ரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படும்

    * கால் கை மூட்டுகளில் வீக்கம் இருக்குமானால் அந்த இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்

    * வீக்கம் இல்லாத நரம்பு வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் மிகுந்த பயனை கொடுக்கும்

    * தினசரி குளிக்கும் பொழுது இளம் சூடான நீரில் குளிப்பது நல்லது அதிக குளிர்ச்சியான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்'

    * மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் குறைவாக இருந்தாலும் அவ்வப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வருவது உடலில் சூட்டை சமன்படுத்த உதவும்.

    * வலி நிவாரணியாக மருந்து எடுத்துக் கொள்வது மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே இருக்க வேண்டும். மிதமான வலிகளுக்கு முடிந்தவரை வீட்டு உபயோகப் பொருட்களில் இருந்து மருந்துகளை தேர்ந்தெடுத்து எடுத்துக் கொள்ளலாம்.

    * மாற்று மருத்து வலி நிவாரண மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்

    * அக்குபஞ்சர், யோகாசனம் போன்றவையும் குளிர்கால வலிகளை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் உதவும்.

    • உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது.
    • தற்போது ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

    கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

    சில பன்னாட்டு நிறுவனங்களில்... உயர்தர உணவகங்களில்... தோசையை ஸ்பூனால் சாப்பிட முயன்று, தோசையோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கலாம். கையால் சாப்பிட இயல்பாக, எளிதாக முடிகிறபோது ஏன் ஸ்பூனோடு மல்லுக்கட்ட வேண்டும்?, இதோடு கையால் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்ப்போமா?

    நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்

    உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிராக இருக்கிறதா? என எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது. நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    ரசித்து... ருசிக்க!

    கைக்குப் பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அதுவுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம். ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒருவிதமான எந்திரத்தன்மை வந்துவிடுகிறது. இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதை விட அதிக திருப்தி கிடைக்கிறது.

    மன அழுத்தம்

    ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சில குறைபாடுகள் வரலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன.

    கெட்டவை விரட்டப்படும்

    நாம் சாப்பிடும்போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள், பழமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின் மூலம் நோயை குணப்படுத்தும் முறையை குறிக்கிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை.

    • சிலர் பழங்களை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர்.
    • சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை பழங்களுக்கு உண்டு.

    பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை இதற்கு உண்டு.

    பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், பிற கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது. சிலர் இதனை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர். இதனால் பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர்.

    இதனை மாற்றி கொண்டால் பழங்களில் இருந்து ஆரோக்கியமான முறையில் நன்மையினை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

    பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும். ஏனெனில் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கும்

    பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும். 

    பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

     பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிறவாறான பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறையும்.

    • ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.
    • ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையை சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.

    என்ஜினை சீராகப் பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மன அழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள், அவ்வப்போது சில நிமிடங்கள் காலாற நடை போடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் முறைப்படி பின்பற்றி வந்தால், உங்கள் இதயம் கடைசிவரை ஆரோக்கியமாகவே இயங்கும்.

    • புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது
    • தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.

    இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

    கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
    • இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது

    தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).

    உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.

    2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.

    • உடல் உறுப்புகளுக்கும், உணவு பொருட்களுக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கின்றன.
    • வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும்.

    உடல் உறுப்புகளுக்கும், சாப்பிடும் சில உணவு பொருட்களுக்கும் இடையே நெருக்கமான ஒற்றுமை இருக்கின்றன. அவை ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகின்றன. அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை பயக்கும். உடல் பாகங்களை ஒத்திருக்கும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.

    1. கண்-கேரட்

    வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர ரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது.

    2. இதயம்-தக்காளி

    இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்ட தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம்.

    3. அல்வியோலி-திராட்சை

    நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வியோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை ரத்த ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்கின்றன. திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதைகளில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும்.

    4. சிறுநீரகம்-கிட்னி பீன்ஸ்

    பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும்.

    5. கருப்பை-அவகொடா

    கருப்பையின் வடிவத்தை போலவே அவகொடா பழத்தின் உள் பகுதியும், விதையும் அமைந்திருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவகொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும்.

    6. மூளை-வால்நட்

    வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தவும் செய்யும்.

    7. கணையம்-சர்க்கரைவள்ளிக் கிழங்கு

    சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.

    8. வயிறு-இஞ்சி

    இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல்வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

    9. காது-காளான்

    காளானை இரண்டாக வெட்டினால் காதுகளை போலவே காட்சியளிக்கும். காளான்கள் செவிப்புலன் திறனை மேம்படுத்த உதவுகின்றன. அவற்றில் இருக்கும் வைட்டமின் டி, செவிப்புலன் இழப்பை தடுக்க உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    10. புற்றுநோய் செல்கள்-புரோக்கோலி

    புரோக்கோலியின் தலைப்பகுதி புற்றுநோய் செல்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 45 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்கவும் புரோக்கோலி சாப்பிடலாம்.

    • கை-கால் வலிகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.
    • உடலும், உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்.

    ''ஹிஜாமா என்ற 'கப்பிங் தெரபி' என்பது கண்ணாடி கப்பை வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை.

    பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், இது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்துதான், மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. ரொம்ப காலமாகவே புழக்கத்தில் இருக்கும் ஹிஜாமா சிகிச்சை, விளையாட்டு வீரர்கள் மூலமாகவே, உலகெங்கும் பரவ தொடங்கியது.

    ''நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம் மற்றும் கரும் பித்தம். இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இது உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது. இதை உடலில் இருந்து வெளியேற்றும்போது நன்மைகள் கிடைக்கும். கூடவே, உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அதை சுறுசுறுப்பாக்கவும் இந்த கப்பிங் தெரபி பயன்படுகிறது.

    பொதுவாக, நம் தேவைக்கு ஏற்ப கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப்பகுதி ஆகிய இடங்களில் இந்த 'கப்பிங் தெரபி' செய்யப்படும். இதிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது, உடலும், உறுப்புகளும் புத்துணர்ச்சி பெறும்'' என்றவர், இதன் மூலம் உண்டாகும் சுவடுகள், ஓரிரு நாட்களிலேயே காணாமல் போய்விடும் என்றார். இப்படி உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இயங்கும். விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் உடல் சோர்வு, கை-கால் வலிகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும் என்றார்.

    ''கப்பிங் தெரபியில் நிறைய வகைகள் இருக்கிறது. பேம்பூ கப்பிங், ஐஸ் கப்பிங், பயர் கப்பிங், ஆயில் கப்பிங், சிலிக்கான் கப்பிங், மேக்னட் கப்பிங், டிரை கப்பிங், வெட் கப்பிங்.... ஒவ்வொரு தேவைகளுக்கும், ஒவ்வொரு கப்பிங் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

    கை, கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம், வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், முதுகு வலி மற்றும் மூட்டு வலி, கீழ்வாதம், மாதவிடாய் பிரச்சினைகள், கால் நரம்பு வலி... இப்படி ஹிஜாமாவில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளது. அத்துடன் கப்பிங் தெரபி மூலம் 'பேசியல்' செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறினார்.

    முன்பெல்லாம், நம் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது இடுப்பு பிடித்துக்கொண்டால், சொம்பில் ஒரு காகிதத்தையோ அல்லது கற்பூரத்தையோ கொளுத்தி போட்டு அப்படியே வலி இருக்கும் இடத்தில் அப்பிவிடுவார்கள். அது காற்று அழுத்தம் காரணமாக அப்படியே ஒட்டிக்கொள்ளும். வலி சரியான பிறகு அல்லது வாயு பிடி அவிழ்ந்த பிறகுதான், அந்த சொம்பு கீழே விழும். இதைதான் 'பயர் தெரபி'யாக, இப்போது செய்கிறார்கள்.

    'கராத்தே கிட்' திரைப்படத்தில், ஜாக்கிசான் செய்வதும் அப்படிப்பட்ட 'பயர் தெரபி'தான். சீனாவில் இதை தலைச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள்.

    இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்திருக்கும், இந்த கப்பிங் தெரபிக்கு, சீனர்கள்தான் நவீன அப்டேட்டுகளை கொடுப்பவர்கள். அவர்கள், இந்த சிகிச்சை முறையினால் பலவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

    • இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகளை பார்க்கலாம்.
    • குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம்.

    சிலருக்கு அடிக்கடி தொண்டையில் கரகரப்பு காணப்படும். சிலருக்கு புண்கள் ஏற்படுவதும் உண்டு. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம். இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகள்:

    மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும்.

    காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.

    ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.

    கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

    திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

    சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம்.

    வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.

    • ‘மெட்ராஸ் ஐ’-க்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.
    • நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    'மெட்ராஸ் ஐ' என்பது அடினோ வைரஸ் அல்லது ஸ்டெரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது. கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணீர் வடிதல் அல்லது கண்பீளை வெளியாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இதற்கான சித்த மருத்துவம்:

    1) "படிக பன்னீர்" ஒரு துளி வீதம் கண்களில் விடலாம். கண் சிவப்பு, பீளை வெளியேறுவது விரைவில் நிற்கும்,

    2) சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து, சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதில் நனைத்து, அந்த துணியை வைத்து கண்ணை துடைக்கலாம், மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி, 3 நந்தியாவட்டை பூச்சாற்றை பிழிந்து கண்களில் விட்டு வர கண் எரிச்சல், கண் வலி நீங்கும்.

    மேலும், ஒவ்வொரு முறை கண்ணை துடைக்கும் போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    • தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள்.
    • தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள்.

    ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குளிர்காற்று வீசுவதாலும், உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து காணப்படும். ஆகவே சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றவை எளிதில் வருகிறது.

    இதற்கு பயன்தரும் சித்தமருந்துகள்:

    1) நிலவேம்பு குடிநீர் 60 மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் குணமாகும்.

    2) இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. வீதம் காலை-மாலை இருவேளை குடிக்க வேண்டும். இதனால் சளித்தொந்தரவு குணமாகும்.

    3) தாளிசாதி வடகம் மாத்திரைகள் இரண்டு எடுத்துக்கொண்டு காலை, மதியம், இரவு கடித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

    பொதுவாக குளிர்காலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள். பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடியுங்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நம் உடலை பாதுகாக்கின்றன.
    • கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்கு ஆற்றல் தருபவை.

    ஊட்டச்சத்து தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடியது. ஏனென்றால், வலுவான மனிதனால்தான் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து வீட்டுப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். இந்தியாவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமை மட்டுமே காரணமல்ல. எது சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது குறித்த அறியாமையும் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.

    கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்கு ஆற்றல் தருபவை. நம் அன்றாட உடலியக்கச் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை இவை தருகின்றன. தானியங்கள், கிழங்குகள், தண்டுகள், காய்கறிகள், உலர் பழங்கள், எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை ஆற்றல் தரும் உணவுகளில் சில. புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் உடலின் கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றன. பால், இறைச்சி, முட்டை, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது. இவை உடலைக் கட்டமைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஆற்றலும் தருகின்றன.

    புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை நம் உடலை பாதுகாத்து, உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கின்றன. உடல் வெப்பநிலையை சீராகப் பராமரித்தல், தசை சுருக்கம், உடலின் நீர் சமநிலையை கட்டுப்படுத்துதல், ரத்தம் உறைதல், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல், இதயத் துடிப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகள் இதில் அடங்கும். நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாது உப்புகளும் கிடைத்தால்தான், இந்த செயல்கள் தொய்வின்றி நடக்கும். காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, ஈரல், பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்திருக்கின்றன. எனவே, அவற்றைப் போதுமான அளவு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ×