என் மலர்
பொது மருத்துவம்

தொப்புள் அருகில் வீக்கம்... என்ன செய்யலாம்?
- பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது.
- சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டு.
தொப்புள் அருகில் வலியில்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' என்ற குடல் இறக்கம் நோயில் தான் பெரும்பாலும் காணப்படும். தொப்புள் பகுதியில் உள்ள வயிற்று தசை சுவரின் வலு குறைவதால் தொப்புள் வழியாக குடல் இறங்கிவிடும்.
வயிற்றுக்குள் ஏற்படும் வாயுவின் அழுத்தம், உடல் பருமன், வயிற்று தசைகளில் அதிகமான கொழுப்பு படிவது, நாள்பட்ட இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது, அதிக பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற காரணங்களால் குடலுக்கு முன் உள்ள தசை வலுவிழந்து விடுவதால் குடல் இறக்கம் ஏற்படுகிறது.
இதற்கான சித்தமருத்துவம்:
1) மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதாக மலம் கழிய சித்த மருத்துவத்தில் மூலக் குடார நெய் - இரவு 5 முதல் 10 மி.லி. எடுக்க வேண்டும்.
2) வயிற்றில் உள்ள வாயுவின் அழுத்தத்தை குறைக்க குன்ம குடோரி மெழுகு 250 முதல் 500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்,
3) வாயுவைப் பெருக்கும் உணவு வகைகளான கிழங்குகள், மொச்சை இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். நாட்பட்ட இருமல் இருந்தால் உடனே அதற்குரிய மருத்துவம் செய்ய வேண்டும். வீக்கம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தால் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499






