என் மலர்
பொது மருத்துவம்
- சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ்.
- நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாற்று தகவல்களையும், சத்துப்பட்டியலையும் தெரிந்து கொள்வோமா...?
நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாற்று தகவல்களையும், சத்துப்பட்டியலையும் தெரிந்து கொள்வோமா...?
* மாங்காய்
மாங்காயின் தாயகம் இந்தியா, வங்காளம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளே. மாங்காய்களில் 35 வகைகள் உள்ளன. இதில் சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
* முட்டைக்கோஸ்
சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். இந்தியாவில் முட்டைக்கோஸ் மஞ்சள் மற்றும் ஊதா நிறம் என இரு வகைகளில் கிடைக்கின்றன. ஆனால், முட்டைக்கோஸ்களில் 150 வகைகள் உள்ளன. ஐரோப்பா கண்டம்தான் முட்டைக்கோஸின் தாயகம். ஆரம்பக்காலத்தில் இதை ஒரு காய்கறியாகவே யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் தான் இது சமையலறையை அலங்கரிக்க ஆரம்பித்தது. முட்டைக்கோஸில் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன.
* கத்தரிக்காய்
இந்திய சமையலறைகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். இது 'சொலாளனேசியா' என்ற குடும்பத்தைச் சேர்ந்த செடி வகை. தென்னிந்தியாவும், இலங்கையுமே கத்தரிக்காயின் தாயகம். ஆங்கிலேயரும் ஐரோப்பியர்களும் இதனை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். கத்தரிக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், விட்டமின் பி, கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் என நிறைய சத்துகள் உள்ளன.
* உருளைக்கிழங்கு
'சொலனம் டியூபரோசம்' எனும் செடியில் இருந்து கிடைக்கும் கிழங்குதான் உருளை. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்குப் பிறகு உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் செடி இது. பெரு நாடுதான் உருளைக்கிழங்கின் தாயகம். அங்கிருந்து 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இச்செடி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆசியாவுக்கும் வந்தது. உலகில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் வகிக்கின்றன. இதில் புரதம், நீர், நியாசின், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் என நிறைய சத்துகள் உள்ளன.
* கேரட்
சிவப்பு அல்லது மஞ்சள் முள்ளங்கி எனப்படும் கேரட் ஒரு வேர்க்காய் ஆகும். 'அப்பியாசெயீ' என்ற குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். முதன்முதலில் அங்குதான் பயிரிடப்பட்டது. பின்னர் மத்திய தரைக்கடல் நாடுகளில் இது பயிரானது. இதில் 'பீட்டா கரோட்டீன்' என்ற சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு உயிர்ச்சத்தாக பயன்படுகிறது. இதைத்தவிர கால்சியம், பொட்டாசியம் சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.
- போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்.
- தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள்.
நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த இந்த ஆண்டின் முதலாவது எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அனல்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதன்படி...
என்ன செய்ய வேண்டும்?
* அதிக புரதச்சத்து உணவுகளை உண்பதையும், உச்சி வேளையில் சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் நேரடியாக படும்வகையில் வெளியில் நடமாட வேண்டாம்.
* போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள்.
* வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சைச் சாறு பானம், மோர், லஸ்சி, சிறிது உப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை பருகலாம். நல்ல காற்று வசதியுள்ள, குளுமையான இடங்களில் இருக்கலாம்.
* நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ளலாம். வெளிர் வண்ண, மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடை, தொப்பி அல்லது தலைப்பாகையால் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள். வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.
* உள்ளூர் வானிலை தொடர்பான செய்திகளை வானொலி, செய்தித்தாள், டி.வி. மூலம் அறிந்துகொள்ளுங்கள். இந்திய வானிலைத் துறையின் இணையதளத்தையும் பார்க்கலாம்.
* அதிக வெயிலால் ஏற்படும் தலை கிறுகிறுப்பு, மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, அதீத தாகம், அடர்மஞ்சள் நிறத்தில் குறைவாக சிறுநீர் கழிப்பது, வேகமாக மூச்சு வாங்குதல், அதிவேக இதயத்துடிப்பு குறித்து கவனமாக இருங்கள்.
* யாராவது ஒருவர் அதிக உடல் வெப்பநிலை, மயக்கம், குழப்பநிலையில் காணப்பட்டால், வியர்ப்பது நின்றுவிட்டால் உடனடியாக 108, 102 எண்களை உதவிக்கு அழையுங்கள்.
* அனல்காற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைக்குழந்தைகள், இளஞ்சிறார்கள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணிபுரிவோர், மாற்றுத்திறனாளிகள், மனநல பாதிப்பு உடையோர், அதிக ரத்த அழுத்தம், இதயநோய் பிரச்சினை உள்ளவர்கள், குளிர்ந்த பகுதிகளில் இருந்து வெப்பமான பகுதிகளுக்கு வருபவர்கள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
* நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்லாதீர்கள். அப்போது அந்த வாகனங்களுக்குள், அதிகமான வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
* நேரடியாக வெயில், வெப்ப அலை தாக்குதலை தவிருங்கள். பகல் வேளையில் ஜன்னல்கள், திரைச்சீலைகளை மூடிவையுங்கள். குறிப்பாக, உங்கள் வீட்டில் வெயில் தாக்கும் பகுதியில் இரவில், குளிர்ந்த காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்களை கொஞ்சம் திறந்துவைக்கலாம்.
* வெளியில் செல்லவேண்டியிருந்தால், வெயில் தாக்கம் அதிகமில்லாத காலை அல்லது மாலை வேளையில் செல்லுங்கள். உச்சி வேளையில் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.
- சிலருக்கு முகத்திலும் பலவீனம் தெரியும்.
- தூக்கம் சரியாக வராது.
தலைச்சுற்றலை கிறக்கம், சுற்றுதல், சுழலுதல் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.
சிலருக்கு திடீர் அசைவுகள் மூலம் தலைச்சுற்றல் ஏற்படலாம். உள்காது நரம்பியல் பிரச்சினைகளாலும், வலிப்பு நோயாலும், அதிகமாக மது குடிப்பதாலும் இது வரலாம். கடுமையான ஜலதோஷத்தில் இருந்து விடுபட்டவருக்கு, இந்தத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்பு உண்டு.
உட்கொள்ளப்படும் சில மருந்துகள், தலையில் அடிபடுதல், பயணம் போன்றவையும் இதற்கு காரணமாகின்றன. தள்ளாட்டம், வாந்தி எடுக்கும் உணர்வு, செவித்திறன் குறைவு, காதில் அடைப்பு, வலி போன்றவையும் காணப்படலாம். சிலருக்கு முகத்திலும் பலவீனம் தெரியும். நிற்க இயலாமை, கீழே விழுதல், நடப்பதில் தள்ளாட்டம் போன்றவை முக்கிய அறிகுறிகள். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தையும் இது பாதிக்கும்.
பார்வை மங்குதல், பேச்சில் தடுமாற்றம், காது கேளாமை போன்றவையும் வரலாம். சிலருக்குச் சில விநாடிகள், சில நிமிடங்களே இந்தப் பிரச்சினைகள் காணப்படும். உள்காது பிரச்சினை உள்ளவர்கள் பயணம் செய்தால் தலைச்சுற்றல், வாந்தி வந்துவிடும். செவித்திறன் பரிசோதனைகள், பேச்சாற்றலைக் கண்டுபிடித்தல் போன்ற பரிசோதனைகள் எல்லாம் இதற்கு வந்துள்ளன. சிலருக்குத் தலைச்சுற்றும்போது, கால்சியம் கார்பனேட்டின் அழுக்குகள் உடைந்து காதில் படிகிறது.
பித்த ஆதிக்கத்தினால் உண்டாகும் தலைச்சுற்றலால், வாயில் புளிப்பு அல்லது கசப்பு, புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம் ஏற்படலாம். கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சல் இருக்கும். தூக்கம் சரியாக வராது. இந்த வகை தலைச்சுற்றலுக்கு, மிளகு அல்லது வெந்தயத்தைப் பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இஞ்சியைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, சட்டியில் இட்டு வதக்க வேண்டு்ம்.
நன்கு வதங்கியபின், அதனுடன் கொஞ்சம் தேனைச் சேர்த்து மேலும் வதக்கி, கொஞ்சம் நீரையும் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2-லிருந்து 3 வேளை குடித்துவந்தால் தலைச்சுற்றல் குறையும். அஜீரணத்தால் வரும் தலைச்சுற்றலுக்கு சுக்கு, மல்லி விதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.
- நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும்.
- சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன.
பொதுவாக மக்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டு வட வலி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரண வலி என்று விட்டு விடக்கூடாது. இவைகள் தண்டு வட நரம்புகள் பாதிப்படைய (Radiculopathy generation) காரணமாகி விடும்.
நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். முதலில் பத்தியத்துடன் மருந்துகள் கொடுத்து வீக்கம், வலி குறைந்து இளக்கம் கண்டபின் எளிய பயிற்சிகள் கொடுப்பதோடு தண்டு வட புற சிகிச்சை முறைகள், தண்டு வடம் சீராகவும், ஜவ்வுகளின் அழுத்தங்களை குறைத்து வலுப்பெற செய்கிறது.
மேலும் எலும்பு மூட்டுக்கள் உறுதி பெற மூட்டுக்களில் எண்ணெய் பசை சீராவதற்கான ரசாயனங்கள், லேகியங்கள், பஸ்பங்கள் முதலிய சக்தி வாய்ந்த மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாமல் புற மருத்துவ சிகிச்சைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று தான் 'மசாஜ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புற சிகிச்சை முறை. இதற்கு சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்று பெயர்.
தொக்கண முறைகள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசையில் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தரும். உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை சீராக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு வலிமை தரும். நெடுந்தூரம் தினமும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ்களில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் தொக்கணம் செய்தால் உடல் சோர்வு மாறும்.
இவ்வாறு நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தொக்கணம் எனப்படும் புற சிகிச்சை மிகவும் அவசியம்.
குமரி மண்ணில் 7-வது தலைமுறையில் சித்த மருத்துவ சேவையாற்றி வருகிறோம் என டாக்டர்கள் குணசிங்க வேதநாயகம், பிரசாந்த் சிங் தெரிவித்தனர்.
ஆனக்குழி ஆசான், டாக்டர் குணம் மருத்துவமனை, ஆனக்குழி, பாலப்பள்ளம் அஞ்சல்-629159. தொடர்புக்கு: 04651 226354. 227827 செல் எண்: 91 97867 77828.
- இது ஒரு ரத்த குழாய் சம்பந்தமான நோய்.
- ரத்த ஓட்டத்தை தடைபடுத்துகிறது.
'வொரிகோஸ் வெயின்' என்பது ரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட பரம்பரை, வயது, உடல்பருமன் ஆகியவை காரணமாக அமைகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் ரத்த குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப்போய் காணப்படும்.
இது ஒரு ரத்த குழாய் சம்பந்தமான நோய். நமது முழங்காலுக்கு பின்புறம் உள்ள ரத்த குழாய்கள் மூலம் ஒருவித வலிகளை உணடாக்குகின்றன. இவை ரத்த ஓட்டத்தை தடைபடுத்துகிறது. இந்த ரத்த குழாய் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் கால்களை நீட்டி மடக்கும் போது கால்கள் வீங்கி வலி உண்டாகிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நரம்புகள் முழங்காலுக்கு பின்புறத்தில் உருவாகின்றன.
தசையின் அடர்த்தியை ஒருவர் இழக்கும் போது தசை இடைவெளிகள் உருவாகி ரத்த குழாய் புடைப்பும், சுருளும் ஏற்பட்டு நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இதனால் நரம்பு வீங்கி வலியை ஏற்படுத்தி ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் மேல் நோக்கி தள்ளப்படும். ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தநோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
நாள் முழுவதும் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ வேலை பார்ப்பவர்களுக்கு இந்தநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்கள், உடல் பருமனால் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மயக்க மருந்து கொடுத்து புடைத்த ரத்தக் குழாயை நீக்குகின்றனர். இந்தநோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த சிரைகளை லேசர் கதிர் கொண்டு சூடேற்றியோ அல்லது மருத்துவ பசை மூலமாகவோ அடைத்து விடுகின்றனர்.
மேற்கண்ட தகவலை படந்தாலுமூடு ரவி மெம்மோரியல் மருத்துவமனை டாக்டர் ஆர்.ஆர். அருண்பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
- வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது.
- குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது.
அரட்டை கச்சேரி நடக்கிற அறையில்கூட தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்து குறட்டை விடும்வரைதான். பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்த காட்சியை பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு பேன் இருக்கும் இடமாக படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும்போது பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள்.
ஒருவரது குறட்டை குளவியின் ஓசையை போல என்றால், இருவர் சேர்ந்து விட்டால் இரட்டை நாயனம். அதற்கும் மேல் என்பது மழைக்காலத்துக் குட்டையில் கூடியிருக்கும் தவளைகளின் கோஷ்டி கானம் போல ஆகிவிடும். ஆயுள் தண்டனையை விடக் கொடியது குறட்டையாளர்களின் கூட்டு.
தேவைக்கு மேல் உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச்சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும் உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியை தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. தங்களுக்குத் தூக்கக் குறைவு ஏற்படுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களாலேயே உணரவும் முடியாது. அடுத்த நாள் வேலைக்கு செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணை செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம்.
- மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து.
- தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.
கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.
தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.
மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும்.
பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும்.
பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.
- காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.
மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.
மாரடைப்பை கண்டறிய
இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி
ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.
பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?
இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.
இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?
இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?
மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.
மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.
Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292
- குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது.
- நம்முடைய உடல் பலத்திற்கு மேலாக ஒருபோதும் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.
உடற்பயிற்சி செய்வது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதுடன், ஆயுளையும் அதிகப்படுத்தும் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நடை பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, ஜிம்மில் உடற்பயிற்சி என எந்த வடிவத்திலாவது தினந்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது.
உடல் உழைப்பு குறைந்து வரும் இந்த காலத்தில் தினமும் காலையில் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வது மிகச் சிறந்தது. ஆனால் நம்முடைய உடல் பலத்திற்கு மேலாக ஒருபோதும் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. உடற்பயிற்சியின் போது பெருமூச்சு, உடல் சோர்வு இவை தோன்றினால் உடற்பயிற்சியை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும்.
நடைப்பயிற்சியின் போது அல்லது நடைப்பயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் நடைப்பயிற்சியினால் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக முளைகட்டிய பாசிப்பயறு, வேக வைத்த கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.
உடற்பயிற்சிக்கு பின் நமக்கு நீர்ச்சத்து குறைந்தாலும்கூட, பசிப்பதுபோல் தோன்றும். அதனால், உடற்பயிற்சிக்கு முன்னும், உடற்பயிற்சி செய்யும்போதும், உடற்பயிற்சிக்கு பின்னும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகம் பசி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
- நமது பாரம்பரிய மருத்துவம் பித்தத்தை 5 வகையாக பிரிக்கிறது.
உடலுக்கு பித்தம் பல நன்மைகளை செய்கிறது. நமது பாரம்பரிய மருத்துவம் பித்தத்தை 5 வகையாக பிரிக்கிறது.
முதல் வகை, இரைப்பை, ஜீரணப்பை இவற்றின் நடுவில் இருக்கும். இந்த பித்தத்தை பாசகம் என்கிறார்கள். இது உணவை செரிக்க உதவுகிறது. அதனால் இதற்கு `அக்னி' என்ற பெயரும் உண்டு. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற கழிவையும் பிரிக்கிறது. சத்துக்களை அனுப்பி மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன் இடத்திலிருந்தே ஊட்டமளிக்கிறது.
இரண்டாம் வகை ரஞ்சக பித்தம் எனப்படுகிறது. இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு, உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.
மூன்றாம் வகை சாதக பித்தம், இது இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு இயங்குகிறது.
நான்காம் வகை ஆலோசக பித்தம், இது கண்களில் தங்கி பார்க்கும் சக்தியை அளிக்கிறது.
ஐந்தாவது வகை புராஜக பித்தம், சருமத்தை உறைவிடமாகக் கொண்டு பொலிவை கொடுக்கிறது.
காரம், புளிப்பு, உவர்ப்பு, அசைவ உணவுகளில் மீன், கோழி, நண்டு, எண்ணெயில் பொரித்த உணவுகள், நூடுல்ஸ், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்கு காரணமாகிவிடும். இதன் காரணமாக சுமார் 40 வகையான பித்த நோய்கள் வரலாம்.. பித்தத்தை கட்டுப்படுத்த இஞ்சித்துண்டுகளை, தேனில் ஊறவைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
- சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
- அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.
பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.
ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.
குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.
அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.
- இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது.
- எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு சித்த மருத்துவராக டாக்டர் பிரியங்கா பணிபுரிகிறார். அவர் சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து கூறியதாவது:-
சர்க்கரை நோய் என்பது ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறே அன்றி தனி நோய் அல்ல. சித்த மருத்துவத்தில் இதனை மதுமேகம் அல்லது நீரிழிவு என்று கூறுவர். பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு அதில் உள்ள சர்க்கரை சத்து கிளைகோலைசிஸ் (சர்க்கரை சிதைவு) என்னும் முறைப்படி குளுக்கோஸ் ஆக உடைகிறது. கணையம், வெளிப்பட்டுள்ள குளுக்கோஸ் அளவை பொறுத்து தானாகவே இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதுவே ரத்தத்தில் உள்ள குளுக்கோசை எலும்பு, தசை முதலியவை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.
நீரிழிவுக்கான காரணம்
கணையத்திலிருந்து இன்சுலின் தேவைக்கும் குறைவாக சுரப்பது அல்லது முற்றிலும் உற்பத்தியாகாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள உயிரணு அதனை ஏற்காமல் மறுத்தல் என்ற காரணங்களால் நீரிழிவு நோய் உருவாகிறது.
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது. நோய்க்கான மருந்தும், மருந்தின் பக்க விளைவுகளை தவிர்க்க ஒரு மருந்து என மருந்துகளின் பட்டியல் நீள்கிறது. சரியான உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் இன்சுலின் சுரப்பை வைத்து இதனை டைப்-1 மற்றும் டைப்-2 என இருவகைப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயை இளம் நீரிழிவு என வகுத்துள்ளனர். இன்சுலின் முற்றிலும் சுரக்கப்படாத நிலையிலேயே நவீன மருத்துவத்தின் ஆலோசனை தேவைப்படுகிறது.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், இரவில் அதிக நாவறட்சி, அதிகப்பசி, நன்றாக உண்டாலும் உடல் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே வருதல். தோல் வறண்டு சுருங்கி காணப்படல், எப்போதும் களைப்பாக இருத்தல், எளிதில் ஆறாத புண், கால் மரத்து போதல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நாம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கணையத்திற்கு ஆற்றலைத் தரும் யோகாசனங்களை தகுந்த வழிகாட்டுதலின்படி செய்யலாம். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இருதயம் மற்றும் ரத்தநாளங்கள் பாதிப்படையும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் கூடுகிறது.
காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றப்படும்.
சேர்க்க வேண்டிய உணவுகள்
துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மை அதிகம் உள்ள காய்கனிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கொத்தவரங்காய், முருங்கை பிஞ்சு, இளநீர் முதலியவற்றை சேர்க்க வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் க்ளுக்கோசைட் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள தாவர ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கருப்பு கவுனி, கருங்குருவை, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை சமைத்து உண்ணலாம். கோதுமை, சம்பா கோதுமை, கேழ்வரகு இவைகளால் செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம். சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் இனிப்புத் தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தே. பனைவெல்லம், தேன் முதலியவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி தக்க அளவு அன்றாடம் உண்ணலாம்.
தவிர்க்க வேண்டியவை
மைதா, உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள காரணங்களால் ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகிறது. மைதாவில் உள்ள பிளீச்சிங் ஏஜென்ட் நச்சுத்தன்மை உள்ளது. கிட்டத்தட்ட 97 சதவீதம் நார்ச்சத்து கோதுமைகளில் இருந்து இழக்கப்பட்ட நிலையில் மைதா தயாரிக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்ந்த உணவுகளையும், முதிர்ந்த பழங்களையும், அதிக மாவு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கால்கள், பாதங்களை பராமரிக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை முதலியவற்றை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
எளிய மூலிகை மருத்துவம்
வெந்தயம், பாகற்காய், நெல்லிக்காய், ஆவாரம் பூ, சீந்தில், சர்க்கரை கொல்லி வில்வம், மஞ்சள், பூண்டு, வேப்பிலை சாறு, துளசி, சோயாபீன்ஸ், வெங்காயம், பசலைக்கீரை, வெள்ளரி, இலந்தைபழம், முளைத்தானியங்கள் முதலியவை நல்ல பலன் அளிக்கும்.
நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் மூலமும், சித்த மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது மூலமும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






