search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாறும், சத்துப்பட்டியலும்..
    X

    நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாறும், சத்துப்பட்டியலும்..

    • சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ்.
    • நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாற்று தகவல்களையும், சத்துப்பட்டியலையும் தெரிந்து கொள்வோமா...?

    நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளின் வரலாற்று தகவல்களையும், சத்துப்பட்டியலையும் தெரிந்து கொள்வோமா...?

    * மாங்காய்

    மாங்காயின் தாயகம் இந்தியா, வங்காளம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளே. மாங்காய்களில் 35 வகைகள் உள்ளன. இதில் சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

    * முட்டைக்கோஸ்

    சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று முட்டைக்கோஸ். இந்தியாவில் முட்டைக்கோஸ் மஞ்சள் மற்றும் ஊதா நிறம் என இரு வகைகளில் கிடைக்கின்றன. ஆனால், முட்டைக்கோஸ்களில் 150 வகைகள் உள்ளன. ஐரோப்பா கண்டம்தான் முட்டைக்கோஸின் தாயகம். ஆரம்பக்காலத்தில் இதை ஒரு காய்கறியாகவே யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் தான் இது சமையலறையை அலங்கரிக்க ஆரம்பித்தது. முட்டைக்கோஸில் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் அதிகம் உள்ளன.

    * கத்தரிக்காய்

    இந்திய சமையலறைகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். இது 'சொலாளனேசியா' என்ற குடும்பத்தைச் சேர்ந்த செடி வகை. தென்னிந்தியாவும், இலங்கையுமே கத்தரிக்காயின் தாயகம். ஆங்கிலேயரும் ஐரோப்பியர்களும் இதனை அறிந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். கத்தரிக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், விட்டமின் பி, கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் என நிறைய சத்துகள் உள்ளன.

    * உருளைக்கிழங்கு

    'சொலனம் டியூபரோசம்' எனும் செடியில் இருந்து கிடைக்கும் கிழங்குதான் உருளை. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்குப் பிறகு உலகில் அதிகம் பயிர் செய்யப்படும் செடி இது. பெரு நாடுதான் உருளைக்கிழங்கின் தாயகம். அங்கிருந்து 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இச்செடி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஆசியாவுக்கும் வந்தது. உலகில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தை சீனாவும், இரண்டாமிடத்தை இந்தியாவும் வகிக்கின்றன. இதில் புரதம், நீர், நியாசின், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் என நிறைய சத்துகள் உள்ளன.

    * கேரட்

    சிவப்பு அல்லது மஞ்சள் முள்ளங்கி எனப்படும் கேரட் ஒரு வேர்க்காய் ஆகும். 'அப்பியாசெயீ' என்ற குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். முதன்முதலில் அங்குதான் பயிரிடப்பட்டது. பின்னர் மத்திய தரைக்கடல் நாடுகளில் இது பயிரானது. இதில் 'பீட்டா கரோட்டீன்' என்ற சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு உயிர்ச்சத்தாக பயன்படுகிறது. இதைத்தவிர கால்சியம், பொட்டாசியம் சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.

    Next Story
    ×