என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும்.
    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவைகளுக்கு மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். அது குழந்தைகளின் தசைகள் மற்றும் மனதை இலகுவாக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடல் பக்குவப்படுவதற்கும் வழிவகை செய்யும். குழந்தைகளிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கவும் வேண்டும்.

    நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.

    ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.

    தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்.
    நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர். உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.
    நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர்; அது விளையாடும் இடத்திலோ, 1 பள்ளியிலோ அல்லது வீட்டில் கூட இருக்கலாம். உங்களது குழந்தைகள் போகும் அனைத்து இடத்தையும் நீங்கள் கிருமிநீக்கம் செய்ய முடியாது, ஆதேபோல் உங்களது குழந்தைகள் வெளியே போய் விளையாடுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், பெற்றோராக, நீங்கள் தொற்றுகள் மற்றும் ஒருசில நோய்களின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்? குழந்தைகள் இயற்கையாகவே பலமுள்ள நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வது ஒரு முறையாகும். அதனால், உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.

    மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.

    நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.

    நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.

    குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.
    செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    புத்தகங்கள், பென்சில்களை கையாள்வதைவிட செல்போன்களை உபயோகப்படுத்துவதற்கே பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். செல்போன்களை நீண்ட நேரம் கைகளிலேயே வைத்திருப்பது கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பிற்காலத்தில் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கைகளை பயன்படுத்துவதற்கு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

    ஒருசில அறிகுறிகளை கொண்டே அவர்களின் கைகள் பலவீனமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாகவே எழுதுவது, ஓவியம் வரைவது, அதில் வண்ணங்கள் தீட்டுவது போன்ற செயல்களை சிறுவர்கள் ஈடுபாட்டோடு செய்வார்கள். அவர்களது கைகள் பலவீனமாக இருந்தால் பென்சில்களை சீராக கையாள்வதற்கு சிரமப்படுவார்கள். நோட்டில் எழுதும்போது அவர்களது கையெழுத்தை வைத்தே கைகளின் வலிமையை கண்டறிந்துவிடலாம். கைவிரல்கள் வலியாகவோ, பலவீனமாகவோ இருந்தால் அவர்கள் எழுதும் எழுத்துக்கள் அழுத்தமாக இருக்காது. மெல்லிய கோடுகளை போல தென்படும்.

    அவர்கள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டும் கைகளின் செயல்திறனை அளவிட்டு விடலாம். சாப்பிடும் டிபன் பாக்ஸ்களை திறப்பதற்கு சிரமப்படுவார்கள். தண்ணீர் பாட்டிலை திறக்கவும் கைவிரல்கள் சிரமப்படும்.

    சாப்பிடும்போது உணவுகளை சிந்திக்கொண்டிருப்பார்கள். ஷூக்கள் அணியும்போது கால்களை அதற்குள் நுழைப்பதற்கு சிரமப்படுவார்கள். ஷூக்களை கைவிரல்களை கொண்டு கட்டுவதற்கும் தடுமாறுவார்கள். அதுபோல் சட்டையில் பட்டன்களை மாட்டுவதற்கும் திணறுவார்கள். விளையாட்டு பொருட்களை பயன்படுத்தி விளையாடும் ஆர்வம் குறைந்து போய்விடும். சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கும் தடுமாறுவார்கள்.
    பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.
    பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அப்படி பொய் சொல்கிறார்கள் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால், இந்த தீய பழக்கத்தை சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் வளர்க்க மற்ற விஷயங்களில் தேவைப்படும் பொறுமை இதற்கும் தேவைப்படும். உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும்.

    ஆனால் இது ஒன்றே இதனை தீர்ப்பதற்கான வழியல்ல. சில தாய்மார்களுக்கு சரியாக இருக்கும் இந்த முறை சிலருக்கு சரியாக அமைவதில்லை. குழந்தைகள் சந்திக்கும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் பல பல. அதனால் இதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை. அதனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். பொய் சொல்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, இதோ உங்களுக்காக சில வழிகள். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.

    கண் தொடர்பு

    உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். இது அவர்கள் பொய் பேச தொடங்கும் ஆரம்ப நிலையாகும். ஆனால் அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதன் பின் எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள். ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டு பிடித்து விட்டால் இதனை தவிர்த்து விடலாம். பொய் சொல்வது தவறு என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அதே போல் அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    சொன்னதையே சொல்லுதல் மற்றும் முகத்தை தொடுதல்

    உடல் மொழியை வைத்தும் கூட பொய் சொல்லுபவர்களை கண்டு கொள்ளலாம். சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அரித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் ஆகியவைகளும் கூட அவர்கள் பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

    முரண்பாடுகள்

    அவர்கள் கூறும் கதைகளில் முரண்பாடுகள் இருந்து, சொன்னதையே திரும்பி திரும்பி சொல்வதை போன்ற உணர்வை நீங்கள் அடைந்தால், கண்டிப்பாக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உண்மையை ஒத்துக் கொள்ள உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் திடமாக இருந்து, இந்த தீய பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க முயற்சிக்க வேண்டும்.

    தற்காப்பு எதிர்வினைகள்

    குழந்தைகள் பொய் சொல்லும் போது அதனை நீங்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் அறிந்தால், இதனை நீங்கள் சாதாரணமாக கவனிக்கலாம். பெற்றோர்கள் எது செய்தாலும் தவறு என எதற்கெடுத்தாலும் சண்டை போடும் விடலை வயதுடையவர்களிடம் இதனை பொதுவாக காணலாம். அன்பும் பாசமும் எப்போதுமே அவர்களை நம் வசமாக்கி விடும். காலப்போக்கில் அவர்களிடம் மாற்றத்தையும் காணலாம்.

    பதற்றம் மற்றும் குழப்பம்

    பொய் சொல்லும் போது குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு குணமிது. ஏதாவது கதை கூறும் போது அவர்கள் பதற்றத்துடன் அல்லது நெளிந்து கொண்டே கூறினால், உங்களிடம் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அதே போல் உங்கள் குழந்தை அதிகமாக பேசாமல் கமுக்கமாக இருந்தாலும் ஏதோ பொய் சொல்வதற்கான அறிகுறியே.
    நாட்டு நலனில் மாணவர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய மாணவர்களே நாளைய பாரதத்தின் தூண்களாவார்கள். எனவே மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று ஊற்றெடுக்க வேண்டும்.
    நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை’ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.

    இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    சுதந்திர காற்று

    இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அந்நியர் ஆட்சியை எதிர்த்து உப்புச் சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அந்நிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.

    தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலைப் போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

    உறுதிமொழி ஏற்போம்

    மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?

    கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளிப் பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.

    “இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்” என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அந்நிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப் படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!

    போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.
    போதைப் பொருட்களின் பழக்கம் பலவிதங்களில் படர்ந்து கொண்டிருப்பது, திகிலூட்டும் உண்மை. இதன் வீரியத்தை உணர்த்தும் விதமாக அண்மைக் காலத்தில் ஒருபுறம் போதைப் பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்கள் பெருமளவு போலீசில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் ஏராளமான போதைப் பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த போதை ஆபத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற நீங்கள் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதை மறந்துவிடக்கூடாது.

    பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்துதான் போதை முதலில் அறிமுகமாகிறது. வீட்டில் தந்தை மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருக்கும்போது தானும் அதை சுவைக்கிறார்கள். அடுத்து, நண்பர்களாக பழகுகிறவர்கள் இதில் வழிநடத்திச் செல்கிறார்கள். வளரிளம் பருவத்தில் பெற்றோர் சொல்லைவிட நண்பர்கள் சொல்லுக்கு அதிக மதிப்பளிக்கத் தொடங்குவார்கள். அப்போது திரில்லுக்காக, ஜாலிக்காக, அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்வதற்காக, தானும் ஹீரோதான் என்று காட்டிக்கொள்வதற்காக...! இப்படிப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு அத்தகைய ‘நண்பர்களோடு’ சேருகிறார்கள்.

    (முன்பெல்லாம், ‘அப்பா அம்மாவிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை’, ‘என்னை எல்லோரும் அலட்சியப் படுத்துகிறார்கள்’, ‘காதல் தோல்வி என்னை பாதித்து விட்டது’ என்றெல்லாம் போதையில் விழுந்ததற்கு காரணம் சொன்னார்கள். இப்போது அப்படிப்பட்ட காரணங் களை பெரும் பாலானவர்கள் சொல்வ தில்லை. முன்பு ‘தெரியாமல் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்’ என்று சொன்னவர்கள் அதிகம். இப்போது ‘தெரிந்தேதான் அதை பயன்படுத்தினேன்’ என்று சொல்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்)

    கஞ்சா புகைத்தலுக்கு உள்ளாகி மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் கவுன்சலிங்குக்கு ஒத்துழைத்தபோதும், ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அது வித்தியாசமான கோரிக்கை. ‘நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து புகைக்கிறோம். அவர்களையும் திருத்துங்கள். அப்போதுதான் என்னாலும் திருந்தமுடியும்’ என்றான். இந்த அளவுக்கு போதை நண்பர்களின் நட்பு இறுக்கமானதாக இருக்கிறது. இதில் இருக்கும் இன்னொரு ரகசிய உண்மையையும் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.

    ஸ்டிமுலன்ட் டிரக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப் பொருள், அதை பயன்படுத்துகிறவரை சில நாட்கள் தூங்கவிடாது. இரவும் பகலும் அவர்கள் உற்சாகத்தில் மிதப்பதுபோல் ஒருவித தூண்டுதல் மாயையை தோற்றுவிக்கும். மீண்டும் அவர்கள் தூங்கவேண்டும் என்றால் அதற்கு டிப்ரசன்ட் டிரக்ஸ் வகை போதைப் பொருளை அவர்கள் தேடும் நிலை உருவாகிவிடும். ஆஸ்டலில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளில் ஒருசிலர் முதலில் இருந்தே பரீட்சைக்கு முறையாக தயாராகாமல், பரீட்சை நெருங்கும் நேரத்தில் பயந்துபோய் தூங்காமல் விழித்திருந்து படிக்க முடிவுசெய்வார்கள்.

    அப்படிப்பட்ட தருணத்திற்காக காத்திருக்கும் பிரச்சினைக்குரிய நண்பர்கள், அவர்களை மிக எளிதாக தன்வசப்படுத்தி ஸ்டிமுலன்ட் டிரக்ஸை அறிமுகம் செய்வார்கள். அதை உபயோகிக்கும் அவர்களுக்கு, ஒருசில நாட்கள் கழித்து, தூக்கத்திற்காக டிப்ரசன்ட் டிரக்ஸை கொடுப்பார்கள். இப்படியே அவர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். ஆஸ்டல் மாணவ- மாணவிகள் இப்படிப்பட்டவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டும்.

    இ்ந்த விஷயத்தில் பெற்றோர்களின் கடமை என்ன?

    - உங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்றாலும்- கல்்லூரிக்கு சென்றாலும், ஆஸ்டலில் தங்கிப்படித்தாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணியுங்கள். அவர்களிடம் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்களையும் கவனியுங்கள். ‘என் பிள்ளை அப்படி எல்லாம் செய்யமாட்டான்!’ என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் முதல் வேலையாக அந்த எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். யாரும், எந்த நேரத்திலும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகலாம் என்ற நிஜத்தை ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

    - பிள்ளைகளின் உடையையும், உடலையும் எல்லா நேரங்களிலும் கவனித்துப்பாருங்கள். உடையில் புகைப்பிடித்தலின்போது தீப்பட்ட சிறிய துவாரங்கள் தென்படலாம். உடலில் போதை ஊசிகளை குத்திக்கொண்ட அடையாளம் இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

    - அவர்களது தூக்கத்திலும், உணவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். சிலர் தூங்கவே மாட்டார்கள். சிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுவார்கள். மிக அதிகமான நேரம் டாய்லெட்டில் போய் உட்கார்ந்துகொள்வார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர்கள் நடத்தையிருக்கும். தன்னைவிட அதிக வயதுள்ளவர்களிடம் நெருக்கமாக இருப்பார்கள். இப்படி எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதை தீரவிசாரித்து தெளிவு பெறுங்கள்.

    போதையில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை மீட்டுக் கொண்டுவரவும் இரண்டு அருமையான ‘மருந்துகள்’ இருக்கின்றன. ஒன்று- உடலுக்கு ஊக்கம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது. இரண்டு- தியானம் மேற்கொள்வது. சிறுவயதில் இருந்தே இந்த இரண்டிலும் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். உடலும், மனமும் அதன் மூலம் பலம்பெற்று ஒருநிலைப்படும். அவர்களது வாழ்க்கையும் வளம்பெறும்.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.
    குழந்தைகளுக்கு சிறந்த கல்வி , உணவு, உடை தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல, வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமைதான்.

    இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் சுற்றி பழகும் சமூகம் வேலை, கல்விக்சூழல் எனப் பல வகையிலும் துவண்டு நிற்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இதனால் பலரும் வாழ்க்கை பாதையை தவறாக தேர்ந்தெடுத்து தோல்வியை தழுவுகின்றனர். பலர் முடிவு எடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர். பெற்றோர் சரியான உக்திகளை கையாண்டு பிள்ளைகளை வழிநடத்தினால் தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க முடியும்.

    அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சில வழிகள்.

    மரியாதை கொடுங்கள்

    உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலை படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.

    அடிக்கடி பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.

    கிண்டலை தவிருங்கள்..

    நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும். அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதுவும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.

    தனித்திறமையை பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து அத்திறமையை பாராட்டுங்கள்.

    நம்பிக்கையான நண்பராகுங்கள்

    தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

    வலிமையை உருவாக்குங்கள்

    பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுப்படுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வளரும்.

    தொழில் ரீதியாக உதவுங்கள்

    படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகைக் இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

    தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியான படி பிள்ளைகளுக்கு கற்று கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் சாதிக்க முடியும்.
    பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும். அதேவேளையில் சிலிக்கான் போன்ற மெட்டலினாலான பிரஷைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. வாயின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பற்களையும் சுத்தம் செய்வது இன்றியமையாதது. எனவே, அதற்கேற்றவாறு நீளமான பிரஷ் பயன்படுத்தலாம்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    எண்ணிக்கையில் குறைந்த, சிறிய பற்கள் என்பதால் பேஸ்ட் சிறிதளவு போதும். ஆரம்பத்தில்
    குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.
    பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. இன்று பெற்றோர் குழந்தையின் உணவு விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.
    குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இன்று உங்களது குழந்தையின் உணவு விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.

    1. ஸ்நாக்ஸ்..!

    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.

    2. உணவு தேவை

    பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு உணவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.

    3. உணவு இடைவெளி

    குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நாக்ஸ் தருவதே சிறந்ததாகும்.

    4. ஆரோக்கிய உணவுகள்

    வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக சர்க்கரை இருக்கும். எனவே கவனம் தேவை.

    5. நேரத்திற்கு உணவு

    நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
    இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
    நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசக்கூட நேரமில்லாத நிலையில், கையில் இருக்கும் போனை அதனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை பார்த்துக்கொண்டு அம்மாவை தொந்தரவு செய்யாமல் இரு’ என்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அம்மா-அப்பாவைவிட போன் தான் அதிக மகிழ்ச்சியை தரும் விஷயம் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.

    சின்ன குழந்தைகள் கூட விரல்களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

    இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர்களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.

    இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர் களுக்கு கஷ்டமாகிவிடும். விரல்களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.

    குழந்தைகள் விரல்களை பயன்படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடு களால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவி டுவார்கள்.

    படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.

    இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப் படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.
    குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
    * குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

    * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

    * உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

    * “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

    * பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

    * குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

    * குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    * குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

    * வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    * குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

    இதையும் படிக்கலாம்.. கேரட் உருளைக்கிழங்கு சூப்
    வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
    குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

    * காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.

    * மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.

    * காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது.

    * வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.

    * பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

    * கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் பிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

    * ஒரு காகிதத்தில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    * தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    * அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.

    எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். இசையைக் கேட்கலாம். கவிதை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.

    ×