என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
    ஓம் வெங்கட நாதாய வித்மஹே
    ஸச் சித்தானந்தாய தீமஹி
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.

    அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
    த்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!
    அநந்த பூமா மமரோக ராஸிம்
    நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
    ஒவ்வொரு நவகிரகத்திற்குரிய அழகுத்தமிழ் மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும்.
    சூரிய பகவான்

    சீலமாய் வாழச் சீரருள் புரியும்
    ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
    சூரியா போற்றி சுதந்திரா போற்றி
    வீரியா போற்றி வினைகள் களைவாய்

    சந்திர பகவான்

    எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
    திங்களே போற்றி திருவருள் போற்றி
    சந்திரா போற்றி சத்குரு போற்றி
    சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி

    செவ்வாய் பகவான்

    சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
    குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
    மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
    அங்காரகனே அவதிகள் நீக்கு

    புதன் பகவான்

    இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
    புத பகவானே பொன்னடி போற்றி
    பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
    உதவியே அருளும் உத்தமா போற்றி

    குரு பகவான்

    குணமிகு வியாழக் குரு பகவானே
    மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
    ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹ
    தோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி

    சுக்கிர பகவான்

    சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்
    வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

    சனீஸ்வர பகவான்

    சங்கடந் தீரப்பாய் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
    சச்சரவின்றி சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தாதா

    ராகு பகவான்

    அரவெனும் ராகு ஐயனே போற்றி
    கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
    ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
    ராகுக் கனியோ ரம்மியா போற்றி

    கேது பகவான்

    கேதுத்தேவே கீர்த்தித் திருவே
    பாதம் போற்றி பாவம் தீரப்பாய்
    வாதம் வம்பு வழக்குகள் இன்றி
    கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி
    இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் எவ்வகையிலும் வரக்கூடிய ஆபத்துகள் நெருங்காமல் விலகிவிடும்.
    கௌஸல்யாஸுத தாடகா மதமகத்ராதர் முனிஸ்த்ரீஹி
    சின்னேஷ்  வாஸன ஜானகீவ்ருத வனாவாஸின் கராத்யந்தக
    மாரிசக்ன ஹனூமதீச ரவி  ஜார்த்திச் சேத பத்தாம்  புத்தே
    ஸேனா ப்ராத்ரு  ஸமேத ராவணாரிபோ ஸீதேஷ்ட ராமா வமாம்
    வாதிராஜர் அருளிய க்ருஷ்ண ராமாவதார சரிதரத்ன ஸங்க்ரஹம்

    பொதுப்பொருள்:

    கோசலையின் புதல்வரே, தாடகையை அழித்தவரே, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தவரே, அகலிகையின் சாபத்தைப் போக்கியவரே, சிவதனுசு எனும் வில்லை முறித்தவரே, சீதையின் கணவரே, காட்டில் வசித்தாலும் கலங்காதவரே, கரதூஷணர்களைக் கொன்றவரே, மாரீசனை வதைத்தவரே, அனுமனின் தெய்வமே, சூரியனின் மகனான சுக்ரீவனின் மனக்கவலையைப் போக்கியருளியவரே, வானர சைன்யத்துடனும் தம்பி லட்சுமணனுடனும் திகழ்பவரே, ராவணனை வதம் செய்தவரும் சீதைக்குப் பிரியமானவருமான ராமச்சந்திர மூர்த்தியே, நமஸ்காரம்.
    கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
    கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல்.

    பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!
    முழு ஞானப் பெருக்கே வருக!
    பிறை மவுலிப் பெம்மான்
    முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!
    முழு முதற்கும் வித்தே வருக!
    வித்தின்றி விளைந்த
    பரமானந்தத்தின் விளையே வருக!
    பழுளையின் குருந்தே வருக!
    அருள்பழுத்த கொம்பே வருக!
    திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார்.
     பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!
    பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!
    மலையத்துவசன் பெற்ற
    பெரு வாழ்வே வருக வருகவே!

    இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30-6.00 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30-6.00 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம்.

    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பயநாசகனே போற்றி
    ஓம் அஷ்டரூபனே போற்றி
    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    ஓம் அயன்குருவே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    ஓம் அற்புதனே போற்றி
    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் ஆலயக்காவலனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    ஓம் உக்ர பைரவனே போற்றி
    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
    ஓம் எல்லை தேவனே போற்றி
    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    ஓம் கபாலதாரியே போற்றி
    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    ஓம் கர்வ பங்கனே போற்றி
    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    ஓம் கருமேக நிறனே போற்றி
    ஓம் கட்வாங்க தாரியே போற்றி
    ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    ஓம் காசிநாதனே போற்றி
    ஓம் காவல்தெய்வமே போற்றி
    ஓம் கிரோத பைரவனே போற்றி
    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
    ஓம் சண்ட பைரவனே போற்றி
    ஓம் சட்டை நாதனே போற்றி
    ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் சிவத்தோன்றலே போற்றி
    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    ஓம் சிக்ஷகனே போற்றி
    ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    ஓம் சுதந்திர பைரவனே போற்றி
    ஓம் சிவ அம்சனே போற்றி
    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    ஓம் சூலதாரியே போற்றி
    ஓம் சூழ்வினை அறுப்பவனே
    போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி
    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    ஓம் தலங்களின் காவலனே போற்றி
    ஓம் தீது அழிப்பவனே போற்றி
    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் நவரச ரூபனே போற்றி
    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    ஓம் நாய் வாகனனே போற்றி
    ஓம் நாடியருள்வோனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிர்வாணனே போற்றி
    ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    ஓம் நின்றருள்வோனே போற்றி
    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    ஓம் பகையளிப்பவனே போற்றி
    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பால பைரவனே போற்றி
    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    ஓம் பிரளயகாலனே போற்றி
    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    ஓம் பூஷண பைரவனே போற்றி
    ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பைராகியர் நாதனே போற்றி
    ஓம் மல நாசகனே போற்றி
    ஓம் மகோதரனே போற்றி
    ஓம் மகா பைரவனே போற்றி
    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    ஓம் மகா குண்டலனே போற்றி
    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் முக்தியருள்வோனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் மூலமூர்த்தியே போற்றி
    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    ஓம் வடுக பைரவனே போற்றி
    ஓம் வடுகூர் நாதனே போற்றி
    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    ஓம் விபீஷண பைரவனே போற்றி
    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!    
    முருக பெருமானின் மற்றொரு பெயரான ஸ்ரீ சுப்ரமணியருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.
    ஓம் சரவணா பாவாய நமஹ
    ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
    தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய
    நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ

    முருக பெருமானின் மற்றொரு பெயரான ஸ்ரீ சுப்ரமணியரின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை மாதம் தோறும் வரும் “கிருத்திகை” நட்சத்திர தினத்தன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் துதிக்கலாம். கிருத்திகை நட்சத்திர தின மாலை வேளையில் முருகன் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். தொழில், வியாபாரங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

    மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! சங்கு, சக்கரம் தாங்கியவளே! பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே! உன்னை வணங்குகிறேன்.

    * வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன்.

    * அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டுபவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுபவளே!

    என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.

    * முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித்தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

    * செந்தாமரைப் பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன் மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

    * மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

    * அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே!உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

    * பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலை கடலில் உதித்த அருட்பாவையே! சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.

    * பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள் பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக் கட்டும். பயிர்பச்சை செழித்துவளரட்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்.
    கீழே உள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும்.
    ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
    ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
    பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
    அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே

    அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், இந்த அம்மனின் படம் உங்கள் பூஜையறையில் இருந்தாலோ அல்லது அருகில் அங்காளம்மன் கோவில் இருந்தாலோ அங்கு சென்று ஒரு நெய்தீபம் ஏற்றி, இந்த அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்து, உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டத்தையும் போக்கி அருள்புரிவாள் அங்காளம்மன்.

    உங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    ஸ்ரீ பூதநாத ஸதானந்த
    ஸர்வபூத தயாபரா
    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

    ஐயப்பனை உடல் மன சுத்தியுடன் இந்த மந்திரத்தை தினமும் 18 உரு செபித்து, உங்களது கோரிக்கைகளை அவர்முன் சமர்ப்பிக்க, விரைவான பலனையும், பரிபூர்ண அருளையும் கொடுப்பார்.

    மந்திரம் சித்தியாக பௌர்ணமியன்று 1008 உரு செபித்து பூஜிக்க சித்தியாகும். சுவாமி ஐயப்பன் யந்திரம் வைத்து வழிபடின் மேலும் சிறப்பாக இருக்கும். 
    பைரவருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

    பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து,

    ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’

    என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.
    எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான்.
    எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான். சனிக்கிழமைகளில் இந்த துதியை பாராயணம் செய்தால் வினைகள் தீரும்.

    செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்

    அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே

    பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.
    ×