search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி
    X
    மகாலட்சுமி

    மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! மகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! சங்கு, சக்கரம் தாங்கியவளே! பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே! உன்னை வணங்குகிறேன்.

    * வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன்.

    * அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டுபவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுபவளே!

    என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.

    * முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித்தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

    * செந்தாமரைப் பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன் மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

    * மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

    * அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே!உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

    * பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலை கடலில் உதித்த அருட்பாவையே! சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.

    * பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள் பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக் கட்டும். பயிர்பச்சை செழித்துவளரட்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்.
    Next Story
    ×