என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.
    சக்கர வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. எந்த சக்கர வழிபாடு செய்கிறோமோ அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.

    பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதரச் செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் ஐயமில்லை. "ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தையாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

    எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா
    தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
    அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா
    வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''

    இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்கும்போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயசம் வைத்து வழிபட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.

    ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.

    இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப் பூஜை செய்து வர வேண்டும். செப்புத் தகட்டிலோ, வெள்ளித் தகட்டிலோ அல்லது பஞ்சலோகத் தகட்டிலோ இந்தச் சக்கரத்தைப் பதித்துப் பூஜையறையில் வைத்தும் வணங்கி வரலாம்.

    வெள்ளியினால் செய்த தாயத்தினுள்ளோ, தங்கத்தினால் ஆன தாயத்தினுள்ளோ இந்தச் சக்கரம் பாதிக்கப்பட்ட தகட்டை அடைத்துக் கையில் கட்டிக் கொள்ளலாம். நிச்சயமாக நன்மைகள் பெருகவும், நலம் சேரவும் பக்கத் துணையாக விளங்கும்.
    திருமால் எடுத்த அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
    அயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே
    மந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
    ஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்
    ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி
    ஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்
    ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்
    ஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்

    மூல மந்திரம்

    ஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
    எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி கிடைப்பது உறுதி.
    அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

    ""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
    தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
    நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
    நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!
    கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
    “ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

    - என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
     வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
     ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
     ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”
    திருமால் எடுத்த அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
    தியான ஸ்லோகம்

    த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
    கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,

    மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் நமோ பகவதே
    கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ
    சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.
    திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம்.
    தியான ஸ்லோகம்

    உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
    த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
    வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
    வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.

    மூலமந்திரம்

    ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை இனிமையாய் அமையும்.
    திருமால் எடுத்த அவதாரங்களில் எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
    தியான ஸ்லோகம்

    ஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்
    ஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம் ஸ்பலராமம் ஸதா பஜேஹம்.

    மூலமந்திரம்

    ஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

    சூரியன்

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    பாச ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

    சந்திரன்

    ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

    செவ்வாய்

    ஓம் வீர த்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம ப்ரயோதயாத்.

    புதன்

    ஓம் கஜ த்வஜாய வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத ப்ரயோதயாத்.

    குரு

    ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தன்னோ குரு ப்ரயோதயாத்.

    சுக்கிரன்

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    தநுர் ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

    சனி

    ஓம் காக த்வஜாய வித்மஹே
    கட்க ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரயோதயாத்.

    ராகு

    ஓம் நாக த்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு ப்ரயோதயாத்.

    கேது

    ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரயோதயாத்.
    திருமால் எடுத்த தசாவதாரங்களில் பரசுராம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம். இந்த மந்திரத்தை சொல்வதால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
    தியான ஸ்லோகம்

    க்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்
    பரசுராம  க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,

    மூல மந்திரம்

    ஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
    திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
    தியான ஸ்லோகம்

    முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்
    ப்ருங்காகாரை ரலகநிகரை சோபிவக்த்ராரவிந்தம்
    ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்
    தத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.

    மூல மந்திரம்

    ஓம் க்லீம் ஹம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.

    ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வ இலையோ, மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அர்ச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். ஒவ்வொரு துதியின் முன்னாலும் ‘ஓம்‘ சேர்த்து, சொல்ல வேண்டும்.
    பாடிப் பாடிப் பரவவும், பணிந்து உவந்து போற்றவும். இதனால் பரமனருள் சித்திப்பது உறுதி. ஒவ்வொரு துதியின் முன்னாலும் ‘ஓம்‘ சேர்த்து, சொல்ல வேண்டும். இப்படி சொல்வதால் பலன் உண்டு. ஒவ்வொரு போற்றி முடிந்ததும், வில்வத் தழையோ மலரோ இறைவன் பாதங்களில் இட்டு, அர்ச்சனை செய்வது போல் மனப்பூர்வமாகப் பாவிக்கவும். இதுவும் மானச பூஜையின் பகுதிதான்.

    ஓம் அம்மையே அப்பா போற்றி
    ஓம் அளப்பிலா அருளே போற்றி
    ஓம் அன்பெனும் மலையே போற்றி
    ஓம் அடியார்கள் துணையே போற்றி
    ஓம் அணுவினுள் அணுவே போற்றி
    ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
    ஓம் அகரமே அறிவே போற்றி
    ஓம் அறிந்திடு மொழியே போற்றி
    ஓம் அகத்தனே  போற்றி போற்றி!

    ஓம் அலைகடல் விரிவே போற்றி
    ஓம் அழகனாம் அமுதே போற்றி
    ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
    ஓம் அவிரொளி சடையாய் போற்றி
    ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
    ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
    ஓம் அருமறை முடிவே போற்றி
    ஓம் அருந்தவர் நினைவே போற்றி
    ஓம் அரஹரா போற்றி போற்றி!

    ஓம் ஆதியே அருளே போற்றி
    ஓம் ஆலால கண்டா போற்றி
    ஓம் ஆதாரப் பொருளே போற்றி
    ஓம் ஆலமர் குருவே போற்றி
    ஓம் ஆலவாய் அப்பா போற்றி
    ஓம் ஆரூரின் தியாகா போற்றி
    ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
    ஓம் ஆடரவு அணியாய் போற்றி
    ஓம் ஆற்றலே போற்றி போற்றி!

    ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
    ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
    ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
    ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
    ஓம் இனியசெந் தமிழே போற்றி
    ஓம் இலக்கியச் செல்வா போற்றி
    ஓம் இமயவள் பங்கா போற்றி
    ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
    ஓம் இறைவனே போற்றி போற்றி!

    ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
    ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
    ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
    ஓம் இடபவா கனத்தாய் போற்றி
    ஓம் ஈடிலாப் பிரானே போற்றி
    ஓம் ஈந்தருள் தேவே போற்றி
    ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி
    ஓம் ஈசானத் திறையே போற்றி
    ஓம் ஈசனே போற்றி போற்றி!

    ஓம் உலகிதன் முதலே போற்றி
    ஓம் உமையரு பாகா போற்றி
    ஓம் உள்ளளிர் சுடரே போற்றி
    ஓம் உணவொடு நீரே போற்றி
    ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
    ஓம் உடைகரித் தோலாய் போற்றி
    ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
    ஓம் உருவொடும் அருவே போற்றி
    ஓம் உடையனே போற்றி போற்றி!
    ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
    ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
    ஓம் ஊங்கார ஒலியே போற்றி
    ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
    ஓம் எல்லையில் எழிலே போற்றி
    ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
    ஓம் எண்குண வடிவே போற்றி
    ஓம் எருதேறும் ஈசா போற்றி
    ஓம் எம்பிரான் போற்றி போற்றி!

    ஓம் ஏகநா யகனே போற்றி
    ஓம் ஏதிலார் புகலே போற்றி
    ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
    ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி
    ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
    ஓம் ஏகம்பா இறைவா போற்றி
    ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
    ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
    ஓம் ஏந்தலே போற்றி போற்றி!

    ஓம் ஐயனே அரனே போற்றி
    ஓம் ஐம்பூத வடிவே போற்றி
    ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
    ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
    ஓம் ஒப்பிலா மணியே போற்றி
    ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
    ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
    ஓம் ஒண்குழைக் காதா போற்றி
    ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!

    ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
    ஓம் ஓதிடும் பொருளே போற்றி
    ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
    ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
    ஓம் ஓசையின் ஒலியே போற்றி
    ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
    ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
    ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
    ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!

    ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
    ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
    ஓம் காமனை எரித்தாய் போற்றி
    ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
    ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
    ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
    ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
    ஓம் கருணைமா கடலே போற்றி
    கடவுளே போற்றி போற்றி!

    ஓம் சிவமெனும் பொருளே போற்றி
    ஓம் செவ்வொளி வடிவே போற்றி
    ஓம் தவநிலை முடிவே போற்றி
    ஓம் தண்பதம் தருவாய் போற்றி
    ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி
    ஓம் பரமெனும் பொருளே போற்றி
    ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
    ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி
    ஓம் புண்ணியா போற்றி போற்றி!
    திருமால் அவதாரங்களில் முக்கியமான நரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை சொல்லி வந்தால் எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே நடத்துவார்கள்.
    தியான ஸ்லோகம்

    வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
    பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.

    மூலமந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
    லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
    நடத்துவார்கள்.
    ×