என் மலர்
OTT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
- திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.
- கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
'கிங்டம்'
கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'லவ் மேரேஜ்'
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் 'லவ் மேரேஜ்'. இதில் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கெவி'
இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் கடந்த 27ந் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'மாயக்கூத்து'
'மாயக்கூத்து' என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'தண்டர்போல்ட்ஸ்'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக வெளியான படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கி உள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'வசந்தி'
வசந்தி ரஹ்மான் சகோதரர்களால் எழுதி இயக்கப்பட்ட மலையாள படம் வசந்தி. இதில் வசந்தியாக ஸ்வாசிகா சிஜு வில்சன், ஸ்ரீல நல்லேடம், மது உமாாலயம், ஷபரிஷ் வர்மா, சிவாஜி குருவாயூர், வினோத் குமார், ஹரிலால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கராத்தே கிட் லெஜண்ட்ஸ்'
இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி சான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தி டோர்'
இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியான படம் 'தி டோர்'. மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
- லவ் மேரேஜ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- லவ் மேரேஜ் திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படம் இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனால் திரைப்படம் இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லவ் மேரேஜ் திரைப்படம் வரும் 29ம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.
இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா
முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.
இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் இதுவரை உலகளவில் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
- கணவன்-மனைவிக்கிடையே நிகழும் நகைச்சுவையான ஈகோ கிளாஷ்கள் தலைவன் தலைவி திரைப்படம் சுட்டி காமிக்கிறது
- ஒரு திருடன் முதியவரின் சொத்தை அடைய திட்டமிட்டு, அவருடன் செல்லும் ரோடு-ட்ரிப் கதையாக உருவாகியுள்ளது
தலைவன் தலைவி
கணவன்-மனைவிக்கிடையே நிகழும் நகைச்சுவையான ஈகோ கிளாஷ்கள். ஹியூமர் மற்றும் கலாச்சார சுவையுடன், இயக்கியுள்ளார் பாண்டிராஜ். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மாரீசன்
ஒரு திருடன் முதியவரின் சொத்தை அடைய திட்டமிட்டு, அவருடன் செல்லும் ரோடு-ட்ரிப் கதையாக உருவாகியுள்ளது மாரீசன். ஆனால் பயணத்தில் நடக்கும் சம்பவங்கள், அசாதாரண நட்பு மற்றும் வாழ்க்கை பாடங்களை வெளிப்படுத்துகின்றன. ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இத்தி ஸி குஷி
மும்பையை தளமாகக் கொண்டு உருவான இந்த எமோஷனல் சீரிஸ், ஆறு சகோதரர்களில் மூத்தவளான அன்விதாவின் வாழ்க்கையைச் கூறுகிறது. தந்தை மது பழக்கத்திலும், தாய் இல்லாமலும் இருக்கும் சூழலில், தனது கனவுகளை தியாகம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் ஒரு இளம் பெண்ணின் தன்னம்பிக்கை பயணமாக இந்த சீரீஸ் உருவாகியுள்ளது. இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டாக்கிங் சமந்தா
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படம், 2011-இல் சமந்தா, கிறிஸ்டோஃபரை சந்தித்த பிறகு தொடங்கிய 13 ஆண்டுகால துரத்தல், தொல்லை மற்றும் கடத்தல் சம்பவத்தை அச்சுறுத்தும் வகையில் வெளிக்கொணர்கிறது. இப்படம் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
---
அமர் பாஸ்
ஒரு புதுமையான ஆபீஸ் காமெடி. தன் ஆபீசில் இண்டர்னாக தாயே வேலைக்குச் சேரும் போது, ஒரு பதிப்பக இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான சிக்கல்கள். நகைச்சுவை என ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் அமர் பாஸ் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.
---
மா
நடிப்பு குயின் காஜோல் நடித்துள்ள சக்திவாய்ந்த படம் மா. கணவர் மரணத்திற்குப் பிறகு மகளுடன் பூர்வீக கிராமத்துக்குச் செல்லும் ஒரு பெண் அங்கே பழமையான சாபமும் குடும்ப ரகசியங்களையும் எதிர்கொள்கிறார். உணர்ச்சி, மர்மம், ஹாரர் – எல்லாம் கலந்த சஸ்பென்ஸ் திரில்லரராக மா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
---
ஷோதா
உளவியல் த்ரில்லர். பல வருடங்கள் காணாமல் போன மனைவி மீண்டும் வீடு திரும்பும் போது, அவள் உண்மையில் தன் மனைவியா என்ற சந்தேகம் எழுகிறது. நம்பிக்கை, அன்பு, அடையாளம் அனைத்தையும் சோதிக்கும் கதையாக ஷோதா உருவாகியுள்ளது. ஷோதா ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பீஸ் மேக்கர் – சீசன் 2
DC யூனிவெர்ஸின் ஆட்டம் பாட்டம் நிறைந்த ஆன்டி-ஹீரோ மீண்டும் வந்துள்ளார். ஆக்ஷன், காமெடி, பைத்தியம் கலந்த மிஷன்களுடன் கூடிய சீசன் 2, ரசிகர்களை கவரப்போகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
---
ஹரி ஹர வீர மல்லு
இந்த படம் ஒரு புரட்சியாளர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் காவியக் கள்ளனின் கதையைச் சொல்லுகிறது. பிரம்மாண்டமான செட், வித்தியாசமான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள், பவன் கல்யாணின் சக்திவாய்ந்த நடிப்பு—all in one package ஆக ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் உருவானது. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
- யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதே நாளில் தலைவன் தலைவி திரைப்படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- அனுபமா பரமேஸ்வரன் IT துறையில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறார்.
- அஃகேனம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
Akkenam
OTT தளம்: Sun NXT
வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 16, 2025
கதை: கீர்த்தி பாண்டியன் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவள் ஒரு இரவு, சிறையிலிருந்து வெளிவந்த குற்றவாளியுடன் மோதி, சந்திப்பு ஏற்படுகிறது. அதற்கு அடுத்து அவளுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்களே படத்தின் கதைக்களமாகும்.
Constable Kanakam
OTT தளம்: ETV Win
வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 14, 2025
கதை: ஏழு எபிசோடுகளாக வரும் கிரைம்-த்ரில்லர். கருப்புமந்திரம் மற்றும் கிராமப்புற பெண்களின் போராட்டங்களை மையமாகக் கொண்டது. வர்ஷா போலம்மா தலைமை வேடத்தில் நடித்துள்ளார்.
Janaki V vs State of Kerala
OTT தளம்: ZEE5
வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 15, 2025
கதை: அனுபமா பரமேஸ்வரன் IT துறையில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதிக்காக போராடும் அவளின் வாழ்க்கையை வக்கீல் சுரேஷ் கோபி சவாலாக எதிர்கொள்கிறார்.
Vyasana Sametham Bandhu Mithradhikal
OTT தளம்: Manorama MAX
வெளியீட்டு தேதி**: ஆகஸ்ட் 14, 2025
கதை: ஒரு மரண சடங்கு வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்து நகைச்சுவையாக கையாண்டுள்ளது இத்திரைப்படம். அனஸ்வர ராஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Good Day
OTT தளம்: Sun NXT
*வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 15, 2025
Saare Jahan Se Accha: The Silent Guardians**
OTT தளம்: Netflix India
வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 13, 2025
கதை: 1970களில் நடக்கும் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ளது.. அணு அச்சுறுத்தலை தடுக்க, ஒரு இந்திய உளவு அதிகாரி தனது எதிரியை எதிர்கொள்ளும் கதையாக அமைந்துள்ளது.
Court Kacheri
OTT தளம்: SonyLIV
வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 13, 2025
கதை: பரம் (ஆஷிஷ் வர்மா) தனது தந்தையின் பெயருக்கு தகுந்தவனாக இருக்க வேண்டி, விருப்பமில்லாமல் சட்டவியல் துறையில் இறங்குகிறார். சின்ன ஊர் கோர்ட் கலாட்டாக்கள் இந்த காமெடி-டிராமாவை சிறப்பாக்குகின்றன.
Tehran
OTT தளம்: ZEE5
வெளியீட்டு தேதி**: ஆகஸ்ட் 14, 2025
கதை: ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்த அரசியல் த்ரில்லர், ஈரான்–இஸ்ரேல்–இந்தியா இடையிலான புவிசார் பதற்றங்களையும் ,உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
Andhera
OTT தளம்: Prime Video
வெளியீட்டு தேதி* ஆகஸ்ட் 14, 2025
கிரைம் மிஸ்ட்ரி கதைக்களமாக உருவாகியுள்ள திரைப்படம்
- விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
- இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ.
- நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
"பறந்து போ"
இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்த படம் பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
"ஓஹோ எந்தன் பேபி"
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு ராம்-காம் கதைக்களத்தில் உருவான திரைப்படமாகும்.
"மாமன்"
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ,சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைப்படம் திரையரங்கிள் மக்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"யாதும் அறியான்"
யாதும் அறியான் என்பது எம். கோபி எழுதி இயக்கிய திரில்லர் படமாகும். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் அப்பு குட்டி , தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
"மாயசபா"
ஆதி பினிசெட்டி மற்றும் சைதன்யா ராவ் நடித்துள்ள படம் மாயசபா. இந்த படத்தை தேவ கட்டா இயக்கியுள்ளார். உளவியல் அரசியல் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இதில் சாய் குமார், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"வெட்னஸ்டே சீசன் 2"
பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. தற்போது இந்த தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார். வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.
"பத்மாசுலு"
பத்மாசுலு என்பது ஷங்கர் செகுரி இயக்கிய தெலுங்கு நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் கவிதா ஸ்ரீரங்கம், தீக்ஷா கோடேஷ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர்
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த 2024 வெளியீட்டு திரைப்படம் 'நடிகர்', திரையரங்குகளில் ரசிகர்கள் மெதுவாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் நாளை சைனா ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் பாவனா, சௌபின் சாஹிர், திவ்யா பிள்ளார், பாலு வர்கீஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'.
- சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம்
திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
1. கலியுகம் (Kaliyugam)
தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'. இது ஒரு போஸ்ட்-அபோகாலிப்டிக் சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. 2050-ல் நடக்கும் இக்கதையில், உலகப் போருக்குப் பிந்தைய சூழலில் உயிர் பிழைப்பதற்காகப் போராடும் மனிதர்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
2. 3BHK
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சரத்குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சொந்த வீடு கனவை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள இப்படம், குடும்பத்துடன் பார்க்க ஒரு சிறந்த தேர்வாகும். இத்திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
3. தம்முடு (Thammudu) - தெலுங்கு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த திரைப்படம் 'தம்முடு'. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட இக்கதையில், ஒரு தம்பி தன் அண்ணனுக்காக எதையும் செய்யத் துணிவதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். இது அதிரடி ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
4. கரமில கந்தர ஸ்வப்னம் (Karamila Kanthara Swapnam) - மலையாளம்
வழக்கமான மலையாளப் படங்களின் பாணியில், ஆழமான உணர்வுகளைப் பேசும் ஒரு நாடகத் திரைப்படமாக 'கரமில கந்தர ஸ்வப்னம்' வெளியாகிறது. கனவுகள், லட்சியங்கள் மற்றும் மனித உறவுகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பற்றி பேசும் இப்படத்தில், ஸ்ரீநாத் பாசி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
5. குப்பர் ஜிந்தகி (Kuppar Zindagi) - மலையாளம்
இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையையும், அவன் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்ட ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக இருக்கும். மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம், யதார்த்தமான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்களின் ரசிகர்களைக் கவரும்.
6. கட்ஸ் (Guts)
அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை களத்தில் உருவான இப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
7. சிதாரே ஜமீன் பர் (Sitaare Zameen Par)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு மற்றும் உணர்ச்சிகரமான நாடகத் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்தத் திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் சந்தா முறையில் வெளியாகவில்லை. மாறாக, யூடியூப் (YouTube) தளத்தில் ஆகஸ்ட் 1, 2025 முதல், 'பே-பர்-வியூ' (Pay-per-view) முறையில், அதாவது பணம் செலுத்திப் பார்க்கும் வசதியுடன் வெளியாகிறது. இப்படத்தை மக்கள் 100 ரூபாய் கட்டி பார்க்கலாம்.
8. சீஃப் ஆஃப் வார் (Chief of War)
'Aquaman' புகழ் ஜேசன் மோமோவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட வரலாற்றுத் தொடர் 'சீஃப் ஆஃப் வார்'. இத்தொடர் ஆப்பிள் டிவி+ (Apple TV+) தளத்தில் வெளியாகியுள்ளது.
- நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
- இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை ஒருமனதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.






