என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
    மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி 'மெரினா புரட்சி' என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

    சென்னை வடபழனியில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில், பங்கேற்று பேசிய நடிகர் பொன்வண்ணன்,  மெரினா போராட்டத்தை போல், ஒரு போராட்டத்தை தாம் பார்த்தது இல்லை என்றும், இனிமேல், நாம் பார்க்க போவதும் இல்லை என்றும் கூறினார். 

    மெரினா புரட்சி பட போஸ்டர்

    இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஜாதி மத பேதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதாகவும், ஆனால்  இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெற்று விடக் கூடாது என்று போலீசார் தடியடி நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டினார். 
    சினிமா தயாரிக்கும் முடிவை நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    காஜல் அகர்வால், தமன்னா இணைந்து சமீபத்தில் புதிய திட்டம் தீட்டினர். இருவரும் இணைந்து சொந்த படம் தயாரிப்பதுதான் அந்த திட்டம். இதற்காக கதை, இயக்குனர் தேர்வு செய்தனர். சீக்கிரமே தயாரிப்பு பணி தொடங்கிவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் பட தயாரிப்பிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்கள். பட தயாரிப்புக்கான பணிகள் தொடங்கிய சில நாட்களிலேயே தமன்னா அதிலிருந்து விலகி, நடித்தால் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

    தமன்னா, காஜல் அகர்வால்

    எப்படியாவது படத்தை தயாரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காஜல் இருந்தார். தற்போதுள்ள சூழலில் படம் தயாரித்து அதை ரிலீஸ் செய்வது கடினமான விஷயமாக இருப்பதை அறிந்து காஜலும் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் பணத்தை தயாரிப்பில் முதலீடு செய்து இழப்பதைவிட தொடர்ந்து நடித்து சம்பாதிக்கிற வழியை பார் என்று குடும்பத்தினர் அறிவுரை வழங்கி இருக்கிறார்களாம்.
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்படும் ’தி அயர்ன் லேடி’ படம் தாமதமாவது குறித்து நித்யாமேனன் விளக்கம் அளித்துள்ளார்.
    நித்யாமேனனை கதாநாயகியாக கொண்டு தி அயர்ன் லேடி என்ற பெயரில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இயக்குநர் பிரியதர்ஷினி இப்படத்தை இயக்க உள்ளார். அதே சமயம், கங்கனா ரணாவத் நடிப்பில் தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய்யும் பட வேலைகளை தொடங்கி உள்ளார். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிசாக இயக்கி வருகிறார். அக்டோபர் மாதம், தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

    அப்படத்திற்காக, தமிழ் மொழி உச்சரிப்பு, பரத நாட்டியம் கற்பது போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா. இந்நிலையில், நித்யா மேனன் மலையாளத்தில் தான் நடித்துள்ள கொளம்பி படத்திற்காக நிருபர்களை சந்தித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், “தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறைய முன் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும்.

    நித்யாமேனன்

    இயக்குநர் பிரியதர்ஷினி இந்த படத்தை சென்சேஷனான விஷயமாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் இப்படத்திற்கு நியாயம் செய்ய விரும்புகிறோம். எனவே, உடனடியாக படத்தைத் தொடங்கி எந்தத் சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம்” எனக் கூறியுள்ளார்.
    ‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே யுடியூப்பில் பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த டிரைலரில் நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

    ஜெயம் ரவி கோமாவில் 19 ஆண்டுகளாக இருந்து மீண்டு வருவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. கோமாவில் இருந்து மீண்டு எழும் ஜெயம் ரவியிடம் அவர் கோமாவில் இருந்ததை நிரூபிக்க யோகி பாபு டிவியை ஆன் செய்கிறார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்.

    ஜெயம்ரவி, ரஜினி

    ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி படத்தில் இடம்பெற்றதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஜெயம் ரவியும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரித்து ஜெயம் ரவியையும் படத்தையும் விமர்சித்து வருகிறார்கள்.
    ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளனர். 

    இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். அதன்படி இப்படத்திற்கு 'களத்தில் சந்திப்போம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
    தமிழ் சினிமாவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு விஜய்சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். 

    மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். 

    துக்ளக் தர்பார் பட பூஜை

    'துக்ளக் தர்பார்' படத்தின் தொடக்க விழா பூஜை, சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் பற்றிய, ஒரு சிறு கதையை கூறி அதுபோல விஜய் சேதுபதியின் வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்றார்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    காப்பான் பட போஸ்டர்

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 20-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  
    சந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. 

    சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

    100 சதவீதம் காதல் பட போஸ்டர்

    கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கணேஷ்.ஆர் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். 
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் இந்தியில் அறிமுகம் ஆகிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ்

    இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஈஸ்வர் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
    விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

    பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். 

    சங்கத்தமிழன் படத்திற்கு டப்பிங் பேசும் விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் காரைக்காலில் நடைபெற்று முடிவுபெற்றது. இன்று இப்படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் முன்னோட்டம்.
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

    ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் - ஞானகரவேல், மணிஅமுதவன், கலை - மதன், ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கி இருக்கிறார் ஜெகதீசன் சுபு.
    நடிகர் அருண் விஜய் தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 குத்துச்சண்டை வீரர்களை சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.
    தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அருண் விஜய். இவருடைய நடிப்பில் தற்போது ‘அக்கினிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. பாக்ஸர் படத்திற்காக வியட்நாமில் சிறப்பு பயற்சி பெற்று வந்திருக்கிறார் அருண் விஜய்.

    இந்நிலையில், தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 குத்துச்சண்டை வீரர்களை (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, மற்றும் வெள்ளி பெற்றவர்கள் 9) சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

    ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கும் பாராட்டுக்களை அருண் விஜய் தெரிவித்தார்.

    குத்துச்சண்டை வீரர்களுடன் அருண்விஜய்

    இவர்களை சந்தித்தது குறித்து அருண் விஜய் கூறும்போது, “இந்த வெற்றிக் களிப்பு 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்தவரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள்” என்றார். 

    மேலும் “குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல் மற்றும் மன ரீதியாகத் தயாராக வேண்டியிருக்கும். ‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது.

    அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன். அவர்கள் சந்தித்த சவால்களும், அவற்றை எதிர்த்து அவர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன. அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க விரும்புகிறேன்’ என்றார்.
    ×