என் மலர்
சினிமா செய்திகள்
வேல்ஸ் வெற்றிவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுவதாக கூறினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேஷ். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு ஐசரி கணேஷ் நினைவு பரிசு வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இதுவரை பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் கலந்துகொண்ட நான் முதன் முறையாக இந்த பட விழாவில் பங்கேற்கிறேன். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஒரே வருடத்தில் 3 வெற்றி படங்களை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது. திரைப்படங்கள் மூலம் பண்பாடு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுகின்றன.
நாடகத்துறையில் இருந்துதான் எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்தார். அதுபோல் ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனும் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்து, எம்.ஜி.ஆருடன் அரசியலிலும் பயணித்தார். எம்.ஜி.ஆர்., நடிக்கும் போது, ஏழை மக்களின் பசி துயர் அறிந்து, வீட்டிற்கு வருவோருக்கு, பசியாற உணவளித்தார். பசியின் கொடுமையை அறிந்ததால், முதல்வராக பொறுப்பேற்றதும், பள்ளிக் குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்கி, சரித்திரம் படைத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்கு முன் மாதிரியாக, வாழ்ந்து காட்டினர்.

மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் சாதனமாக மட்டும் சினிமாவை பயன்படுத்தாமல், மக்களை நெறிமுறைப்படுத்தும் களமாக மாற்றி அமைத்தனர். ‘இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துக்களை பரப்பும் வகையில் படம் எடுக்க வேண்டாம்; அத்தகைய படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்‘ என்று திரைத்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். அரசியல் ரீதியாக கூறவில்லை; சமுதாய அக்கறையோடு பதிவு செய்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சமுதாய அக்கறையுள்ள படங்களை எடுக்கும்படி வேண்டுகிறேன்.
30 ஆயிரம் மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு கல்வித்துறையில் சிறப்பாக சேவை புரியும் ஐசரி கணேசும் 3 சிறந்த வெற்றி படங்களை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சினிமாத்துறைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கியிருக்கிறது. கோவா பட விழாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திரைப்பட துறையினரை இந்த அரசு மறக்காது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசு சார்பில் சர்வதேச திரைப்பட விழா விற்கு முன்பு 50 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சேர்ந்து 75 லட்சமாக வழங்கியுள்ளதாக கூறினார். முதல்வர் பல அதிசயங்களை நடத்தி காட்டுபவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

விழாவில் ‘கோமாளி’ படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் உள்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், டைரக்டர் பிரபு உள்ளிட்டோருக்கும், ‘பப்பி’ படத்தில் நடித்த வருண், சம்யுக்த ஹெக்டே உள்ளிட்ட நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்அமைச்சர் விருதுகள் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, காமராஜ், கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு. தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், டைரக்டர்கள் பாக்யராஜ், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார். ஆர்.வி.உதயகுமார், திருமலை, நடிகர்கள் ஜீவா, உதயா, சிவா, ஆர்.கே.சுரேஷ், நடிகை குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், டைரக்டர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் வரவேற்றார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.
மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துண்ணனர். இந்த படத்தில் கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி தம்பி படம் ரிலீசாக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் முன்னோட்டம்.
வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.

மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துண்ணனர். இந்த படத்தில் கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ’த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும், த அயன் லேடி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார்.
தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அதனால் ஜெயலலிதா சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவர் மாதிரியே நடிக்கவும் என்னை தயார் செய்து வருகிறேன். ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வேடத்தில் நடிக்க எனது 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”
இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
இளம் வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் வேறலெவல்ல இருந்திருப்பார் என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஆதித்ய வர்மா. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துருவ் விக்ரமின் சிறப்பான நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இப்படத்திற்கு மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால், ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது: " ஆதித்ய வர்மாவிற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பற்றி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார்.
எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார்.

நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான அங்கீகாரம் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு, என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி" என்றார்.
ராமர் குறித்த வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
அதில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது. புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். இந்துக்கள் மனதை புண்படுத்தும்படியும் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்றும் வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ராமர் பெயர் எழுதப்பட்ட மேலாடையை எப்படி அணியலாம் என்று கண்டனங்கள் கிளம்பின.

மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோஷிமார்க் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாணிகபூரிடம் நேரில் விசாரணை நடத்த தேடி வருகிறார்கள்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தன்னை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்திய நிருபருக்கு நடிகை டாப்சி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற, பொது அமர்வில் டாப்சி கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்த டாப்சியிடம் இந்தியில் பேசுமாறு ஒரு நிருபர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டாப்சி ரசிகர்களை பார்த்து இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா? என கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் இல்லை என்று கூறினர்.

அதனை புரிந்து கொள்ளாத அந்த நிருபர் நீங்கள் பாலிவுட் நடிகை எனவே இந்தியில் தான் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் பொறுமை இழந்த டாப்சி, நான் இந்தியில் மட்டும் நடிக்கவில்லை தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறேன், எனவே தமிழில் பேசவா என எதிர் கேள்வி எழுப்பினார். டாப்சியின் இந்த பதிலுக்கு அங்கு இருந்தவர்கள் ஆரவார குரல் எழுப்ப அந்த நிருபர் ஏதும் பேசாமல் அமர்ந்தார். தன்னை இந்தியில் பேச வற்புறுத்திய நிருபரை நடிகை டாப்சி ஒற்றை கேள்வியால் வாயடைக்க செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படம் சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வித்தியாசமான புரமொஷனில் களமிறங்கியுள்ள ஹீரோ படக்குழு பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹீரோ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது. ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டது.

ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இதில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. டிசம்பர் 20-ந்தேதி ஹீரோ படம் திரைக்கு வரும். இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டு உள்ளது.
ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் 2 கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். சீதக்காதி படத்தில் வயதானவராகவும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்தார். தற்போது விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல் தெலுங்கு, இந்தி பட வாய்ப்புகளும் அவருக்கு வருகின்றன. சமீபத்தில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தியன்-2 படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. சேனாதிபதியாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஊழல்வாதிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கமல்ஹாசன் காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஃப்ரோஸன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் ஃப்ரோஸன் 2 படத்தின் விமர்சனம்.
எல்சா, ஆனா இருவரும் அக்கா, தங்கைகள். இவர்கள் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய தந்தை, பக்கத்தில் இருக்கும் மர்ம காடு பற்றிய சிறிய கதையை கூறுகிறார். மேலும் அந்த காடு தற்போது பனி புகையால் சூழப்பட்டிருப்பதையும் சொல்கிறார்.
எல்சாவும், ஆனாவும் பெரியவர்களாக வளர்கிறார்கள். எல்சாவிற்கு அடிக்கடி மர்மக்குரல் ஒன்று கேட்கிறது. அது என்ன குரல் யாருடயது என்பதை அறிய முயற்சி செய்கிறார். அந்த குரல் பனி புகையால் சூழப்பட்டிருக்கும் மர்ம காட்டில் இருந்து வருவதை அறிந்து அங்கு செல்கிறார் எல்சா.

எல்சாவுடன் தங்கை ஆனா, பனிமனிதன் ஒலாஃப், கிரிஸ்டாஃப் உள்ளிட்டோர் மர்ம காட்டுக்குள் செல்கிறார்கள். ஆனால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எல்சாவிற்கு இருக்கும் அதித சக்தியால் அந்த காட்டுக்குள் அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அங்கு பல பிரச்சனையில் சிக்கும் எல்சா, இறுதியில் அதிலிருந்து தப்பிக்கிறார்? அந்த குரலின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஃப்ரோஸன் முதல் பாகத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து ஃப்ரோஸன் 2 கதை தொடங்குகிறது. வழக்கமான டிஸ்னி படங்களில் இடம்பெறும் தத்ரூபமான அனிமேஷன், இப்படத்தில் தரமாகவே இருக்கிறது. திரைக்கதையுடன் வரும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. முதல் பாகத்தில் இருந்த உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இல்லை. இருப்பினும் சுவாரஸ்யமாக திரைக்கதை செல்கிறது.
தமிழில் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசனும், ஆனாவிற்கு டிடியும், பனி மனிதன் ஒலாஃப்க்கு சத்யனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் பாடல்களால் கவர்ந்திருக்கிறார். ஆனாவின் பின்னணி குரல் டிடியை கண்முன் நிறுத்துகிறது. ஆனாவின் பின்னணி குரலுக்கு டிடி சரியான தேர்வு. பனிமனிதன் உருவத்தில் கலகலப்பூட்டியிருக்கிறார் சத்யன். பின்னணி இசையும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஃப்ரோஸன் 2’ குழந்தைகளின் கொண்டாட்டம்.
குட்டி ராதிகா நடிப்பில் நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘தமயந்தி’ படத்தின் முன்னோட்டம்.
இயற்கை, மீசை மாதவன் உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னட பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில் "தமயந்தி" என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும், கணேஷ் நாராயண் இசையையும், வினோத்குமார் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

முன்னனி இயக்குனர்கள் பலரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தை பற்றி இயக்குனர் நவரசன், " 1980 ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு அரண்மனையிலிருந்து எதிர்பாராத விதமாக கதாநாயகியின் ஆவி வெளியே வருகிறது. தன்னையும் குடும்பத்தையும் அழித்தவர்களை தேடி வருகிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் விறுவிறுப்பு உருவாக்கியுள்ளோம்’ என்றார்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, என்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினியுடன் 'தர்பார்', சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', விஜய் சேதுபதியுடன் 'கடைசி விவசாயி' என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக 'மண்டேலா' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே 'சத்யம்' இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் வருங்கால மனைவி என்றும் செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் யோகி பாபு ட்விட்டர் பக்கத்தில், ‘என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.’ என்று பதிவு செய்துள்ளார்.






