என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா, தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார்.
    தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

    இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    அனிகா

    இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்பார்ப்பும் கிளம்பியது. இவர் கவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்தார்கள். தற்போது மீண்டும் புடவையில் வயிறு தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார்.
    தமிழில் முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் ஹிப்ஹாப் ஆதி, கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்கிறார்.
    முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய இசையில் சமீபத்தில் ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். 

    இவருடைய இசையில் சூப்பர் சிங்க ஜூனியர் புகழ் பூவையார் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பூவையாரின் பாடலை கேட்ட ஆதி, தன்னுடைய இசையில் ஒரு பாடலை பாட வைப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.



    சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் பாடலில் பூவையார் சிறு வரிகளை பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகாவை, ஆபாச நடிகையுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
    நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

    தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கு சில ரசிகர்கள் வரவேற்றாலும் பலர் ஆபாச நடிகை மியா கலிபாவுடன் ஒப்பிட்டு கமண்ட் செய்துள்ளார்கள்.



    ஏற்கனவே ஆபாச நடிகையுடன் ஒப்பிட்டு பேசும் போது, ‘என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என யாஷிகா கூறியிருந்தார்.
    நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியா, தினமும் துல்கர் சல்மான் வீட்டிற்கு சென்று வருகிறார்.
    நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். நிறைய வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் இருந்தவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள படத்தில் ரீஎன்ட்ரி ஆனார். 

    சமீபத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் தொடக்க விழா நடந்தது. இப்படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவரே மறுத்துவிட்டார். திருமணத்துக்கு பிறகும் சுட்டித்தனம் குறையாமலிருக்கும் நஸ்ரியா தினமும் துல்கர் சல்மான் வீட்டுக்கு காலையில் சென்றுவிட்டு மாலையில் தான் திரும்பி வருகிறார். இந்த தகவலை துல்கர் சல்மானே வெளியிட்டுள்ளார். 

    துல்கர் சல்மான் மனைவியுடன் நஸ்ரியா மற்றும் அவரது கணவர் பகத் பாசில்

    அவர் கூறும்போது, 'பிளே ஸ்கூலுக்கு குழந்தைகள் துள்ளிக்கொண்டு செல்வதுபோல் நஸ்ரியா தினமும் என் வீட்டுக்கு வந்துவிடுவார். கணவர் பகத் பாசிலே அவரை என் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு மாலையில் வந்து அழைத்துச் செல்வார். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நஸ்ரியாவும் என் மனைவி அமல் சுபியாவும் நெருக்கமான தோழிகள். சினிமாவுக்கு சென்றாலும், பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றாலும் எப்போதும் ஒன்றாகத்தான் போவார்கள்' என்றார். 

    துல்கர் சல்மான் பற்றி நடிகை நஸ்ரியா கூறும்போது, 'துல்கர் எனது அண்ணன் போன்றவர் அவரது மனைவி அமலும் நானும் நெருங்கிய தோழிகள். எங்குபோனாலும் ஒன்றாகத்தான் போவோம்' என்றார்.
    மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலை நவம்பர் 29ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன்

    இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
    ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லிஜோமோல், சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார்.
    ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பவர் லிஜோமோல். முதல் படத்திலேயே இவர் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது தோழிகள் ஆடிஷனுக்காக கூப்பிட்டார்கள், சரி சும்மா போய் பார்க்கலாமே என்று போனேன். 

    உடனே செலக்டெட்ன்னு சொல்லிட்டாங்க. முதல் படமே பெரிய ஹீரோவோடதான் நடிச்சேன். அந்த படத்தை பார்த்துவிட்டு தான் தமிழில், "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு இரண்டு முறை ஆடிஷனுக்கு வந்தேன். சில சீன் நடித்தும் காண்பித்தேன். அக்கா கேரக்டர் என்றாலும், நல்ல ரோல் என்று சொன்னார்கள். 

    லிஜோமோல்

    ஒரு நாள் வரை முழு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்கள். பிறகு, "நீங்க ஊருக்கு போங்க. நாங்க கூப்பிடும் போது திரும்ப வந்தால் போதும்' என்று சொன்னார்கள். அதன் பிறகு ஒரு நாள் போன் வந்தது. "நாளை முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. நீங்க கிளம்பி வாங்க' என்றார்கள். இப்படித்தான் தமிழ் பட வாய்ப்பு எனக்கு வந்தது. 

    எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாததால் இயக்குநர் சசிசார் ஒவ்வொரு சீனையும் விளக்கி எப்படி முக பாவனை காட்ட வேண்டும் என்று சொல்லித் தருவார். அதை உள்வாங்கி அப்படியே நடித்தேன். தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன். இப்போதைக்கு வேறு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இப்போ பிஎச்.டி தேர்வுக்கும் தயார் செய்து கொண்டு இருக்கிறேன். அதுக்காக சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று இல்லை. எனக்கான கதாபாத்திரம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்'' என்றார்.
    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் பற்றிய வதந்திக்கு பெண் வீட்டார் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
    காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சதீசுக்கும் ‘சிக்சர்’பட இயக்குனரின் தங்கை சிந்துவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ‘சிக்சர்’ படத்தில் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால், காதல் திருமணம் என்று பலரும் செய்திகள் வெளியிட்டு வந்தனர். சதீஷ் - சிந்து திருமணம் டிசம்பர் 11-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இணையத்தில் சதீஷ் காதல் திருமணம் என்று செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், ‘சிக்சர்’ இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இது உண்மையான நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என தெரிவித்துள்ளார். சதீஷ் - சிந்து இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவால் சதீஷின் திருமணம் காதல் திருமணம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. 

    சதீஷ்

    சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் திருமண அழைப்பிதழை கொடுத்தார் சதீஷ். தற்போது திரையுலக நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். 
    தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமான ராஷ்மிகா, கவர்ச்சியாக நடித்ததால் தான் சில பிரச்சனைகளை சந்தித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க பேசி வருகிறார். சினிமாவில் தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: நடிக்க வந்த புதிதில் சினிமா பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துவிட்டு போனால் போதும் என்றே நினைத்திருந்தேன். 

    ஆனால் அதையும் தாண்டி, ஒரு படத்தின் விளம்பரத்துக்காக மெனக்கெட வேண்டும் என்பதை போக போக தெரிந்துகொண்டேன். சினிமாவில் எந்த உயரத்தில் இருந்தாலும் படத்தின் புரமோஷனுக்காக இறங்கி வந்தே ஆக வேண்டும். மக்களிடம் ஒரு படம் செல்ல, நாம் மக்களிடம் பழக வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். 

    ராஷ்மிகா

    அதே சமயம், சினிமா துறைக்கு வெளியே நிறைய தர்மசங்கடமான சூழலை சந்தித்தேன். கிரிக் பார்ட்டி தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன். இதை பார்த்து அக்கம் பக்கத்து வீட்டினர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அது வெறும் நடிப்பு என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. சில நண்பர்கள், தோழிகளும் நான் சினிமாவுக்கு வந்ததால் என்னுடன் நட்பை முறித்துக்கொண்டனர். இது எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது’. இவ்வாறு அவர் கூறினார்.
    வேல்ஸ் வெற்றிவிழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுவதாக கூறினார்.
    வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ஐசரி கணேஷ். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு ஐசரி கணேஷ் நினைவு பரிசு வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இதுவரை பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் கலந்துகொண்ட நான் முதன் முறையாக இந்த பட விழாவில் பங்கேற்கிறேன். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல்’ ஒரே வருடத்தில் 3 வெற்றி படங்களை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது. திரைப்படங்கள் மூலம் பண்பாடு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள், சிறந்த வெற்றி பெறுகின்றன.

    நாடகத்துறையில் இருந்துதான் எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்தார். அதுபோல் ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனும் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்து, எம்.ஜி.ஆருடன் அரசியலிலும் பயணித்தார். எம்.ஜி.ஆர்., நடிக்கும் போது, ஏழை மக்களின் பசி துயர் அறிந்து, வீட்டிற்கு வருவோருக்கு, பசியாற உணவளித்தார். பசியின் கொடுமையை அறிந்ததால், முதல்வராக பொறுப்பேற்றதும், பள்ளிக் குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்கி, சரித்திரம் படைத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்கு முன் மாதிரியாக, வாழ்ந்து காட்டினர். 

    கடம்பூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி, ஐசரி கணேஷ்

    மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் சாதனமாக மட்டும் சினிமாவை பயன்படுத்தாமல், மக்களை நெறிமுறைப்படுத்தும் களமாக மாற்றி அமைத்தனர். ‘இளைஞர்கள் நலன் கருதி, தீய கருத்துக்களை பரப்பும் வகையில் படம் எடுக்க வேண்டாம்; அத்தகைய படங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம்‘ என்று திரைத்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். அரசியல் ரீதியாக கூறவில்லை; சமுதாய அக்கறையோடு பதிவு செய்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சமுதாய அக்கறையுள்ள படங்களை எடுக்கும்படி வேண்டுகிறேன்.

    30 ஆயிரம் மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு கல்வித்துறையில் சிறப்பாக சேவை புரியும் ஐசரி கணேசும் 3 சிறந்த வெற்றி படங்களை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு சினிமாத்துறைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கியிருக்கிறது. கோவா பட விழாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திரைப்பட துறையினரை இந்த அரசு மறக்காது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    முன்னதாக பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசு சார்பில் சர்வதேச திரைப்பட விழா விற்கு முன்பு 50 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சேர்ந்து 75 லட்சமாக வழங்கியுள்ளதாக கூறினார். முதல்வர் பல அதிசயங்களை நடத்தி காட்டுபவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

    முதல்வரிடம் விருது வாங்கிய பிரபலங்கள்

    விழாவில் ‘கோமாளி’ படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் உள்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், டைரக்டர் பிரபு உள்ளிட்டோருக்கும், ‘பப்பி’ படத்தில் நடித்த வருண், சம்யுக்த ஹெக்டே உள்ளிட்ட நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்அமைச்சர் விருதுகள் வழங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, காமராஜ், கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு. தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், டைரக்டர்கள் பாக்யராஜ், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார். ஆர்.வி.உதயகுமார், திருமலை, நடிகர்கள் ஜீவா, உதயா, சிவா, ஆர்.கே.சுரேஷ், நடிகை குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், டைரக்டர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் வரவேற்றார்.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.

    மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துண்ணனர். இந்த படத்தில் கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.  

    தம்பி படக்குழு

    இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி தம்பி படம் ரிலீசாக உள்ளது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் முன்னோட்டம்.
    வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.

    தம்பி

    மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துண்ணனர். இந்த படத்தில் கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
    ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ’த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
    ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும், த அயன் லேடி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார். 

    தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.

    ஜெயலலிதா, நித்யாமேனன்

    ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அதனால் ஜெயலலிதா சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவர் மாதிரியே நடிக்கவும் என்னை தயார் செய்து வருகிறேன். ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வேடத்தில் நடிக்க எனது 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”

    இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
    ×