என் மலர்tooltip icon

    சினிமா

    லிஜோமோல்
    X
    லிஜோமோல்

    சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது - லிஜோமோல்

    ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லிஜோமோல், சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார்.
    ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருப்பவர் லிஜோமோல். முதல் படத்திலேயே இவர் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’சினிமா பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போது தோழிகள் ஆடிஷனுக்காக கூப்பிட்டார்கள், சரி சும்மா போய் பார்க்கலாமே என்று போனேன். 

    உடனே செலக்டெட்ன்னு சொல்லிட்டாங்க. முதல் படமே பெரிய ஹீரோவோடதான் நடிச்சேன். அந்த படத்தை பார்த்துவிட்டு தான் தமிழில், "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்னைக்கு இரண்டு முறை ஆடிஷனுக்கு வந்தேன். சில சீன் நடித்தும் காண்பித்தேன். அக்கா கேரக்டர் என்றாலும், நல்ல ரோல் என்று சொன்னார்கள். 

    லிஜோமோல்

    ஒரு நாள் வரை முழு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்கள். பிறகு, "நீங்க ஊருக்கு போங்க. நாங்க கூப்பிடும் போது திரும்ப வந்தால் போதும்' என்று சொன்னார்கள். அதன் பிறகு ஒரு நாள் போன் வந்தது. "நாளை முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. நீங்க கிளம்பி வாங்க' என்றார்கள். இப்படித்தான் தமிழ் பட வாய்ப்பு எனக்கு வந்தது. 

    எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாததால் இயக்குநர் சசிசார் ஒவ்வொரு சீனையும் விளக்கி எப்படி முக பாவனை காட்ட வேண்டும் என்று சொல்லித் தருவார். அதை உள்வாங்கி அப்படியே நடித்தேன். தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன். இப்போதைக்கு வேறு எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இப்போ பிஎச்.டி தேர்வுக்கும் தயார் செய்து கொண்டு இருக்கிறேன். அதுக்காக சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று இல்லை. எனக்கான கதாபாத்திரம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்'' என்றார்.
    Next Story
    ×