என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘தலைவி’ படத்திற்கு ஜெ.தீபாவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இதனிடையே, தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாக்கப்’ படத்தின் முன்னோட்டம்.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் "லாக்கப்". இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
சாமியார் நித்யானந்தாவை நேரில் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அதுகுறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவை சின்மயியும், அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த புகைப்படம் உண்மையில்லை என்றும் அது மார்பிங் செய்யப்பட்டது என கூறிய சின்மயி, அது போலி என்பதற்கான ஆதாரத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதையெல்லாம் சும்மா செய்கிறார்களா? அல்லது யாராவது பணம் கொடுத்து செய்ய சொல்கிறார்களா? என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
I dont why these fans are doing this all over again after I have established that this photo is fake.
— Chinmayi Sripaada (@Chinmayi) November 25, 2019
Are they doing this for free or is this paid? https://t.co/pHirTu6500pic.twitter.com/j4GhpRCHGr
அயோத்தி ராமர் கோயில் வழக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை கங்கனா ரனாவத் தயாரிக்கிறார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
முதல் படத்துக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.
இந்த படம் பற்றி கங்கனா கூறியதாவது:- பல நூறு வருடங்களாக ராமர் கோயில் பற்றிப் பேசி வருகின்றனர். 80களில் பிறந்த ஒரு குழந்தையாக, தொடர்ந்து அயோத்தியா என்ற பெயரை நான் எதிர்மறையான தன்மையில் தான் கேட்டு வருகிறேன். ஒரு அரசன் பிறந்த ஒரு நிலப்பகுதி. அவன் தியாகங்களின் மறுவடிவமாக இருந்தவன். சொத்து பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

இந்த வழக்கு இந்திய அரசியலின் அடையாளத்தை மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பு பல நூறு வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதே நேரத்தில் இந்தியாவின் சமத்துவ ஆன்மாவையும் காத்துள்ளது. ‘அபாரஜிதா அயோத்தியா’ படம், நாயகன் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதில் இருந்து கடவுள் நம்பிக்கை பெறுகிறான் என்ற பயணமே. ஒரு வகையில் இது என் தனிப்பட்ட பயணத்தின் பிரதிபலிப்பும் கூட. எனது முதல் தயாரிப்புக்கு இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன் அடுத்ததாக இயக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இதுவரை முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த கவுதம் மேனன், இப்படத்திற்கு தர்புகா சிவா எனும் இளம் இசையமைப்பாளரை இசையமைக்க வைத்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தான் அடுத்ததாக இயக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கும் தர்புகா சிவாவையே இசையமைக்க வைத்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். பப்பி படத்தில் நடித்த வருண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியன்-2 படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. சேனாதிபதியாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஊழல்வாதிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கமல்ஹாசன் காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதனிடையே, சமீபத்தில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, ஏற்கனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்த நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார். இந்தியன் 2-வில் நான் நடிக்க உள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவேன் என கூறியுள்ளார்.
தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சிப்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். விமர்சனம் செய்பவர்களை விட்டு நாம் ஓடிப்போய்விட முடியாது. எந்த மாதிரி விமர்சனமாக இருந்தாலும் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை விமர்சிக்கிறவர்கள் ஏதோ ஒரு பிரச்சினையால் வேதனைப்படுகிறார்கள் என்பது எனது கருத்து.
விமர்சிப்பவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் கோபம் இருந்திருக்க வேண்டும். இல்லையானால் அவர்கள் வாழ்க்கை மீது அவர்களுக்கே வெறுப்போ அல்லது கஷ்டமோ இருந்திருக்கும். அந்த கோபங்களை சமூக வலைத்தளத்தில் செய்யும் விமர்சனங்கள் மூலமாக அவர்கள் தீர்த்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் விஷயத்தில் நாம் ஒன்றுதான் செய்ய முடியும் அது என்னவென்றால் அவர்களை பார்த்து பரிதாபப்பட வேண்டும். அது மட்டுமன்றி அவர்கள் நல்லபடியாக நலமாக வேண்டும் என்று அவர்களுக்காக பிரார்த்தனை கூட நான் செய்வது உண்டு. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வேண்டும் என்று எழுதியும் அனுப்புவேன். அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும். தமிழ், தெலுங்கு படங்களில் எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.”
இவ்வாறு அதிதி ராவ் கூறினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ், இவர் நடித்துள்ள 2 படங்கள் வருகிற நவம்பர் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

2 வருடத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது. தற்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இப்படம் வருகிற 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதே தினத்தில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான பக்கிரி, சீனாவில் வெளியாக உள்ளது. சுமார் 13 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடல் எழுதுவது, இசையமைப்பது, நடனம் ஆடுவது என பன்முக திறமை கொண்ட புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இதற்கான உரிமையை போஹெமிய ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் வாங்கி இருக்கிறார்.

படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார். கிளாடியேட்டர், ஹூஹோ ஆகிய படங்களுக்கு கதை எழுதிய ஜான் லோகன், மைக்கேல் ஜாக்சன் படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.
தெலுங்கு பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி வீட்டில், மிகவும் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் பார்ட்டி கொண்டாடியுள்ளார்கள்.
1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 10-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர். இந்த ஆண்டு தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

அனைவரும் கோல்ட் அண்ட் பிளாக் நிற உடையணிந்து இந்த ஆண்டு இவர்களது கொண்டாட்டங்கள் நடந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜூனா, பாக்யராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெராப், வெங்கடேஷ், சுரேஷ், பிரபு, ஜெயராம், ரகுமான், ஜெகபதி பாபு உள்ளிட்ட நடிகர்களும், குஷ்பு, அம்பிகா, ராதா, லிசி, ராதிகா, ஷோபனா, நதியா, சரிகா, அமலா, பூர்ணிமா பாக்யராஜ், ஜெயப்பிரதா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளும் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா, தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்பார்ப்பும் கிளம்பியது. இவர் கவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்தார்கள். தற்போது மீண்டும் புடவையில் வயிறு தெரியும் புகைப்படத்தை வெளியிட்டு அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார்.
தமிழில் முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் ஹிப்ஹாப் ஆதி, கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்கிறார்.
முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய இசையில் சமீபத்தில் ஆக்ஷன் திரைப்படம் வெளியானது. சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார்.
இவருடைய இசையில் சூப்பர் சிங்க ஜூனியர் புகழ் பூவையார் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பூவையாரின் பாடலை கேட்ட ஆதி, தன்னுடைய இசையில் ஒரு பாடலை பாட வைப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.
Big fan of this little guy here ❤️ I promised him, i’ll make a single with him & its done 😊 pic.twitter.com/UJhxTk43Ro
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 23, 2019
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் பாடலில் பூவையார் சிறு வரிகளை பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






