search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Jackson"

    • வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
    • இவர் பாடல் எழுதுவது, இசையமைப்பது, நடனமாடுவது என பன்முக திறமை கொண்டவர்.

    புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

    மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

     

    மைக்கேல் ஜாக்சன்

    மைக்கேல் ஜாக்சன்


    மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை படமாக்க ஒரு வருடமாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தை போஹெமியன் ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை படத்தில் பயன்படுத்தவும் அனுமதி பெற்றுள்ளார்.


    ஜாபர் ஜாக்சன் - மைக்கேல் ஜாக்சன்

    ஜாபர் ஜாக்சன் - மைக்கேல் ஜாக்சன்

    இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாபர் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் கிரஹாம் கிங் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, "ஜாபரை 2 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை யதார்த்தமாக வெளிப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஜாபரை தேர்வு செய்தோம்'' என்றார்.

    • வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
    • இவர் பாடல் எழுதுவது, இசையமைப்பது, நடனமாடுவது என பன்முக திறமை கொண்டவர்.

    புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன். வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

    மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார். 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


    மைக்கேல் ஜாக்சன்

    இதையடுத்து மைக்கேல் ஜாக்சன் பாடிய பாடல்கள் என 2010-ல் வெளியான பிரேக்கிங் நியூஸ், மான்ஸ்டர் மற்றும் கீப் யுவர் ஹெட் அப் ஆகிய பாடல்களை சோனி மற்றும் பாப் நட்சத்திரத்தின் எஸ்டேட் தங்கள் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

    இந்த பாடல்கள் மைக்கேல் ஜாக்சன் மறைந்து ஒரு வருடத்திற்கு பின்னர் வெளியிடப்பட்டதால் இந்த பாடல்கள் அவர் பாடியது தானா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மேலும் சில ரசிகர்கள் நீண்ட காலமாக இந்த பாடல்கள் ஜேசன் மலாச்சி என்ற அமெரிக்க பாடகருக்கு சொந்தமானது என்று வாதிட்டு வந்தனர்.

    ஆனால் சோனி இதனை மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நம்பகத்தன்மை குறித்த கேள்வி மற்றும் சர்ச்சையால் இந்த பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல்கள் தொடர்புடைய உரையாடலை கடந்து செல்வதற்கான எளிய மற்றும் சிறந்த வழி அதனை நீக்குவது தான் என ரெகார்ட் கம்பெனி மற்றும் ஜாக்சன்ஸ் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாப் பாடல் உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. #MichaelJackson #ParisJackson
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    பாப் பாடல் உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் (வயது 20) என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என 2 மகன்களும் உள்ளனர்.

    மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    ‘லீவிங் நெவர்லேண்ட்’ என்கிற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவலை பரப்பியவர்கள் ‘பொய்யர்கள்’ என அவர் சாடியுள்ளார். #MichaelJackson #ParisJackson
    பிரபல பாப் இசையின் மன்னர் மைக்கெல் ஜாக்சனின் தந்தை, ஜோசப் ஜாக்சன் நேற்று மரணமடைந்தார். #JoeJackson #MichaelJackson

    வாஷிங்டன்:

    பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார்.

    அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89) லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.



    இந்நிலையில், அவர் நேற்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவலை ஜாக்சன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிசெய்துள்ளார். #JoeJackson #MichaelJackson
    ×