என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம் தலைவி. தாம் தூம் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய அவர் நடிக்கும் தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகும்.
இந்த படத்தில் கங்கனா அப்படியே முழுவதும் ஜெயலலிதாவாக மாறியுள்ளார். இதற்காக பரதம் கற்றுக்கொண்டார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 26 -ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டருடன் சின்ன டீசரும் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் ஜெயலலிதா போலவே மாறியுள்ள கங்கனா தனது இரட்டை விரல்களை காட்டியவாறு உள்ளார். இந்த போஸ்டர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

போஸ்டரில் இடம் பெற்றுள்ள கங்கனா ரணாவத்தின் தோற்றம் ஜெயலலிதாவை போல இல்லை என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இணையத்தில் இந்தத் தோற்றம் பார்ப்பதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போல இருப்பதாகவும் நடிகை விந்தியா போல இருப்பதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போல் இருப்பதாகவும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிப்பதற்கு எதிர்ப்பும் நிலவுகிறது. அவரது முகம் ஜெயலலிதாவை போல் இல்லை என்று கூறுகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்தில் நடித்திருக்கும் ஜெய், படப்பிடிப்புக்கு லேட்டாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, என அனைத்து மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திர சேகர். தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ரகுமான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன், போன்ற பலரையும் திரையுலகில் பிரபலப்படுத்தியவர். இவர் இயக்கும் 70 வது படம் “கேப்மாரி”.
இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஜெய் நடிக்கும் 25வது படமாகும். இவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி நடிக்க சத்யன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார், லிவிங்ஸ்டன், சித்தார்த் விபின் (இசை அமைப்பாளர்) நடிக்கிறார்கள்.

வரும் டிசம்பர் 6-ந்தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து ஜெய் பேசியதாவது:- இந்த படத்தின் கதை கேட்டபோது என் வாழ்க்கையையே பார்ப்பது போல் இருந்தது. படத்திலும் பல காட்சிகளில் என்னை இணைத்து கொண்டேன். நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக செய்தி தொடர்ந்து வருகிறது. கடந்த 7,8 ஆண்டுகளாக சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு சென்று வருகிறேன்.
என்றாவது ஒரு நாள் நடந்ததை பற்றி தான் இன்னும் எழுதுகிறார்கள். படத்தில் நான் பெண்களிடம் அடங்குவது போன்ற வேடங்களில் அதிகம் நடிப்பதாக சொல்கிறார்கள். பெண்களிடம் நாம் அடங்கிப் போவது தவறு இல்லை. பெண்களைத்தான் நாம் அடக்கக்கூடாது. இரண்டு கதாநாயகிகளில் யார் எனக்கு வசதியாக இருந்தார் என்றால் இருவருமே வசதியாகத்தான் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் எனக்கு மிகவும் வசதியாக இருந்தார். இவ்வாறு ஜெய் பேசினார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
''100'' திரைப்படத்திற்குப் பிறகு அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தொடங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசாவிடம் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் போன் நம்பர் கேட்டு வருகிறார்கள்.
விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த 'நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ’பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபட்டவர்.
இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் என்னுடைய லேன்ட்லைன் நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று போனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
Call me on my landline 📞 pic.twitter.com/c3OtCYQUx2
— Raiza Wilson (@raizawilson) November 23, 2019
இதைப்பார்த்த ரசிகர்கள், உங்களுடைய போன் நம்பர் கொடுங்கள், நாங்கள் போன் செய்கிறோம் என்று பலரும் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி என்று கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
13 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன். நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு தரும் ஆதரவும் தான் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன் நடிக்க தயாராக உள்ளீர்களா? என்ற கேள்விக்கு, ‘அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள். ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
ரஜினி நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பாட்ஷா படம், அவரது பிறந்தநாளான டிச.11-ந் தேதி ரீ-ரிலீசாக உள்ளது.
ரஜினிகாந்தின் தர்பார் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது வெளியான தகவல் அவர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 1995 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ’பாட்ஷா’. இந்த படம் சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12 ந் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வினையாற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை என கூறியுள்ளார்.
தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘சினிமாவில் டிஸ்டிப்யூட்டராக வந்து தயாரிப்பாளராக மாறி, இயக்குநர் பாலா மூலம் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். படத்தின் தயாரிப்பாளர் அனிதா மேடத்திற்காகவே நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அலெக்ஸ் மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப்போகிறார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்துவிடுவார் என்று முடிவு செய்துவிட்டேன். மனோஜ் திறமையான கேமராமேன். அவர் தல அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஹீரோயின் சனம்ஷெட்டி பப்ளி கேர்ள். இந்தப்படத்தில் புதிதாக ஒரு விசயத்தை அலெக்ஸ் கையாண்டிருக்கிறார். முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை. முத்தம் அன்பின் வெளிப்பாடு, அதுபோன்ற காட்சிகளை தவறு என்று சொல்லக் கூடாது.
நிச்சயம் படம் பெரிதாக பேசப்படும். நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் சிக்கலில் உள்ளது வருத்தமடைய செய்கிறது. எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் என்று விஷாலிடம் கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. படங்கள் எடுப்பவர்கள் கவனித்து எடுங்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கங்கள் சரியாக இயங்கினால்தான் திரைத்துறை நன்றாக இருக்க முடியும்" என்றார்.
ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர், தனக்கு நடிகர் சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவாண், பரதேசி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தன்ஷிகா. கடந்த வருடம் வெளியான காலக்கூத்து படத்தினை தொடர்ந்து தற்போது கிட்னா, யோகிடா, இருட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். கபாலி படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டி ஒன்றில் தன்ஷிகா கூறியதை கேட்டு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அந்த பேட்டியில் தன்ஷிகா நடிகர் சிம்பு மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு வரவேண்டிய கணவர் நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரபல நடிகை ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார்.
இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர்.

அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கங்கனா ரணாவத் பிரத்யேக பயிற்சி எடுத்து தலைவி படத்தில் நடித்து வருகிறார்.
#thalaivi first look teaser ... #kangnaranaut#alvijay#vibri#karma#tserieshttps://t.co/ib8Z4nczn5
— G.V.Prakash Kumar (@gvprakash) November 23, 2019
இந்நிலையில், தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதேபோல் படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 2020-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விப்ரி நிறுவனம் தலைவி படத்தை தயாரிக்கிறது.
எல்.கே.ஜி., கோமாளி, பப்பி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம், இதற்காக வெற்றிவிழா கொண்டாட உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக திகழ்பவர் டாக்டர். ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கே.கணேஷ் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் மகன் ஆவார். தந்தை வழியில் சிறுவயதில் இருந்தே நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
கல்லூரி படிக்கும் காலத்திலேயே தந்தையின் நிறுவனம் சார்பில் 2 படங்களை தயாரித்துள்ளார். பின்னர் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எல்.கே.ஜி. படத்தை தயாரித்து வெளியிட்டார்.
இந்த படத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை, வசனம் எழுதி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். அரசியல் கதையம்சம் கொண்ட எல்.கே.ஜி. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவிந்தது. அதன்பிறகு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வசூல் குவித்து வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து வருண் கதாநாயகனாக நடித்த பப்பி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படமும் வெற்றி பெற்றது.
இந்த 3 படங்களின் வெற்றி விழாவையும், அவற்றில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியையும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் நடத்த உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை (24-ந்தேதி) மாலை 6 மணிக்கு இந்த விழா நடக்க உள்ளது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 3 படங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை தொடர்பான விழா என்பதால் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து வேல்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது:- எல்.கே.ஜி. படத்தில் தமிழ் நாட்டின் முக்கிய அடையாளங்களை காட்டி ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இடம்பெற்றது. அந்த பாடல் இங்கே முதல் நிகழ்வாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. அடுத்து வேல்ஸ் பிலிம் இண்டெர்னேஷனல் நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் புரடியூசர் அஷ்வின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
இதில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிறுவனம் அடுத்தடுத்து 3 வெற்றி படங்களை கொடுத்தது பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட உள்ளது. பின்னர் நடன இயக்குனர் ஸ்ரீதரின் நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. முதல் அமைச்சர், அமைச்சர்கள், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.
இதையடுத்து ஐசரி கணேஷ் முதல்-அமைச்சருக்கு மரியாதை செய்து வரவேற்கிறார். அத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி பயணம் பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பப்பட இருக்கிறது. பின்னர் வெற்றி பெற்ற 3 படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் சிறப்பு விருதுகளை வழங்குகிறார்.
அதன் பின்னர் ஐசரி கணேஷ் முதல்-அமைச்சரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். தமிழ் திரைப்பட துறைக்கு பெரும் ஆதரவாக இருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கவுரவிக்கப்பட உள்ளார்.
அடுத்து முன்னணி இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான சித் ஸ்ரீராம், இசையமைப்பாளரும் இயக்குனருமான டர்புகா சிவா மூவரும் இணைந்து 30 நிமிடங்களுக்கு இசை கச்சேரி நடத்த உள்ளனர். இறுதியாக வேல்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவன தயாரிப்பில் அடுத்து வர இருக்கும் படங்களான எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, சுமோ, ஜோஷ் வா, மூக்குத்தி அம்மன் ஆகிய 5 படங்களில் இருந்து சிறப்பு காட்சிகள், வீடியோக்கள், போஸ்டர்கள் வெளியிடப்பட உள்ளன.
குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு கவுதம் மேனன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகி இருக்கும் ஜோஷ்வா படத்தில் இருந்து எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள் ஒளிபரப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விவேக், வடிவேலு, ஆர்ஜே.பாலாஜி, காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, இமான் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள், பழம்பெரும் நடிகர்-நடிகைகள் உள்பட 100-க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்-அமைச்சருடன் முக்கிய அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு வேல்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். படத்தின் கதை மற்றும் விஜய் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவரது இளமையான தோற்றம் கசிந்த பிறகு மாணவராக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது.

கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது படத்துக்கு தலைப்பு தேர்வு நடந்து வருகிறது. டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் சென்னை திரும்பியதும் ஜனவரி 1-ந்தேதி தலைப்பையும் படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு ‘சம்பவம்’ அல்லது ‘டாக்டர்’ என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகின்றன. மாணவி அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.






