என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    தினேஷ், ஆனந்தி

    நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறுகிறார்.
    குற்றம் 23 படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘குற்றம் 23’. சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.

    ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது. சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கலந்து உருவாக்க இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். 

    ரெஜினா

    இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் குயின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது. இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.

    மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.



    சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரனாவத் தோன்றும் காட்சிகள் வெளியாகின. ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அவரை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். 

    எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. 26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவம், திரை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம் பெற்றது. தற்போது இதன் டிரைலரை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 14ம் தேதி குயின் வெப் சீரிஸ் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    பீட்சா, சேதுபதி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா நம்பீசன், புதியதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
    பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். பெரிய நடிகர்களுடன் தான் நடிப்பேன், பெரிய படத்தில் தான் நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரம் என்று தோன்றினால் நடிப்பார். 

    ரம்யா நம்பீசன்

    தற்போது இவர் படங்களை தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ளார். புதிதாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். அதில், பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல விஷயங்கள் குறித்து பதிவிட உள்ளாராம். இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
    தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்ருதிஹாசன், நடிப்புக்கும் இசைக்கும் இடையில் தவித்து வருகிறார்.
    கமல்ஹாசனை போலவே அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பன்முக திறமை கொண்டவர். நடிப்பு தவிர, பின்னணி பாடகி, இசை அமைப்பாளர், டப்பிங் கலைஞர், மேற்கத்திய மேடை பாடகி என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனக்கென ஒரு இசைக் குழுவும் நடத்தி வருகிறார். 

    இதனால் நடிப்பில் அவரால் முழு கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் நடிப்பிலிருந்து விலகியிருந்த ஸ்ருதி சமீபத்தில்தான் விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

    ஸ்ருதிஹாசன்

    இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தது. சமீபத்தில் லண்டனுக்கு தனது இசைக்குழுவுடன் புறப்பட்ட ஸ்ருதி அங்கு இசை நிகழ்ச்சி நடத்தியதுடன் பாப் பாடகியாக மாறி மேற்கத்திய பாடல்கள் பாடினார். அங்கு இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இந்தியா திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து என்று ஒரு சிலர் ஸ்ருதிக்கு அறிவுரை செய்தாலும் இசையிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ள முடியாமல் நடிப்பும், இசைக்கும் இடையில் தவித்து வருகிறார். 
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    'செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க தயாராகி வருகிறார் மணிரத்னம். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. 

    இந்த படத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளதை தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். அதற்கு பிறகு தனது 'ஒத்த செருப்பு' பட பணிகளில் தீவிரமானார். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் - பார்த்திபன்

    இது தொடர்பாக விசாரித்தபோது, 'ஒத்த செருப்பு' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதல்கட்ட பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பும் இருக்கிறது. இதன் இரண்டுக்கும் இடையே 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக தேதிகளை ஒதுக்கி நடிக்க பார்த்திபனால் முடியாமல் போனது. 

    மேலும், படம் 2 பாகங்களாக உருவாக உள்ளதால் தொடர்ச்சியாக 6 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அவ்வளவு தேதிகள் ஒதுக்கவும் பார்த்திபனால் முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
    ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ரஜினி, கமல் இருவருமே அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

    அடுத்தகட்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. வரும் 7 - ந்தேதி சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி - கமல் இருவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதனிடையே சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்

    இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போதே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னே‌ஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளியாகலாம்.
    அனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’.  இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

    தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

    திருநங்கைகளுடன் அனிருத், விவேக்

    இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு திருநங்கைகள் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இவர்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    யுவராஜ் இயக்கத்தில் ரக்‌ஷன், ரித்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கடலில் கட்டுமரமாய்’ படத்தின் முன்னோட்டம்.
    விவசாயிகளையும் அவர்களது தற்போதைய நிலையையும் மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ’கடலில் கட்டுமரமாய்’.  யுவராஜ் முனிஷ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை முனுசாமி தயாரித்துள்ளார். கதாநாயகனாக ரக்‌ஷன், கதாநாயகியாக ரித்திகா நடித்துள்ளனர். தயாரிப்பாளர் முனுசாமி பேசும்போது, இப்படம் வரலாறு படைக்கும் திரைப்படமாக இருக்கும்.  

    கடலில் கட்டுமரமாய் படக்குழு

    இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு மிகவும் குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுவதும் படத்தில் இருக்கிறது’ என்றார்.
    ஆசிட் வீசி எரித்து விடுவேன் என காதலன் தன்னை மிரட்டுவதாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார். 

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

    அஞ்சலி அமீர்

    தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.

    தனுஷ்

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் சிங்கிள் டிராக்கான “சில் புரோ” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள டி40 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது பட்டாஸ் படப்பிடிப்பையும் தனுஷ் முடித்துள்ளார். இவர் அடுத்ததாக வெற்றிமாறனின் வடசென்னை 2, பரியேறும் பெருமாள் பட புகழ் மாரி செல்வராஜ், ராட்சசன் பட புகழ் ராம்குமார் ஆகியோரது படங்களிலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ’தலைவி’ படத்தில் சசிகலா வேடத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கங்கனா ரணாவத் பிரத்யேக பயிற்சி எடுத்து தலைவி படத்தில் நடித்து வருகிறார். 

    பிரியாமணி, சசிகலா

    சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்றது. கங்கனாவின் தோற்றம் ஜெயலலிதா போல் இல்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகை பிரியாமணி சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
    ×