என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு நடிப்பில் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 50/50 படத்தின் விமர்சனம்.
    ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மூன்று பேரும் அண்ணன், தம்பிகள். இவர்கள் கும்பகோணம் பகுதியில் தாதாவாக இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் போலீஸ்காரரை அடித்து நொறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் போலீஸ்காரர் அவர்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

    சென்னையில் நல்லவர்கள் என்று பெயர் எடுத்து திருட்டு தொழில் செய்து வரும் சேது மற்றும் அவரது நண்பர்கள் ஒருநாள் போலீசிடம் சிக்குகிறார்கள். இவர்களை வைத்து ஜான் விஜய் சகோதரர்கள் வீட்டில் இருக்கும் பணத்தை திருட சொல்கிறார் போலீஸ்காரர்.

    பணத்தை கொள்ளையடிக்கும் சேது மற்றும் நண்பர்கள் ஒரு பேய் பங்களாவில் தஞ்சமடைகிறார்கள். இவர்களை தேடி ஜான் விஜய் சகோதரர்களும் அங்கு வருகிறார்கள். 

    50-50 விமர்சனம்

    இறுதியில் பேய் பங்களாவில் இருக்கும் சேது மற்றும் நண்பர்கள், ஜான் விஜய் மற்றும் சகோதரர்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அங்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சேது தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் வரும் நண்பர்களும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

    50-50 விமர்சனம்

    வழக்கமான பேய் படங்களுக்கு உரிய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சாய். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து சரியாக வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். படத்தில் காமெடி செய்து அனைவரும் சிரிக்கிறார்கள். ஆனால், பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வரவில்லை.

    தரண் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரதாப்பின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘50/50’... 25.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். 



    விஜய் இதில் கல்லூரி பேராசிரியராகவும், மாணவராகவும் நடிக்க கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் நட்சத்திரா, புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    வி.பி.டேனியல் இயக்கத்தில், ஆனந்த் நாக், நட்சத்திரா நாகேஷ் ஜோடியாக நடிக்கும் படம், வணிகன். படம் குறித்து, நட்சத்திரா நாகேஷ் கூறுகையில், ‘’டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் நான், இப்படம் மூலம், பெரிய திரையில் அறிமுகம் ஆகிறேன்.

    நட்சத்திரா

    ‘திரில்லர்’ படம் என்றாலும், காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார். செந்தில் விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.

    சென்னையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை வடமாநிலததில் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. படக்குழு கமலுக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், எப்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமல் இருந்தது.

    கமல்

    இதுகுறித்து விசாரித்த போது, பாபி சிம்ஹா, விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் ‌ஷங்கர். இதன் படப்பிடிப்பில் பிப்ரவரியிலிருந்து கமல் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். கமல் இல்லாவிட்டாலும், அவர் இல்லாத காட்சிகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ‌ஷங்கர்.

    கமல், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக, சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகி வருகிறது. அங்கு ஜனவரியில் கமல் இல்லாமல் காஜல் அகர்வாலை வைத்து சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் ‌ஷங்கர். இந்த அரங்கில் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் இளமையாகத் தோன்றவுள்ள காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடி அவரை நெகிழ வைத்திருக்கிறார்.
    விஜய் தனது 64வது படமாக கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 64 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக விஜய்சேதுபதி அங்கு சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

    விஜய்சேதுபதி

    விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று விஜய் சேதுபதியின் கையால் கேக் ஊட்டி விட வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி அந்த இளைஞனை கேக் வெட்ட சொல்லி அதனை அவருக்கு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கால் டாக்ஸி’ படத்தின் முன்னோட்டம்.
    கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.

    இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

    தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
    காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

    சாக்‌ஷி அகர்வால்

    இந்நிலையில், கோவாவில் விடுமுறையை கொண்டாடிவரும் சாக்‌ஷி அகர்வால், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் ஓவியாவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். இவர் நடிப்பில் தற்போது ‘ராஜபீமா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். 

    இப்படத்தில் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஓவியா இப்படத்தில் ஏற்கனவே இணைந்து ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த்தும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

    யாஷிகா ஆனந்த்

    ஜர்னலிஸ்டாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்தின் கதாபாத்திரம் படத்திற்கு திருப்பு முனையாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். 
    அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருக்கிறார்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 

    சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான கவுதம் மேனன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    கவுதம் மேனன் - விஷ்ணு விஷால்

    சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். 
    மும்பை பாந்திராவில் இந்திப்பட நடிகர் குஷால் பஞ்சாபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மும்பை பாந்திராவில் செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள அல்ஸ்டிக் கட்டிடத்தில் வசித்து வந்தவர் குஷால் பஞ்சாபி(வயது42). இந்திப்பட நடிகரான இவர், ‘லக்சயா’, ‘கால்’, ‘சலாமியே இஸ்க்’ உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால் குஷால் பஞ்சாபி போனை எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மகனின் வீட்டுக்கு பெற்றோர் சென்று பார்த்தனர்.

    அப்போது, குஷால் பஞ்சாபி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குஷால் பஞ்சாபி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் கைப்பட எழுதி வைத்திருந்த 1½ பக்க கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என கூறப்பட்டு இருந்தது. மேலும் தனது சொத்துகளை பெற்றோர், மகன், சகோதரி ஆகியோர் பிரித்து கொள்ளும்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    குஷால் பஞ்சாபி தனது மனைவி ஆட்ரே டோல்கனுடன் இருக்கும் படம்.

    தற்கொலை செய்து கொண்ட குஷால் பஞ்சாபிக்கு மனைவி ஆட்ரே டோல்கன், மகன் கியான் ஆகியோர் உள்ளனர். மனைவி அவரை பிரிந்து வெளிநாட்டில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவரது பராமரிப்பில் மகன் கியான் உள்ளார்.

    நடிகர் குஷால் பஞ்சாபியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஷால் பஞ்சாபியின் மறைவுக்கு இந்தி திரையுலக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இயக்குனர் இமயம் என்று பெயர் பெற்ற பாரதிராஜாவின் கனவுப் படைப்பான 'குற்றப் பரம்பரை' படத்தை சிம்பு பட தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயர் பெற்றவர் பாரதிராஜா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் தாத்தாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    இந்நிலையில் பாரதிராஜாவின் கனவுப் படைப்பான 'குற்றப் பரம்பரை' என்ற படம் தற்போது வலை தொடராக (Web Series) வெளிவரவிருக்கிறது. இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    பாரதிராஜா

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமீபத்தில் வெளியான ‘மிகமிக அவசரம்’ படத்தை இயக்கியவர். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன், தற்போது எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
    அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

    நித்யா மேனன்

    படங்களில் கவர்ச்சிக்கு தடைபோட்டு விட்டு அட்டைப்படத்திற்கு அவர் கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    ×