என் மலர்
சினிமா செய்திகள்
டகால்டி படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சந்தானம் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகியுள்ளது. சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘ஏ1’. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த கூட்டணி புதிய படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் சந்தானம் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார்.
அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் அறிமுகமான ஜோதிகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தவர், கடந்த 2015 முதல் மீண்டும் நடித்து வருகிறார்.
தற்போது பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலை கட்டி பங்கேற்ற ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.
விருது விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா...#Jyotika@Suriya_offlpic.twitter.com/kd5f2ivmeM
— Satthi Eshwar (@SatthiEshwar) March 16, 2020
இந்த வீடியோவை சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், அடுத்த படத்தில் போராளியாக நடிக்க இருக்கிறார்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் நடிப்பில் தற்போது ‘புரவி’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இருக்கிறது. பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.ஜே.சத்யா இயக்கும் இப்படம், அதிரடி, அரசியல், திரில்லர் கதையாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் சாக்ஷி அகர்வால் போராளியாக நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சாக்ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பி.முகம்மது ஆதிப் இசையமைக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் இடத்தை பிரபல நடிகை காஜல் அகர்வால் பிடிக்க இருக்கிறார்.
சிரஞ்சீவி தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து விலகினார் திரிஷா. கதையில் ஏற்கனவே சொன்ன தனது கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களை செய்ததால் தான் இதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் திரிஷா.

இது திரிஷா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிரஞ்சீவியின் 150வது படமான கைதியில் காஜல் தான் கதாநாயகியாக நடித்தார்.
கொரோனா பீதியால் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் மற்றும் பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மும்பையில் கூடி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைதள தொடர் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் கூறியதாவது:- கொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் பல்லு படாம பாத்துக்க படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜாம்பி கதைகளத்த்தை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.
நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள திகில் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அடுத்ததாக திகில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நயன்தாராவின் ‘மாயா’, டாப்சியின் ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது உருவாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு பின் பிரசாந்த், சமந்தா படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவுங்கட்ட மட்டும் ஜாக்கிரதையா இருங்க என கூறினார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: விஜய் சார் மீது எனக்கு இருக்கிற காதல் அவருக்கு நான் கொடுத்த முத்தத்திலேயே அவருக்கு தெரியும். மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதத்தை சொல்லி மனிதர்களை பிரிக்கிறார்கள். கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவில் எந்த மதமும் கிடையாது.

தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதர் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம். விஜய குருநாத சேதுபதி காளிமுத்து இது தான் எங்க அப்பா வைத்த பெயர். வாழ்க்கைல எப்பவுமே என் அப்பா தான் மாஸ்டர். சினிமாவுல நான் சந்திக்கிற அத்தனை மனிதர்களுமே மாஸ்டர் தான்’.
இவ்வாறு அவர் பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்து அனிருத் பேசியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்திய அனிருத், மாஸ்டர் இசை ஆல்பம் குறித்த சீக்ரெட்டையும் வெளியிட்டார்.

மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருப்பதாக அனிருத் கூறினார். மீதமுள்ள நான்கு பாடல்களில் முதல் இரண்டு பாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும், மற்ற 2 பாடல்கள் படத்தில் சர்ப்ரைஸாக வரும் என்றும் அனிருத் கூறியுள்ளார்.
கன்னி மாடம் போஸ் வெங்கட் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சாதி மற்றும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூவ் ஆன் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் உரியடி பட இயக்குனர் விஜயகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தோடு இப்படம் உருவாக உள்ளது.
அரசு உத்தரவு வந்ததும் சினிமா திரையரங்குகள் மூடப்படும் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் சில மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- அரசு உத்தரவு இன்னும் எங்களுடைய கைக்கு வரவில்லை. அரசு உத்தரவு கிடைக்க பெற்றதும், சினிமா தியேட்டர் மூடப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வழக்கம்போல் படங்கள் திரையிடப்பட்டன. எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்படும். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நேற்று ரசிகர்களுடனான சந்திப்பை தவிர்த்தார்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 1969-ல் ‘சாட்ஹிந்துஸ்தானி’ படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பல தேசிய விருதுகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அமிதாப்பச்சனுக்கு இப்போது 77 வயது ஆகிறது.

இந்திப்பட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் அமிதாப்பச்சன், கடந்த 37 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மும்பை ஜூகுவில் உள்ள தனது ஜல்சா பங்களாவில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நேற்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் அவர் இது குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி, ரசிகர்கள் வீட்டின் முன் திரளவேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.






