search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரவி"

    • தேவகோட்டை அருகே புரவி எடுப்பு விழாவையொட்டி மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
    • சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் 1979-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி அன்று நடை பெற்ற புரவி எடுப்பு விழா வில் உயிர்நீத்த 5 பேரின் நினைவாக சின்னஉஞ்சனை கிராமத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து 44-வது ஐவர் தினம் நாளை (28-ந்தேதி) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் சின்னஉஞ்சனை கிராமத்தில் அனுசரிக்கப்பட உள்ளது.

    இதைெயாட்டி பால்குடம் மற்றும் பூத்தட்டு நிகழ்ச்சி சின்னஉஞ்சனை கிராமத்தில் நடைபெற உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு நாளை (28-ந்தேதி) ஒருநாள் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடை கள் 7501 (ஆராவயல்), 7521 (உஞ்சனை) மற்றும் 7603 (நரசிம்மபுரம்) ஆகிய 3 மட்டும் மூடப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • அரளிகோட்டையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிகோட்டை கிராமத்தில் கோசியப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடந்தது.

    திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் முழங்க மண் குதிரைகளை சுமந்து வந்து கோவில் முன்பாக கொண்டு வந்து சேர்த்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மந்தை எனப்படும் சவுக்கையில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தனது பிறந்த ஊர் என்பதால் விழா தொடக்கத்தில் இருந்து பொதுமக்களோடு மக்களாக இணைந்து திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அரளி கோட்டை கிராமத்தார்கள் மற்றும் கோசியப்ப இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • மானாமதுரை அருகே புரவி எடுப்பு விழா நடந்தது.
    • கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் காவேரி அய்யனார், சமயகருப்பண சுவாமிகோவில் புரவி எடுப்பு திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். தஞ்சாக்கூர், ஆலடிநத்தம், முகவூர், புலவர்சேரி ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை கொண்டாடுவார்கள்.

    இந்த கோவில் ஆலடிநத்தம், தஞ்சாக்கூர் மற்றும் முகவூர் கிராமத்திற்கு பாத்தியப்பட்டது ஆகும். இங்கு கடந்த 12 வருடங்களாக பல்வேறு காரணங்களால் இந்த திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது.

    12 வருடத்திற்கு பிறகு இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆலடிநத்தம் கிராமத்தைச்‌ சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு குதிரை எடுப்பு திருவிழா நடத்தினால் அவர் மனம் குளிர்ந்து மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. வேளார் தெருவில் இருந்து 24 குதிரைகளை திருமணம் ஆகாத இளைஞர்கள் திருமணம் நடைபெற நேர்த்திகடனாக சுமந்து ஊரை வலம் வந்து அய்யனாருக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடனாக கொடுத்தனர்.

    இதேேபால் பெண்களும் பொம்மைகளை சுமந்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

    இதையொட்டி மானாமதுரை வைகைஆற்று கரையில் குதிரை பொம்மைகள், சுவாமி சிலைகள் மற்றும் பல்வேறு தெய்வங்கள் உள்ளிட்ட பொம்மைகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன. விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புரவி எடுப்பதற்காக கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்தனர். தயார் நிலையில் இருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மழை ேவண்டி வழிபாடு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து புரவி எடுப்பு நிகழ்வு தொடங்கியது. ஆண்கள் புரவிகளை தோளில் சுமந்தும், பெண்கள் பொம்மைகளை தலையில் சுமந்தும் விளாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தொடங்கிய புரவி எடுப்பு ஊர்வலம் மானாமதுரை நகரின் வீதிகளில் வலம் வந்து அதன் பின்னர் விளாக்குளம் கிராமத்திற்கு சென்றடைந்தது.

    அங்குள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும், அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×